The Kodanadu affair is now heating up again. Opposition leader Palanisamy's name has been added to the list of culprits. This thread is for people to know what happened.
நீலகிரி, கோத்தகிரி அமைந்துள்ளது ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்.
900 ஏக்கர் எஸ்டேட்டின் நடுவில் அமைந்திருக்கிறது கொடநாடு பங்களா. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பீட்டர் கிரேக் ஜோன்ஸ் என்பவருக்குச் சொந்தமான இந்த எஸ்டேட்டை, 1991ல் ஜெயலலிதா சசிகலா கும்பல் மிரட்டி எழுதி வாங்கியது.
அப்பல்லோ நாட்களுக்குப் பிறகு, 2016 டிசம்பர் 5ல் ஜெயலலிதா இறந்தார். ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதலமைச்சர் ஆனார். டிசம்பர் 31ல் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனதும் ஓபிஎஸ்ஸின் முதல்வர் பதவியைப் பறிக்கத் திட்டமிட்டார்.
2017 பிப்ரவரி 7ஆம் தேதி மாலை ஜெயலலிதா சமாதி முன் அமர்ந்துகொண்டு, ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆசியுடன் தர்மயுத்த நாடகத்தை அரங்கேற்றினார் ஓபிஎஸ்.
முடிவில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் கிடைத்தது. பிப்ரவரி 15ஆம் நாள் சிறைக்குச் செல்லும்முன்பு சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக (அம்மா) அணியாகவும், ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக (புரட்சித்தலைவி) அணியாகவும் உடைந்திருந்த அதிமுகவை ரெய்டுகளால் பணியவைத்த பாஜக, 21 ஆகஸ்ட் 2017 அன்று இரண்டு அணிகளையும் இணைக்கச்செய்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் நிகழ்ந்ததுதான் #கொடநாடு கொலை விவகாரம்.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வேதா இல்லம், சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் ஆகிய சொத்துக்களுக்கு உளவுத்துறை, சிறப்புப் பாதுகாப்புப் படை என 640 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். ஜெ. மறைவுக்குப் பிறகு, அரசு காவலர்களைப் பயன்படுத்துவது சர்ச்சையானது.
2017 ஏப்ரல் 24ம் தேதி நள்ளிரவு இரண்டுமணிக்கு 11பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், கொடநாடு எஸ்டேட்டின் 10ம் எண் கேட் வழியாக நுழைந்தது. காவலுக்கு இருந்த காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்துவிட்டு, பங்களாவிலிருந்து சில முக்கிய ஆவணங்களைக் கொள்ளை அடித்துச் சென்றது.
இந்தக் கொள்ளை மற்றும் கொலைச் சம்பவம் குறித்து, நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா விசாரணையைத் துவங்குகிறார். கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மற்றொரு காவலாளியான கிஷன்பகதூரிடமும் விசாரணை நடைபெற்றது.
முதற்கட்ட விசாரணை முடிவில், 3000 சவரன் தங்கமும், வைர நகைகளும், ஜெயலலிதா அறையில் இருந்த மூன்று சூட்கேஸ்களும் காணாமல்போனதாக செய்திகள் வெளியானது. கூடுதலாக மூன்று சூட்கேஸ்களில் ஜெயலலிதாவின் சொத்துப் பத்திரங்களும், உயில்களும் கொள்ளைபோனதாக ஊகங்களும் வெளியாயின.
ஜூலை 06, 2017, சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ அன்பழகன், கொடநாடு கொள்ளை சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, ‘ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது. சிசிடிவி கேமிராக்கள் வேலை செய்யவில்லை. எந்த விலையுயர்ந்த பொருளும் கொள்ளை போகவில்லை” என்று பதில் அளித்தார் பழனிசாமி.
தனிப்படை கொடநாடு கொலை-கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்பட்ட 10பேரின் பெயர்களை வெளியிட்டது. அதில் முக்கியவான இருவர் போயஸ்கார்டன் கார் டிரைவர் கனகராஜ் & கனகராஜின் நண்பன் திருச்சூர் சயன்.
தேடுதல்வேட்டையில் கேரளாவின் பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஊர்களை சேர்ந்த மனோஜ், தீபு, சதிஷன், சந்தோஷ், உதயகுமார், உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட, போயஸ்கார்டன் கார் டிரைவர் கனகராஜ்; சயன் இருவரும் அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு இடங்களில் விபத்தில் சிக்குகிறார்கள்.
