#Censor 2021... சென்சார் தணிக்கை குழவில் பணிபுரிகிற படத்தின் கதாநாயகி அங்க வருகிற மோசமான வயலன்ஸ் நிரம்பிய திரைப்படங்கள் ஓட காட்சிய கட் பண்ணி முறையா சென்சர்ஷிப் கொடுத்து வெளியே அனுப்புவது தான் இவங்க வேல .... இந்தப் புனிதமான வேலைய பாத்துட்டு இருக்குற இவங்களுக்கு ஒரு பிரச்சனை வருது
அந்தப் பிரச்சனை என்ன கடைசில அந்த பிரச்சனையை சரி பண்ணாங்களா இல்லையா என்பதை ஹாரர் கலந்த பாணியில் சொல்றதுதான் இந்த படம் ... 80'sல சில video nasties movie அப்படிங்கிற வகைய சேர்ந்த சில வயலேன்ஸ் நிரம்பிய படங்கள் tapeல ரெக்கார்ட் பண்ணி ரிலீஸ் பண்ணுவாங்க
அப்படியாப்பட்ட video nasties வகையில சேர்ந்த எல்லா படங்களும் வயலேன்ஸ் மிக அதிகமாக இருக்கும் அதனால அத கனத்த இதயத்தோடு ஒழுங்கா பார்த்து மக்களை போய் சேர்வதற்கு முன்னாடி முறையா சென்சர்ஷிப் வழங்குவது தான் இவங்களோட வேலை
இந்த வேலை மூலமா இவங்களுக்கு வர ஒரு பிரச்சனையை ரொம்ப அழகா படமாக்கி ஒரு த்ரில்லிங் கலந்த அனுபவமா கொடுத்திருக்காங்க லாஸ்ட்ல ஒரு டுவிஸ்ட் ஓட முடிச்சுருப்பாங்க 🔥💥 .... படத்துல ட்ரீம், ஃபேண்டசி & ரியாலிட்டின்னு எல்லாத்தையும் கலந்து அடிச்சிருக்காங்க
கதாநாயகி ஓட ஆக்டிங் பிரமாதம் .... படம் 84 minutes தான் சீக்கிரமா முடிஞ்சிடும் கண்டிப்பா டைம் போறதே தெரியாது .... "Can't edit reality" அப்டின்னு Different conceptல இந்த மாதிரி எல்லாம் கதை இருக்கா ?? அப்படின்னு யோசிக்க வைக்கிற மாதிரியான கதை .... பாருங்க செம்ம movie 🔥❤️⚡
#Oruthee எதார்த்தமான ஒரு உண்மை கலந்த கதையை எப்படி பரபரப்பான திரைக்கதையில் கொடுக்க வேண்டும் என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் 🔥 அனைவரிடமிருந்தும் நேர்த்தியான நடிப்பு. முக்கியமாக கதாநாயகியின் நடிப்பு மற்றும் போலீசின் நடிப்பு துல்லியம் எதார்த்தம் என எல்லாம் கலந்த கலவை.
முக்கியமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இதில் நேர்மையான ஒரு போலீசாக வரும் முக்கிய கதாபாத்திரத்தின் நிறம் மிகவும் கருப்பு. அவருக்கு கீழ் வேலை செய்யும் போலீஸின் நிறம் வெள்ளை, மற்றும் அவரது மனைவியின் நிறம் வெள்ளை. இதிலிருந்த இயக்குனரின் சித்தாந்தம் வரவேற்கத்தக்கது♥️👌🏻
அவரின் நிறுத்தினாலும் மற்றும் முகத்தோற்றத்தினாலும் அவரை நாம் நிறைய படங்களில் வில்லனாகவும், ரவுடியாகவும் தான் பார்த்திருப்போம். ஆனால் அவரை ஒரு நேர்மையான போலீஸ் கதாபாத்திரத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்ற இயக்குனரின் அந்த எண்ணத்திற்கு மனம் கனிந்த பாராட்டுகள் 🥰👏🏻
இந்த படம் ஒரு ஃபேண்டஸின்னு சொன்ன எத்தணை பேர் நம்புவிங்க தேர்ல.... இவர் எதுக்கு படத்துல வர்றரு படத்துல இவருக்கும் என்ன சம்மந்தம் .... அது எல்லாத்துக்கும் என்னோட வியூ நான் இந்த thread la சொல்றன்
Note :- என்னோட view மட்டுமே so எத்துக்கும் படி இருந்த எத்துகொங்க 👍🏻
இந்த மாறி டவுட் யாராவது கேட்பாங்க அதுக்கு நம்ம பதில் சொல்லலாம் தான் நான் இவ்ளோ நாள் வெயிட் பணிட்டு இருந்தேன்..... அதே மாறி வந்துருச்சு
சரி மேட்டர்க்கு வருவோம்.... படத்துல vjs ஒரு மன நல பாதிக்க பட்ட மனுஷன். அவர் அந்த பெரியவர்க்கு பையன்.
