முதலில் இங்கு சில ஆண்கள் #JusticeForMenInTNPSC என சிலர் பேசுகின்றனர். முதலில் தரவுகள் பார்ப்போம். குரூப் 1 2019 மற்றும் கடைசியாக நடந்த குரூப் 2 தேர்வில் பெண்கள் அதிக அளவில் வேலைப்பெற்றனர்,அது மறுக்கமுடியாத உண்மை, ஆனால் department of employment and training ( 2017-2018 )தரவுகள்படி
8.8 லட்சம் அரசு வேளைகளில் - 6.0 லட்சம் அரசு வேலைகளை ஆண்களே பார்க்கின்றனர். ஆனால் பெண்களோ - 2.8 லட்சம் மட்டுமே அரசு வேலைகளை பெற்றுள்ளனர் ( இதில் பெண்கள் மட்டுமே உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பெண் ஆசிரியரும் அடங்கும் , சத்துணவு சமையல்காரர்களும் அடங்கும் ). இந்த பாலின பாகுபாட்டை
களைவதற்கு தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள தேர்தல் வாக்குறுதியில் கூறிய 40 சதவீத அரசு பணிகளில் பெண்கள் நியமனம் என்று முதல் கூட்ட தொடரிலே கூறியதுதான் @dmk @mkstalin @CMOTamilnadu @arivalayam அடித்த சிக்சர்.மனம்நிறைந்த நன்றி!ஆனால் சில ஆண்கள் வெறும் 4 , 5 தேர்வுகளின் முடிவுகள் வைத்து
70 சதவீதம் பெண்களே அரசு வேளைகளில் இருக்கின்றனர் எனப் பொய் பரப்புரை செய்கின்றனர். @angry_birdu பூதம் அவர்களை என் இங்கு tag செய்கிறேன் என்றால் எங்களுக்கு கூட்டாக இழைக்கப்படும் அநீதியை எடுத்து சமூக வலைதளத்திற்கு சொல்லவே. @isai_
இனி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களுக்கும் ,எதற்காக இந்த இட ஒதுக்கீடு சொல்கிறார்கள் என்று ஒரு சிறிய விளக்கம்:இங்கு சில ஆண்கள் எங்களுக்கு சமூக அழுத்தம் உள்ளது , நீங்கள் அனைத்தையும் பெண்களுக்கு வாரி கொடுத்துவிட்டால் நாங்கள் எங்கே போவது என பல வாட்சாப் forwardகள்
காணக் கிடைக்கிறது..

முதலில் பெண்களுக்கு வேலை வாய்புகளில் 40 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது எதற்காக என்று புரிந்து கொண்டு அனைவரும் பேச வேண்டும்.
1.சமூக கொடுமைகள் , பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், இல்லத்தரசிகள் என்ற பெயரில் உழைப்புச் சுரண்டல்,மணக்கொடை,சிவப்பாக இல்லையென்றால் அவமதிப்பு,குண்டாக இருந்தால் அவமதிப்பு,இன்னப்பிற Body shaming இவ்வாறு நீங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம் இதற்காகதான் இந்த இட ஒதுக்கீடு.
இந்த வேலைவாய்ப்பு உறுதி.. பெண்கள் அதிகாரத்தில் வரும்போது தன்னை சுயமரியாதை கொண்ட பெண்ணாக உணருவாள் அவள் தன்னையும் காப்பாள்,தான் சார்ந்த குடும்பத்தையும் காப்பாள் என்பதே நியதி.
எத்தனையோ குடும்பத்தில் 3 பெண் குழந்தைகள் 2 பெண் குழந்தைகள் என பெற்றோரும் இவளை எப்படி கரை சேர்ப்பேன் எனக் கவலை படுகின்றனர்.. காரணம் மணக்கொடை...DOWRY

எத்தனையோ பெண்சிசுக்கள் கருவிலே கொல்லப்படுகின்றன காரணம் இந்த சமூக அழுத்தம்..
எத்தனையோ பெண்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டு தான் விரும்பி வாழும் வாழ்க்கையை இழக்கின்றனர்..

இதைப் படிக்கும் பெண்களே நீங்களே நாளை ஆண் குழந்தை பிறந்தால் நல்லது என்னும் எண்ணத்தை விதைத்தது இந்த கேடுகெட்ட சமூகம் அல்லவா...
பெண்களுக்கு அரசாங்கம் செய்வது சலுகை அல்ல , அது காலம்காலமாக உங்களை ஒடுக்கி வைப்பதற்கு பிராயச்சித்தம்.. இன்றும் பெண்கள் தங்களை அறியாமலேயே அடிமைத்தளத்தில் மாட்டிக்கொண்டுதான் இருப்பார்கள்.
பெண் என்றால் சமையல்அறை , கோலம் போடுவது‌ , வீட்டை சுத்தம் செய்வது என...
ஆனால் இதற்கான மரியாதையோ ஊதியமோ நீங்கள் பெற்று இருப்பீர்களா மாட்டீர்கள்...

