Morden construction முறைகளில் வழுவூட்டும் முறையையே இவ்வாறு குறிப்பிடுகிறோம் சரி அதென்னா coupler? இது இன்றைய கட்டிடதொழில் நூட்பத்தில் இது பெரும் பங்கு வகிக்கிறது அதி உயரமான புருஜ்கலீபால இருந்து மொட்ரோ ட்ரைன், bridges எல்லாம் இந்த couplerலதான் நிற்குது
எதற்கு இந்த coupler? Over lap avoid செய்வதற்காகவும் easy handling precast segments மூலம் மிக விரைவில் கட்டுவதற்காகாவும் இந்த coupler பயன்படுகிறது 12- 50mm வரை இப்ப பயன்பாட்டில் இருக்கு இரெண்டு கம்பியை 1meter விட்டு ஓவர்லேப் அடிக்கனும் அதன் waste and weight எங்கையோ போய் நிற்கும்
ஒருகாலத்தில 20மீ பாலம் கட்ட 2வருஷம் எடுத்துப்காங்க ஆனால் இன்று 2km பாலம் 2வருடம்தான் அதற்கு முக்கியமான காரணம் precast அந்த segments இணைபதற்கு பெரும் பங்கு இந்த couplerதான் பயன்படுது உயரமான உயரமான கட்டித்திற்கு வரும் pile முழுவதும் இந்த coupler ஆல் ஆனதுதான்
எப்படி இணைப்பது இந்த couplerயை ஒரு side full thread ஒரு side half thread full thread போட்ட sideக்கு மேல half thread வைத்து coupler சுத்தினால் இரெண்டிலும் half threadல புடித்துக்கொள்ளும் இது forging method என்பதால் லெவல் கரக்ட்டாக இருக்கும்
இது உண்மையாவே பலம் தானா? இதை உறுதிபடுத்த tensil test & slip test செய்றோம் tensil test bar broke ஆகனும் coupler broke ஆக கூடாது slip testவும் அதே தான் bar break or required range (600mpa) வந்தபிறகு slip ஆகனும்
Concepts எல்லாமே ஒன்னுதான் ஆனால் தேவைக்கு தகுந்த மாதிரி தேர்வு செய்ய வேண்டும்..
Civil reinforcement department பெரும் பங்கு வகிக்க ஆரம்பித்திருக்கிறது.
சின்ன கட்டிங்களுக்கு cost and availability எல்லாம் பார்த்தால் கொஞ்சம் கஷ்டம்தான் ஆனால் பெரிய மால் போன்ற கட்டிங்களுக்கு இது செமையா workout ஆகும் @Karthicktamil86
ஏரியா நட்பு வட்டாரம் எல்லாத்துக்கும் இருந்துருக்கும் அதை அட்டி, மந்தை, gulli இப்படி ஏதாவது ஒரு பெயரும் இருக்கும் அப்படி ஓர் பெயர்தான் இந்த “சங்கம்” இங்க வயது வித்தியாசம் இல்லாத நட்பு இருக்கும் பள்ளி,காலேஜ்ல ஒரே வயதுடைய பசங்கதான் நண்பர்கள்
ஆனால் இங்கமட்டும் எல்லா வயசுலேயும் இருப்பாங்க பெருசு பொடுசுன்னு எல்லாம் இருக்கும் அப்படியான ஒரு இடம்தான் இந்த சங்கம்ங்கற அட்டி.. கையில நையா பைசா இல்லாத காலம், நேரம் நிறைய இருக்க காலம், எப்ப போனாலும் எவனாவது இருப்பான் போயி குத்த வெச்சு உட்காந்து பேச ஆரம்பிச்ச முடிக்கறப்ப
டைம் போனதே தெரியாது மொத்த ஏரியா பசங்களும் ஒவ்வெருத்தனும் வந்து சேர்ந்துப்பானுக .. சரி அப்படி என்னட பேசினீங்க? இங்கென்னா உலக பிரச்சனையை பேசி தீர்திடவா போறோம் ஒன்னும் இல்லை ஒருத்தனை காலய்க்க ஆரம்பிச்சு வரவன் போறவன்னு வம்பு இழுத்து கலகலப்போட இருக்கும் நேரம் போறதும் தெரியாது
*சவூதியில் காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள் அல்லது ஹூரூப்(Runaway),மத்லூப்(police case),இதர கஃபீல்(Sponsor) பிரச்சினை, சம்பளம் பாக்கி, EOSB பாக்கி, Harassment.etc., போன்ற ஏதாவது பிரச்சினையில் தமிழர்கள் சிக்கி தவிக்கின்றார்களா?*
_தாயகம் செல்ல வேண்டுமா?_
கீழுள்ள MADAD/இந்திய எம்பாஸி / தமிழக அரசு தொடர்பு ஈமெயிலில் உங்கள் கோரிக்கையை ஆங்கிலத்தில் கடித வடிவில் தெரிவிக்கவும்... உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கின்றனர்...
