KANNAN. 🦚🦚♥♥♥ Profile picture
Sep 19, 2021 12 tweets 5 min read Read on X
#குணசீலம்_பிரசன்ன
#வெங்கடாஜலபதி_பெருமாள்
#திருக்கோயில்

மனநோய் தீர்த்து, மன அமைதி தரும் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்.

திருச்சி- சேலம் ரோட்டில் திருச்சியில் இருந்து 24 கி.மீ தூரத்தில் குணசீலம் என்ற இடத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில். Image
மூலவர் பிரசன்ன வெங்கடாஜலபதி.
உற்சவர் ஸ்ரீனிவாசர்.

#தல_வரலாறு

திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். Image
குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார்.
குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் குணசீலரின் குரு தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன் ஒருவனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்று விட்டார் Image
அப்போதுகுணசீலம் காடாக இருந்தது. வன விலங்கு கள் சீடன் இருந்த பகுதியை முற்றுகையிட்டன. பயந்துபோன சீடன் அங்கிருந்து ஓடி விட்டான். காலப்போக்கில் பெருமாள் சிலையை புற்றுமூடி விட்டது. ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனைப் பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன. Image
அப்போது தொடர்ச்சியாக பாத்திரங்களில் இருந்த பால்மறைந்தது.

தகவலறிந்த மன்னன் இந்த அதிசயத்தைக் காண வந்தான். அப்போது ஒலித்த அசரீரி,புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்த்தியது. மன்னன் சிலையை கண்டெடுத்து கோயில் எழுப்பினான். இதனால் இக்கோயில் பிரசன்ன வெங்கடாஜலபதி எனப் பெயர் பெற்றது. Image
#பன்னிரு_கருடசேவை:

கோயிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை. உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளகிராம மாலை அணிந்து, தங்கசெங்கோலுடன் காட்சி தருகிறார். Image
தினமும் மூலவருக்கு அபிஷேகம் நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது.

சன்னதிக்கு இருபுறமும் உத்ராயண, தட்சிணாயண வாசல்கள் உள்ளன. புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், குணசீலருக்கு சுவாமி காட்சி தந்த வைபவம் நடக்கும். Image
பெரும்பாலான கோயில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடசேவை சாதிப்பார். இக்கோயி லில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருடசேவை சாதிக்கிறார். வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு.

தென்திருப்பதி என போற்றப்படும் குணசீலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். Image
புரட்டாசி சனியை யொட்டி சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறுகிறது.

#மனக்குழப்பத்திற்கு_தீர்வு:

மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்திக்காக வழிபடும் தலம் இது.

மனநோயாளிகளுக்கு காலை, மாலையில் நடக்கும் பூஜையின் போது தீர்த்தம் தருவர். மதியமும், Image
இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சன்னதியில் அமரச்செய்து பூஜை செய்கிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளிக்கிறார்கள்.கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் Image
இங்கு சுவாமியை வேண்டி பலன் பெற்றுள்ளனர்.

வாய் பேசாத கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், இங்கு வந்து சுவாமியை வணங்கி பேசும் சக்தி பெற்றதுடன், பாசுரமும் பாடியதாக கூறப்படுகிறது. பிரசன்ன வெங்கடாஜலபதியை வேண்டினால் பார்வைக் கோளாறு, உடல் குறைபாடு நீங்கும், மன நிம்மதி கிடைக்கும் என்பது Image
பக்தர்களின் நம்பிக்கை.

ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏🙏🙏@Pvd5888 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KANNAN. 🦚🦚♥♥♥

KANNAN. 🦚🦚♥♥♥ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kannanthvan1

Apr 3, 2023
🌹🌹சிவ லோக நாதனே இனிய ஈசனே உன் ஆழ்ந்த கருணையுடன் இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா

🌹🌹_தெரிந்து கொள்வோம்‼️_

🌹🌹33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில்
திருவாரூரில் அமைந்துள்ள,
தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின்
மிகப் பெரிய கோயிலாகும்!
🌹🏵️ 9 ராஜ கோபுரங்கள்,
🏵️ 80 விமானங்கள்,
🏵️ 12 பெரிய மதில்கள்,
🏵 13 மிகப்பெரிய மண்டபங்கள்,
🏵️ 15 தீர்த்தக்கிணறுகள்,

🌹🏵️ 3 நந்தவனங்கள்,
🏵️3 பெரிய பிரகாரங்கள்,
🏵️ 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),
🏵️ 100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,
🏵️ 86 விநாயகர் சிலைகள்,
🏵️ 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சோழர்கள் கட்டிய கோவில் இது.

