#saveIOB #StopPrivatization
சற்றே பெரிய இழை.
எனது முதல் முயற்சியும் கூட. பொறுமையாக படித்து விட்டு தங்கள் ஆதரவை ( கொட்டாக இருந்தாலும்) நல்கவும்.
சென்ரல் வங்கியையும், இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியையும் தனியார் மயமாக்குவதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வருகின்றன 1/n
அதாங்க சரி. தனியார்மயம்தான் எல்லாவற்றிற்கும் தீர்வு என்னும் முடிவுக்கு வருமுன் சில கருத்துக்களை முன் வைக்கலாம் என நினைக்கிறேன். இ.ஓ.வ தனியார்மயமாகும் போது அதில் பணிபுரியும் 26000+ பணியாளர்களுக்கு ( நான் உட்பட) ஏற்படப்போகும் சிரமங்களை விட, 2/n
நடுத்தர மற்றும் விளிம்பு நிலை ஏழை மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் அதிகம். அவை பொதுவெளியில் பேசப்படுவதும் குறைவு என்பதாலேயே இப்பதிவு. இ.ஓ.வ தமிழ்நாட்டின் புக்ழ்பெற்ற செட்டியார் குடும்பத்தின் m.ct.m.சிதம்பரம் செட்டியாரால் 1937ம் ஆண்டு தொடங்கப்பட்டு 3/n
84 வருடங்களை கடந்து இயங்கிகொண்டிருக்கிறது. தொடங்கப்பட்டதன் நோக்கம் வெளி நாட்டில் இயங்கி வந்த தனது சமூகத்தை சேர்ந்த வர்களுக்கு வங்கி சேவை அளிப்பது. அதனால்தான் வங்கி ஆரம்பிக்கும் போதே காரைக்குடி மற்றும் சென்னை தவிர்த்து ரங்கூனிலும் கிளை தொடங்கப்பட்டது.4/n
1969 ல் இந்திராகாந்தியால் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது இ.ஓ.வ யும் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. தற்போது 3000+ கிளைகளுடன் வங்கி இயங்கி வருகிறது. அதிலும் 1000 + கிளைகள் தமிழ் நாட்டில் உள்ளது. இவற்றிலும் unbanked area என சொல்லப்படும்5/n
வேறு வங்கிகள் இல்லாமல் இ.ஓ.வ மட்டும் செயல்படும் கிராமங்கள் அதிகம். ஒருவேளை தனியார் கைக்கு செல்லும் பட்சத்தில் நட்டத்தில் இயங்கும் கிராம கிளைகள் மூடப்படும் அல்லது பக்கத்து நகரத்திற்கு மாற்றப் படும். Min balance எனப்படும் குறைந்த பட்ச இருப்பு தொகை அதிகரிக்க6/n
படும். 100 நாள் பணம் எடுப்பவர்களுக்கும் மாதாந்திர முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவி தொகை பெறுவோருக்கும் அதை பராமரிப்பது இயலாத காரியம். இ.ஓ.வ 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாவட்ட முன்னோடி வங்கியாக செயல்படுகிறது. தவிர தமிழக அரசுக்கும் மாநில வங்கியாக 7/n
செயல்பட்டு தமிழக அரசின் சமூக நல திட்டங்களை செயல்படுத்த உதவி புரிகிறது. உதாரணமாக Thadco எனும் ஆதி திராவிடர்களுக்கான கடனுதவி, மாவட்ட தொழில் முனைவோர் மையம் மூலமான இளைஞர்களுக்கான கடனுதவியை குறிப்பிடலாம். ஏன் கல்விக்கடனே பெருமளவில் வழங்கியது 8/n
இ.ஓ.வ தான். தனியார்மயமாகும் பட்சத்தில் சொத்து பிணை உள்ள கடன் களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். கடன் வசூலிப்பிலும் கருணையற்ற கறார் முறையை தான் நாம் பார்த்திருக்கிறோம். அதுமட்டுமல்ல திவாலகவிருந்த 6 க்கும் மேற்பட்ட வங்கிகளை 1969 க்கு முன்னும் 9/n
தேசியமயமாக்கப்பட்ட பின் பாரத் வங்கி, பேங்க் ஆப் தமிழ்நாடு, போன்ற வங்கிகளையும் தன்னுடன் இணைத்து கொண்டு அதன் முதலீட்டாளர்களையும் வாடிக்கையாளர் களையும் காப்பாற்றியது. கடந்த 6 வருடங்களாக வாராக்கடன் சிக்கலில் நட்டத்தை சந்தித்த வங்கி இவ்வருடந்தான் மீண்டது 10/n
வங்கியின் தற்போதைய மொத்த கடன் மதிப்பு 1.39 லட்சம் கோடி, மொத்த வைப்பு நிதி 2.4 லட்சம் கோடி. வாராக்கடன் அளவு 3.58 சதவீதம். PCR 90 சதவீதம். அதாவது வாராக்கடனுக்காக 90 சதவீதம் லாபம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. வங்கியின் முன்னாள் MD " we are sitting on a gold 11/n
mine " என்று குறிப்பிட்டார். ஏனெனில் கடந்த ஆறு வருடமாக வங்கியின் லாபத்திலிருந்து இந்த வாராக்கடனுக்காக 90 சதவீதம் ஒதுக்கியாகிவிட்டது. இனி வங்கி லாபப் பாதைக்கு திரும்பி விடும் என்று பொருள். அதை தான் தற்போது தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி நடக்கிறது. 12/n
இப்போது இ.ஓ.வ தனியார் மயமாக்கிய பின் ஒவ்வொன்றாக அனைத்து வங்கிகளும் தனியார் மயமாக்கப்படும். எந்த நோக்கத்துக்காக இந்திரா அம்மையார் வங்கிகளை தேசிய மயமாக்கினாரோ அது நீர்த்து போகும். மீண்டும் வங்கிகள் பெரு முதலாளிகளை நோக்கி சேவை செய்யும்.13/n
முக்கியமாக இ.ஓ.வ தனியார் மயமாதலால் தமிழ்நாடும் நம் மக்களும் இழப்பவை அதிகமாக இருக்கும். எனவே # saveIOB 14/n
வங்கியை காப்பாற்ற தங்கள் கவனத்திற்காக @mkstalin @CMOTamilnadu @ptrmadurai @Udhaystalin @KanimozhiDMK @DrSenthil_MDRD @PChidambaram_IN @KartiPC @RahulGandhi @Dayanidhi_Maran @SuVe4Madurai @thirumaofficial @cpimspeak

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பாலகன்

பாலகன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(