ஏப்ரல் 28 2017. சேலம் ஆத்தூரில், பைக்கில் சென்ற கனகராஜ் எதிரில் வந்த கார் மோதி இறக்கிறார். சயன் பாலக்காடு அருகில் குடும்பத்தோடு மற்றொரு விபத்தில் சிக்குகிறார். அதில் சயனின் மனைவி குழந்தை இருவரும் உயிரிழந்தனர். சயன் உயிரோடு கோவை மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
சயனின் கார்விபத்து நடந்த்து கேரள மாநில எல்லைக்குள் என்பதால் விபத்து வழக்கில் கேரள காவல்துறை அவரை விசாரிக்க முயன்றது. ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தவிர்க்க முடியாத நிலையில், விபத்து குறித்து ‘மட்டும்’ விசாரிக்க கேரள காவல்துறைக்கு அனுமதி கிடைத்தது.
2008 முதல் போயஸ் கார்டனில் கார் டிரைவராகப் பணியாற்றின சேலம் மாவட்டம் எடப்பாடி சமுத்திரம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கனகராஜ் குடும்பமும் பழனிசாமி குடும்பமும் பங்காளிகள் முறை. அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் மூலம் கனகராஜை போயஸ் கார்டனில் டிரைவராகச் சேர்ந்துள்ளார்.
கனகராஜின் விபத்து நடந்த்தாகச் சொல்லப்பட்ட இடம், தென்னங்குடி பாளையம் மலர் மெட்ரிக் பள்ளி அருகில். ஆனால், கனகராஜின் அண்ணன் அங்கு உடனடியாக சென்றபோது, அப்பகுதியில் விபத்து நடந்த அறிகுறியோ, கனகராஜ் ஓட்டிவந்த பைக், விபத்து ஏற்படுத்திய கார் எதுவும் இல்லை என்றார்.
“கொடநாடு கொள்ளையில் என் தம்பி சிக்க வைக்கப்பட்டிருக்கிறான். கொடநாடு கொள்ளை நடப்பதற்குமுன் தினமும் நான்கு மணி நேரத்திற்குமேல், எடப்பாடி ஊரில் இன்ஸ்பெக்டராக இருந்த சுரேஷ்குமாருடன் என் தம்பி போனில் பேசி இருக்கிறான்”-கனகராஜ் அண்ணன்.
“எடப்பாடி ஸ்டேஷனில் யார் இன்ஸ்பெக்டராக முடியும்? பழனிசாமிக்கு வேண்டப்பட்டவரைத் தவிர, இன்ஸ்பெக்டர் சுரேஸ்குமார் ஏன் என் தம்பியிடம் அடிக்கடி பேசவேண்டும். உண்மையில் என் தம்பி கனகராஜுக்கு நிகழ்ந்தது ஒரு விபத்து அல்ல; அது ஒரு என்கவுன்டர்” கனகராஜ் அண்ணன் தனபால்.
“2017 ஏப்ரல் 28ம் தேதி இரவு 8.45 மணிக்கு நம்பர் ப்ளேட் இல்லாத ஸ்ளெண்டர் பைக்கில் சேலம் நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் வந்துகொண்டிருந்த போது, எனது கார் கனகராஜ் பைக் மீது மோதியது, அதில் அவர் இறந்துவிட்டார்” ரபீக் என்பவரின் வாக்குமூலம்.
2017 ஜூலை 3ம் தேதி, கொடநாடு பங்களாவில் ஆறு ஆண்டுகளாகக் கம்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த கோத்தகிரியைச் சேர்ந்த தினேஷ்குமார் காரணமே தெரியாமல் தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.
கொடநாடு எஸ்டேட் சம்பந்தப்பட்ட அடிமட்டப் பணியாளர்கள் ஒவ்வொருவராக கொலை, விபத்து, தற்கொலை என்று இறந்ததும் ஜெயலலிதா ஆவி பலிவாங்குகிறது என்று கதை கட்டப்பட்டது. மற்றொருபுறம், எஸ்டேட்டில் தினமும் தேயிலை திருடப்படுவதாக காவல்துறை பாதுகாப்பு போட்டது பழனிசாமி அரசு.
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை எஸ்டேட் சம்பந்தப்பட்டவர்கள் உதவி இல்லாமல் நடந்திருக்காது என்பது காவல்துறையின் முடிவு. காரணம் கொள்ளை நடந்த அன்று சிசிடிவி இயங்கவில்லை. மின்சாரம் தடைபட்டிருக்கிறது. ஜெயலலிதா கைரேகையால் திறக்கக்கூடிய லாக்கர்களில் முன்கூட்டியே அவை நீக்கப்பட்டிருந்தன.
எஸ்டேட்டின் பர்னிஸிங் கான்ட்ராக்டர் சஜீவன், எஸ்டேட் மேனஜர் நடராஜன் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். சஜீவன் சசிகலா-தினகரன் உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர். 900 ஏக்கர் எஸ்டேட்டைச் சுற்றியுள்ள நிலங்களில் சில இவரது உறவினர்கள் பெயரில் பதியப்பட்டிருக்கிறது.