கோரிக்கைகள்/புகார்களைப் பதிவு செய்ய தேவையான முக்கியமான தகவல்கள் / ஆவணங்கள்: *பாஸ்போர்ட் / இகாமா நகல்,
விசா பக்க நகல் மற்றும் ஸ்பான்சரின் பெயர், உங்கள் முகவரி மற்றும் மொபைல் எண்.*
*புகாரை கீழுள்ள MADAD portalஇல் தெரிவிக்கவும்👇
இந்திய தூதரக சமூக நலன்(Community Welfare) பிரிவு :
சமூக நல பிரச்சினைகள் தொடர்பான குறைகளை ஆன்லைனில் பதிவு செய்தல்:
👇
கோடை விடுமுறையில் ஓய்யாரமாய் 9மணிக்கு எழுந்து கயிறு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தான் பார்த்திபன்.. ஒரு கையில் அலைபேசி ஒரு கையில் கடுங்காப்பி டம்ளரோட ஒரு சிப் காபி பல்தெரியாத புன்னகையோட மற்றொரு கை விரல்கள் மொபைலில் அதகளம் செய்து கொண்டு இருந்தது..
மாட்டை புடிச்சு கட்டிட்டு கறந்தபாலை சொசைட்டியில ஊத்திட்டு வந்தால் சாந்தா.. பார்த்தி.. கொஞ்சம் ரேசன் கடைக்கு போயிட்டு வாயேன் அம்மாக்கு கால் நோவுதுடா..
ம்மோ அதெல்லாம் முடியாது நீ போ
வூட்டுல சும்மா உட்காந்து போனை தானே நோண்டுற அதுக்கு அங்காச்சும் போயி வாங்கிட்டு வரலாம் இல்லை
ம்மோ நீயே போமா.. ரேசன் கடையில நின்ன என் பிரஸ்டேஜ் என்ன ஆவதுன்னு சொல்லி முடிக்கலை..
நொட்டுச்சு பிரஜ்டேஜ் வாயக்கட்டி வவுத்த்தை கட்டி படிக்க வெச்ச துரைக்கு கவுரம் வந்துடுச்சு சட்டு புட்டுன்னு எந்துருச்சு போறீயா இல்லையா?
ம்மோ மேட்ச் இருக்கு போகனும் நீ போம்மா அங்க கூட்டமா இருக்கும்
நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு காதல் கதை.. இல்லை இல்லை ஒரு கான்வர்சேசன் நல்ல இருந்த என்ஜய் இல்லைனா 🏃♂️🏃♂️🏃♂️
“தேவதையோடு”
ஹலோ !!
ஹலோ!!!
எங்க இருக்க?
வீட்டுல ஆமா நீங்க?
ஹேய் பிசாசு நான்தான்
எப்பட வந்தே நல்ல இருக்கையா?
ஹீம் பைன் .. லாஸ்ட்வீக் வந்தேன்..
என்ன சார் திடீர்ன்னு போன்னெல்லாம் செய்றீங்க ? எங்க ஞாபகமெல்லாம் இருக்கா..
சின்ன புன்னகையோடு சும்மதான் உன் ஏரியலதான் சின்ன வேலை வந்தேன் அதான்..
ஓஹோ ..
Freeயா இருக்கையா மீட் பண்ணலாம?
இல்லை பிஸி
ஓ அப்ப ஒகே சரி தம்பி என்ன செய்றான் அப்பா? அம்மா?
எல்லோரும் நலம்
ம்ம்ம்
அப்புறம்?
சும்மாதான் சரி பாய் கால் யூ லேட்டர்.
வண்டி முன்னோக்கி ஏதே நினைத்துக்கொண்டே நகர்ந்தது அடுத்த போன் ரிங் அலற..
பள்ளிக்கூடம் போறதே ஒரு விதமான உணர்வு அதுல கொஞ்சம் பயம் கொஞ்சம் காதல் கொஞ்சம் பொறுப்பு கொஞ்சம் பரவசம் இப்படி எல்லாம் கலந்த ஓர் உணர்வு இந்த உணர்வு எப்பவுமே மாறிட்டே இருக்கும் டெஸ்ட்டுனா ஒரு மதரி அவள பார்க்க போகிறோம்னா ஒரு மதிரி கேம்ஸ்னா வேற மதிரி இருக்கும்
இப்படி மாறுபட்ட உணர்வோடு வீட்டுல இருந்து பள்ளிகூடம் போற வரைக்கும் இருக்க பயணம் ரெம்பவும் அழகானது என் பயணத்தை பகிர முற்படுகிறேன்..
காலையில 6மணி அம்மா வந்து அப்பா எழுந்துருடான்னு முதல் குரல் அடுத்த சில நிமிடத்தில் அந்த குரல் டேய் எழுந்துரு அடுத்த சில நிமிடத்தில் ..
தண்ணியை எடுத்து ஊத்துறேன் இருடான்னு சொல்லும் போது வேண்டா வெறுப்பாய் கண்கள் விரியும் சூரியன் வேற இவன் எப்ப முழிப்பான்னு காத்திருந்து பொழுச்சுனு கண்ணுல அடிக்கும் அப்படியே எழுந்து ரெடியாக கிட்டதட்ட 7.20 ஆகிடும் 7:25க்கு பஸ் அதை விட்ட ஸ்கூல் அம்போதான்..