ஒரு படத்தால் ஒரு நாட்டோட சட்டத்தை மாத்த முடியுமா? முடியும் அதான் இந்த படம். தென் கொரியால நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் தான் அந்த சம்பவத்தை நிகழ்த்தி இருக்கு.
1961ல் தொடங்கப்பட்ட இந்த #Gwangju_Inhwa_School ல் காது,வாய் பேசாத குழந்தைகள் படிக்கிற பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கு. 2000 லிருந்து 2005 வரை இந்த பள்ளியில் படித்த குழந்தைகள் 9 பேர் அங்கு இருந்த principal and teachers னால sexual, physical ஹாரஸ்மெண்ட் பண்ணப்பட்டு இருக்காங்க
இதை அப்போ அந்த பள்ளிக்கு புதுசா வேலைக்கு வந்த வாத்தியார் ஹியூமன் ரைட்ஸ்க்கு கொண்டு போயும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படல அதுக்கு அப்புறம் அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இதை பத்தி டிவில சொன்னதும் இந்த கேஸ் மேல நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கு ஆனாலும் குற்றவாளிகளுக்கு
குறைந்தபட்ச தண்டனையும், அதில ரெண்டு பேருக்கு விடுதலையும் கொடுத்து கோர்ட் தீர்ப்பு சொல்லி இருக்கு இதெல்லாம் 2005ல நடந்தது. இதை பத்தின புத்தகம் #Gong_Ji_young என்ற பெண்மணி 2009ல எழுதி வெளியிடுறாங்க அப்போ எல்லாம் யாரும் இதை பத்தி பெருசா எடுத்தக்கவே இல்லை. en.m.wikipedia.org/wiki/The_Cruci…
2011 செப்டம்பர்ல தான் இந்த படம் வெளியிடப்படுகிறது இதை பார்த்த கொரியன் மக்கள் கொதித்து எழுறாங்க. கிட்டத்தட்ட கொரியன் மக்கள் தொகையில் 10ல ஒருத்தர் இந்த படத்தை பார்த்து இருப்பாங்கனு புள்ளிவிவரங்கள் சொல்லுது. மக்கள் எல்லாம் தெருவுக்கு வந்து போராட்டம் பண்ணுறாங்க.
இதனால் மறுபடியும் அந்த கேஸ் விசாரணைக்கு எடுக்கப்படுது. கொரியன் பார்லிமென்ட்ல இந்த படத்தோட பேரில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. 13 வயசுக்கு குறைந்த குழந்தைகளுக்கு செக்ஸ்வல் ஹாரஸ்மெண்ட் கொடுப்போர்க்கு ஆயுள் தண்டனைனு சட்டம் வருது. அந்த பள்ளி நவம்பர் 2011 நிரந்தரமாக மூடப்படுது.
இந்த பள்ளி வழக்கு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுது.
படத்தை பத்தி சொல்லனும்னா உண்மைக்கு நெருக்கமாவே எடுத்து இருக்காங்க எந்த இடமும் அதை மீறி எடுக்கப்படல. கோர்ட்ல அந்த குழந்தைகள் விசாரிக்கப்படும்போது நமக்கே அழுகை வரும் மத்தபடி ஒரு சிறந்த படைப்பு.
இப்போ இந்த படத்தை பத்தி எழுத காரணம் நம்ம தமிழ்நாட்டில் நடக்குற விஷயங்கள் தான். இதெல்லாம் நடக்காமல் தடுக்கனும்னா அதுக்கு மிக கடுமையான சட்டம் வேணும். இது போல் நடக்கும் பள்ளிகள் நிரந்தரமாக மூடப்பட வேணும் அதுக்கான சட்டம் வரனும் இது போல ஈடுபடும் நபர்களுக்கு மிக அதிகபட்ச தண்டனை தரனும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஐயா @Anbil_Mahesh அவர்கள் அதற்க்கான நடவடிக்கை எடுப்பார்னு நம்புறேன். இதை மிக சீக்கிரமா செய்யனும் பள்ளியில் பாதிக்கப்படும் குழந்தைகள் மனநிலை அவிங்களோட காலத்துக்கும் மாறாத வாடுவாய் மாறிவிடும் அதனால இதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுங்க ஐயா.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh