IMDb 5.1/10
ஒரு சபிக்கப்பட்ட கொடூர ஆத்மாவின் வீடியோ.. அந்த வீடியோ யார் பார்த்தாலும் இரண்டு நாட்களில் இறந்து விடுவார்கள்.. அந்த வீடியோவை தோழிகளாக இருக்கும் இரண்டு பெண்கள்
பார்க்கிறார்கள்.. அந்த வீடியோவில் இருக்கும் ஆத்மா பெயர் சடாகோ.. மற்றொரு புறம் ஒரு பெண் தன் தாய் தந்தையோடு புதியதாக ஒரு வீட்டில் குடிபெயர்கிறார்கள்.. அருகில் ஒரு பாலடைந்த வீடு ஒன்றுள்ளது..அந்த வீட்டில் ஒரு பேய் உள்ளது..ஒருநாள் இந்த பெண் பள்ளிக்கு செல்கையில் அந்த வீட்டின் முன்புறம்
நான்கு பள்ளி சிறுவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.. அவர்களை இந்த பெண்ணும் பார்த்து பேசிவிட்டு செல்கிறாள்..பிறகு விளையாட்டாக அந்த நான்கு சிறுவர்களும் அந்த பாலடைந்த வீட்டினுள் சென்று பேயிடம் அகப்பட்டு இறந்து விடுகிறார்கள்.. அடுத்த நாள் அனைவரும் அந்த நான்கு சிறுவர்களும் தொலைந்தது
பற்றி பேசுகிறார்கள்.. அப்போது அந்தப் பெண்ணிற்கு ஒருவேளை அந்த வீட்டினுள் சென்று பேயிடம் மாட்டிக்கொண்டு இறந்திருப்பார்களோ என்று சந்தேகம் எழுகிறது.. பிறகு இரவு நேரத்தில் அந்த வீட்டினுள் செல்கிறாள்.. அவள் அதிலிருந்து தப்பிக்கின்றாளா..? (அந்த வீட்டில் இருக்கும் ஆத்மா பெயர் கயாகோ)
ஏற்கனவே சொன்னது போல சடோகோ ஆத்மாவின் வீடியோ பார்த்த இரண்டு பெண்களும் தப்பித்தார்களா..? சடோகோ மற்றும் கயாகோ இரண்டு ஆத்மாக்களுக்கும் என்ன தொடர்பு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. நல்ல திகில் படம்தான்.இரவு நேரத்தில் பார்த்தால் இன்னும் த்ரில்லராக இருக்கும்.. நிறைய பேய் படம்
பார்த்தவர்களுக்கு இந்த படம் பார்க்கும் போது அவ்வளவு பயம் த்ரில்லராக இருக்காது... பார்க்காதவர்கள் பாருங்கள்... நல்ல படம்... ஆபாச காட்சிகளும் இல்லை...
இந்த படம் எவ்வளவு நபர்கள் பார்த்திரூப்பீர்கள் என்று தெரியவில்லை.. ஆனால் சமீபத்தில் நான் பார்த்த ஒரு தரமான படம் என்றால் அதற்கும் மேல் என்றே சொல்லலாம்..
இவ்வளவு நாள் இந்த படம் பார்க்கலாம் தவறவிட்டோமே என்றும் தோன்றியது.. படத்தின் Cinematography, Background Music, Sound Recording,VFX அனைத்திலும் தரம் குறையாத தரம்🔥 முக்கியமாக இந்த படத்தில் ஓரிரு இடத்தை தவிர லைட்டிங் பயன் படுத்தாமல் எடுக்கப்பட்டுள்ளது.. லைட்டிங் பயன் படுத்தி உள்ள
இடத்திலும் பயன்படுத்தியவாறு தெரியாது.. படப்பிடிப்பு தளங்களும் கண்ணை குளிர வைக்கிறது.. அவ்வளவு அருமையான இடங்கள்.. அவ்வளவு அருமையாக இருந்தாலும் அதன் விளைவுகளும் மோசாமானவை என்ற நேர்த்தியாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் படத்தின் கதாநாயகன் @LeoDiCaprio என்ன மனுசன்யா என்ற