BSNL மற்றும் MTNL பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான 0.35 லட்சம் கோடி மதிப்புள்ள Fiber Optic Cable Network-க்குகளை ஒன்றிய அரசு, தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. மக்கள் பொதுப்பணத்தில் கட்டப்பட்ட BSNL நிறுவனத்திற்கு சொந்தமான 15,000 Tower-களும் இதில் அடங்கும் (1/6)
இந்த தொழில்நுட்பங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, இவை மக்களின் தனியுரிமைக்கு (Privacy) பெரிதளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை. Facebook, Google, Jio போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இவற்றை அடியோடு அழித்துக் கொண்டு இருப்பதை நாம் அறிவோம் (2/6)
இணையம், தொழில்நுட்பம் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அரசின் கடமை. அது தனியாரிடம் போகும்போது, அனைத்து மக்களுக்கும் இது எட்டாக் கனியாகவே அமையும். இடைவெளி பெரிதாகும் (Digital Divide). தனியார் நிறுவனங்கள் முற்றிலும் லாபநோக்கத்திலேயே இயங்கும் (3/6)
இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேலும் மக்களின் தனியுரிமை அழிக்கவும், அறிவுசார் இடைவெளியை பெருக்கவும், ஒடுக்கவும், சுரண்டவுமே அது பயன்படுத்தும் (4/6)
BSNL போன்ற அரசு நிறுவனங்களின் தரத்தை குறைவாக மாற்றியதிலும், சித்தரித்ததிலும் அரசு மற்றும் இந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உண்டு. இவை அனைத்தும் இந்த தனியார்மயத்திற்கான நீண்ட நாள் திட்டம் போலவே தோன்றுகிறது (5/6)
இதை மக்களிடம் கொண்டு சேர்த்து, பிரச்சாரம் செய்து, இந்த திட்டத்தை, மக்கள் சொத்துக்கள் திருட்டை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.