இந்த 40 சதவீத வேலைவாய்ப்பு உங்களை போன்ற பெண்களுக்கே...

இதை கெடுப்பதற்காக சிலப்பேர் இதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள்...
1.ஒருவர் இதை சாக்காக வைத்து தமிழ்நாட்டில் நடக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டையும் கெடுத்துவிடலாம் என்கிற கூட்டம்

2.தங்கள் திறமையை நிருப்பிக்க இயலாமல் தத்தளிக்கும் கூட்டம்
3.பெண்கள்தான் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள் , வேண்டும் என்றால் குரூப் 1 2019 result பாருங்கள் என்று வரும் கூட்டம்.. அவர்களுக்கு மற்ற தேர்வுகளில் எத்தனை பேர் உள்ளே இருக்கின்றனர் எனத் தெரியாது...
முதலில் அந்த 40 சதவீதத்தில் அனைத்துமே பெண்கள் என்பது மட்டுமே சலுகை , அதும் பெண்கள் இத்தனைக் காலம் அடிமை பெற்றதற்கான அரசாங்கம் செய்யும் சிறு பிராயச்சித்தம்...
மீதி 60 சதவீதம் இடஒதுக்கீடில் அவர்கள் திறமை ஆற்றலுக்கு ஏற்பவே இடம் பெறுகின்றனர் , இதில் பெண்கள் அதிக இடம் பெறுகிறார்கள் என்றால் அவர்கள் நன்றாக படிக்கிறார்கள் என்பதே பொருள்...

ஆண்கள் அதிகமாக உள்ளே இல்லையென்றால் அவர்கள் ஒழுங்காக படிக்கவில்லை என்றே பொருள்...
இனி பெண் குழந்தை பெற்ற பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை அரசு வேலைக்கு தயார்படுத்துவார்கள் திருமணத்திற்கு அல்ல...

பெண் சிசு கொலைகள் குறையும்..

பெண்களை குழந்தை திருமணம் குறையும்....

பெண்களுக்கு எதிரான சுரண்டல்கள் குறையும்....

பெண்களை பாரமாக பார்க்க மாட்டார்கள்...
ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் படிக்கலாம் , ஆண்களுக்கு சுதந்திரம் பெண்களை விட பெற்றவர்கள் அதிகமாக தருகின்றனர்.ஆனால் பெண்களுக்கோ ?

இந்த 40 சதவீதம் பெண்களுக்கு தங்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வைக்கும் ‌..
ஆண்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்று கூறுவார்கள், ஏன் பெண்களும்‌ வேலைக்கு சென்றால் அவர்களும் குடும்பத்தை பார்ப்பார்கள் தானே ...

இனி யாராவது சமூக அநீதி என்று யாராவது பிதற்றினால் அவர்களிடம் சொல்லுங்கள் ...

இது காலம்காலமாய் இழைக்கப்பட்ட துயரங்களுக்கு சிறிய மருந்தென...

நன்றி
பெண்கள் 40 சதவீத இடஒதுக்கீடு,பெண்கள் பார்வையில், நன்றிகள் முதலில் பாசமிகு @mkstalin முதல்வர்க்கு @ptrmadurai @KanimozhiDMK @Udhaystalin @geethajeevandmk @DrSenthil_MDRD @thirumaofficial @SuVe4Madurai @AsiriyarKV @TRBRajaa @Anbil_Mahesh
பெண்கள் பார்வையில் பெண்கள் 40 சதவீத இடஒதுக்கீடு,ஊடகத்துறையினர்களுக்கு : @GunasekaranMu @Senthilvel79 @bbctamil @ibctamil @sunnews @PTTVEnglish @Varavanaisen @Iyankarthikeyan @Sundara10269992 @kotravai_n @LibertyTamil
பெண்கள் பார்வையில் பெண்கள் 40 சதவீத இடஒதுக்கீடு,பெண் உரிமை பேசுபவர்களின் பார்வைக்கு : @suryaxavier1 @Senthilvel79 @U2Brutus_off @SanjaiGandhi @skpkaruna @umakrishh @rajakumaari @thiruja @thecommonman__ @DMK4TN_ @Mark2Kali_ @akaasi @neodravidian @karna_sakthi @DrSharmila15
பெண்கள் பார்வையில் பெண்கள் 40 சதவீத இடஒதுக்கீடு,பெண் உரிமை பேசுபவர்களின் பார்வைக்கு @Rohinimolleti @Raittuvidu @Surya_BornToWin
பெண்கள் பார்வையில் பெண்கள் 40 சதவீத இடஒதுக்கீடு,பெண் உரிமை பேசுபவர்களின் பார்வைக்கு: @meenakandasamy @dhanyarajendran @dhivya_dhurai @idhivyasrivasan @kavithamurali @JamesStanly @drnilofernisha @iamDrAjju

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with karpagam j

karpagam j Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(