அந்த தாத்தா ஒரு மிகப்பெரிய முருக பக்தர் அதே மாறி பையனும் முருக பக்தன். அந்த தாத்தா ஒரு நாள் செத்துப்போன மயில அவர் நிலத்துல புதைகிரார். அதற்கு பிறகு அவருக்கு மனசு கேட்கவே இல்ல இத பையன் கிட்டயும் அழுதுட்டு சொல்றார். பையனும் ஆறுதல் சொல்றான். மறுநாள் இந்த குற்றத்திற்காக
#Sara's பிரைம்ல இன்னிக்கு rls ஆன நியூ மூவி ....என் செல்லம் anna ben 😍😍 காகா தான் படம் நைட் eh கண் முளிச்சு படம் full ah பாத்துட்டேன் 😉❤️ சரி படத்தோட கதைக்கு போவோம் இயக்குனர் ah சினிமால சாதிக்கணும்னு முனைப்போடு இருக்கிற படத்தின் கதாநாயகி sara (anna ben)
அதற்கு நடுவில் வரும் சில பல தடங்கல்கள் இறுதியில் அவள் லட்சியத்தை அவள் அடைந்தாரா இல்லையா என்பதே கதை .... ஒரு சூப்பரான ஃபேமிலி சென்டிமென்ட் மூவி காமெடி லவ் எல்லாமே கலந்து ஒரு நல்ல பீல் குட் material ❤️ படத்தில் இது மட்டுமில்லாமல் மற்றுமொரு விஷயத்தையும் நடுவுல சொல்லியிருக்காங்க
அது என்னன்னா ஒரு வாரிசு ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் ஒரு வாரிசுனால் குடும்பத்திற்கு ஏற்படும் சில பல சிக்கல்கள் இரண்டையும் நேர்த்தியாகவும் கலைநயத்தோடு சொல்லியிருக்காங்க கிளைமாக்ஸ் ஒரு ஒன் மினிட் சீன் சரியா யோசிச்சி director வச்சிருக்காரு 😂👌❤️
#ShivajiSurathkal இந்த படத்த கடந்த 5 மாசமா பாக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ரெண்டு நாள் முன்னாடி தான் ottல ரிலீஸ் ஆச்சு சரினு பாத்தேன்... படத்தோட முதல்லிய போன் use பண்ணாதீங்க படம் புரியாது படத்தோட கிளைமாக்ஸ் வெளிய சொல்லிடாதீங்கன்னு ஒரு disclaimer card 🔥😍 கிழ வாங்க👇
அந்த disclaimerக்கு படம் வொர்த் ah ?? கண்டிப்பா வொர்த்னு தான் சொல்வேன் ஒரு மர்டர் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படத்தோட ஹீரோ detective அவர் துப்பரியும் case தான் முழு படம். அவரோட ஆக்டிங்👌 சூப்பர் படத்தோட detailing works awesome எந்த விஷயமும் சும்மா இருக்காது ஒரு அர்த்தம் இருக்கும்.
இந்த படத்துல ஹீரோ ஓட ஸ்டைல் எல்லாம் பாக்குறதுக்கு நம்ம சூப்பர்ஸ்டார் மாதிரியே இருந்துச்சு இந்த படம் ரீமேக் ல சூப்பர்ஸ்டார் நடிச்ச மாஸா இருக்கும் இது என்னோட தனிப்பட்ட விருப்பம் நீங்க படம் பாத்துட்டு உங்க விருபத்த சொல்லுங்க. #APKreview
அந்த நாள் (1954) தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்றும் சொல்லலாம் இன்று பல த்ரில்லர் படங்களை கண்டு விட்டது நம் தமிழ் சினிமா அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது இந்த படம்தான் ஆம் தமிழில் வந்த முதல் திரில்லர் படம் & பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் இல்லாமல் வெளிவந்த முதல்தமிழ்படம்
படத்தின் கதை... ஒரு இன்ஜினீயர் கொல்லப்படுகிறார் அந்த கொலையை அரங்கேற்றியது யார் எதனால் கொலை நடந்தது என்று விசாரிக்க....குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தர் மேல் கையை காட்ட.... உண்மையில் கொலைகாரர் யார் தான என்று ஆராய்ந்து அறிந்து கடைசியில் ஒரு தீர்ப்பு கொடுப்பதே இந்த படம்.
இத்திரைப்படம் ஒரு cult கிளாசிக் சினிமா வகையில் சேரும் cult cinima என்றால் என்ன ??? ஒரு திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி படமாக இருந்தாலும் சரி வெற்றி படமாக இருந்தாலும் சரி அது எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்களால் கொண்டாடப்படும் அதைதான் cult சினிமா என்பர் சினிமா சான்றோர்....