மேனேஜர் நடராஜனிடம் நடந்த விசாரணையில், ஏற்கெனவே கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சிகள் நடந்துள்ளதும் அவை வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டதும் அம்பலமானது. மேலும் கைதுசெய்யப்பட்ட எட்டுபேரில் மனோஜ் என்ற சாமியார் பங்களாவில் பூஜைகள் செய்பவர் என்பதும் தெரியவந்தது.
சிறையிலிருந்த மனோஜ் உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு மனு செய்தபோது, மனோஜ் சாமியாருக்கு ஹவாலா & கூலிப்படை தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மொத்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வாளையாரைச் சேர்ந்த மனோஜ் கொடநாடு பங்களாவில் பூஜை செய்பவர். அவருக்கும் டிரைவர் கனகராஜுக்கும் அறிமுகம் உண்டு. கனகராஜ் சஜீவன் இருவரும் மனோஜ் மூலம் மலையாளம் பேசும் கூலிப்படை ஏற்பாடு செய்துள்ளனர். இவர்களே கொலை கொள்ளைச் சம்பவங்களைச் செய்தவர்கள் என்பது போலீஸ் தரப்பு அறிக்கை.
டெல்லியிலிருந்து வெளிவரும் ‘தெஹல்கா’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ‘கொடநாடு விவகாரத்தை ஓர் ஆவணப் படமாக வெளியிட்டார். அதில், சயனும், கனகராஜ் குடும்பமும், மனோஜும் சில தகவல்களை தமிழிலும் மலையாளத்திலும் வெளியிட்டனர்.
“2000 கோடி மதிப்பிலான பணமும் நகையும் பங்களாவிற்குள் இருக்கிறது. அதோடு சேர்த்து அங்குள்ள ஆவணங்களையும் எடுத்துவரவேண்டும் என்பது எங்களுக்குச் சொல்லப்பட்ட திட்டம். அதற்கு எங்களைத் தயார்படுத்தியது பழனிசாமியின் உறவினரான கார் டிரைவர் கனகராஜ்.”
“எந்த நேரத்தில் பங்களாவுக்குள் நுழையவேண்டும். என்னென்ன பாதுகாப்புகள் உள்ளன, எந்தெந்த இடங்களில் ஆவணங்கள் இருக்கின்றன என்பது குறித்தெல்லாம் ஏற்கனவே கனகராஜுக்குத் தெரிந்திருந்தது. கனகராஜை பின்னால் இருந்து இயக்கியது எடப்பாடி பழனிச்சாமி”
மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்பட்த்தில் இவ்வாறு சயன் மற்றும் மனோஜ் பேட்டி கொடுத்த்தும் அவர்கள் மீது ‘அவதூறு பரப்பினர்’ என்று அதிமுக ஐடி விங் ராஜன்சத்யா வழக்கு தொடர்ந்தார். தமிழ்நாடு காவல்துறையை டெல்லிக்கு அனுப்பி இருவரையும் கைதுசெய்தார் பழனிசாமி.
அவதூறு வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று மனோஜ் சயன் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள். இருப்பினும் சயன் & மனோஜ் கொடநாடு சம்பவங்களில் சாட்சிகளைக் கலைக்கக்கூடும் என்று அவர்கள் ஜாமீனை ரத்துசெய்ய முயன்றார் பழனிசாமி.
மேலும், ஆவணப்படத்தை வெளியிட்ட தெஹல்கா ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் மீது பழனிசாமி தரப்பினரால் 110 கோடி மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டது. கொடநாடு கொலைகளை சிபிஐ தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் பாஜக ஆதரவால் தள்ளுபடி செய்யப்பட்டது.
கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றினால் போதாது, சசிகலா வசமிருக்கும் சொத்துக்களையும், ஆவணங்களையும் கைப்பற்றினாலே அதிமுகவின் நிஜமான அதிகாரத்தைத் தக்கவைக்க முடியும் என்கிற நிலையில் திட்டமிட்டு நடத்தப்பட்டதே இந்தக் கொள்ளை நாடகம்.
அதற்குத் தேவையான ஆவணங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டிய கைகளுக்குப் போய் சேர்ந்ததும், கொள்ளையில் ஈடுபட்டவர்கள், அதற்கு உதவியவர்கள் ஆகியோரைத் திட்டமிட்டுக் கொலை செய்வதும் நடந்தேறின. இதற்கெல்லாம் பின்னால் இருந்தவர்கள் இப்போது அதிகாரம் பறிபோன பயத்தில் அஞ்சி நடுங்குகிறார்கள்.
மடியில் கனமில்லை எனில் வழியில் பயமில்லை.

#கொடநாடு #கொலைகள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dravidian Voice ™

Dravidian Voice ™ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(