🌹🌹சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர்,
Read 11 tweets
Apr 2, 2023
ஜென்மம் ஜென்மாய் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே தலம் கோடீஸ்வரர் திருக்கோயில்...

1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர்.
இங்குள்ள சனிபகவான் “பாலசனி’ என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது.

மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, “உத்திரவாஹினி’ யாக அதாவது தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது
இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது பூர்வ நம்பிக்கை. இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது.

இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது. விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் மதியால் குறைக்க முடியும்.
Read 6 tweets
Apr 1, 2023
ஆயிரமாண்டு அதிசயம் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் ஏழு சிவன் கோவில்கள்
இன்று புகழ்மிகு சிவாலயங்களாக இருக்கும் அனைத்தும் பிரமாண்ட கோவில்களும் ஆயிரமாண்டுக்கு முன்பே கட்டப்பட்டது குறிப்பாக இந்த கோவில் சாட்டிலைட் மற்றும் தொழில்நுட்பம் போன்றவை கண்டறியப்படாத காலத்தில் கட்டப்பட்டவை.
அளவீடுகளை அளவிடும் கருவி கூட இல்லாத காலத்தில் குறிப்பிட்ட ஏழு கோவில்கள் ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது இன்றளவும் அமைந்திருக்கும் அதிசயம்.

வடக்கே அமைந்திருக்கும் கேதர்நாத் துவங்கி தெற்கே அமைந்திருக்கும் ராமேஸ்வரம் இடையில் இருக்கும் மற்ற ஐந்து கோவில்களும்
ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

வடக்கே அமைந்திருக்கும் கேதார்நாத் கோவிலின் காலேஸ்வரம் ஆலயம் இங்கே சிவபெருமானும் இருக்கிறார், யம தர்மராஜவும் இருக்கிறார்.

இந்த கோவிலுக்கும் தெற்கே இறுதியில் அமைந்திருக்கும்
Read 9 tweets
Mar 31, 2023
*#காளஹஸ்தி அருள்மிகு #காளத்தியப்பர் திருக்கோயில்*:-

பஞ்ச பூத தலங்களில் வாயு தலமாகும் ‌ நாக தோஷ பரிகார ஸ்தலம். திருமண தடை நீக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும் தலம்.

மூலவர் : காளத்தியப்பர், காளத்தீசுவரர்
அம்மன்/தாயார் :
ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி, ஞானாம்பிகை. Image
தல விருட்சம் : மகிழம்
தீர்த்தம் : பொன்முகலியாற்று தீர்த்தம், ஸ்வர்ணமுகி ஆறு
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : சீகாளத்தி, திருக்காளத்தி
ஊர் : காளஹஸ்தி

கோயில் திறக்கும் நேரம்:

காலை 5 முதல் 12 மணி, மாலை 5 முதல் 9 வரை,
செவ்வாய், புதன் மற்றும் வியாழன் நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

தலபெருமை:-

கண்ணப்பர் வாய்கலசமாக முகலிநீர் கொண்டுவந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு திருநீறு(விபூதி) வழங்கும் வழக்கம் இல்லை.
Read 18 tweets
Dec 22, 2022
🙏நெஞ்சைத் தொட்ட ஓர் உண்மைச் சம்பவம்...

ஒரு பெண் தனது ஒரே ஒரு மகனுடன்
வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண்
இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின் இறப்பிற்குப் பின்பு அவளது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தன் மகனின் எதிர்கால வாழ்வைக் குறித்தச் சிந்தனையாகவே இருந்தது.
தன்னிடம் இருந்தச் சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தாள்.
மீதி சொத்தை தனது மகனின் கல்வித் தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.
நல்ல ஒழுக்கமிக்க மகன் இரக்கமானவன்
புத்திசாலி ஊரில் எல்லோரும் புகழும்
வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன
பரிட்சையில் முதல் தரத்தில் தேறினான்
இந்தச் செய்தியை அறிந்த உடனேயே அந்த
தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள் மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்குச் சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்
இறைவனைப் புகழ்ந்தாள் சந்தோஷத்துடன் வீடு வந்து அவனுக்கு பிடித்தமான உணவைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.
Read 32 tweets
Oct 3, 2022
ஈவெரா கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்.

நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது

சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.

எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.
உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்

சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !

அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(