☆உலகின் முதல் பட்டினியற்ற தேசத்தை உருவாக்கிக்காட்டியது.
☆உலகின் முதல் கல்லாதோர் அற்ற தேசத்தை உருவாக்கிக் காட்டியது.
☆முழுக்கல்வியும் 1/1
இலவசமாக்கப்பட்டது.
☆உயர் கல்வி வரை கட்டாயமாக்கப்பட்டது.
☆சுகாதாரத்திற்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்றது.
☆தொழிலாளர்களின் வேலை நேரம் 7 மணி நேரமாக்கப்பட்டது.
☆24 மணிநேரம் பணியாற்ற வேண்டிய அத்தியாவசியத் தொழிலாளர்களின் வேலை நேரம் 6 மணி நேரமாக்கப்பட்டது. 1/2
☆தவிர்க்க முடியாத காலகட்டத்தை தவிர கூடுதல் நேர உழைப்பு தடை செய்யப்பட்டது.
☆தொழிலாளர்களுக்கு இதர விடுமுறை இல்லாமல்,ஆண்டிற்கு ஒரு மாதம் முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது.
☆விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வோருக்கான மானியத்துடன் கூடிய உல்லாச விடுதிகள் 1/3
கொடுக்கப்பட்டன.
☆ஆண்களுக்கு 60 வயதும், பெண்களுக்கு 55 வயதும் ஓய்வு பெறும் வயதாகவும், ஓய்வு பெறுவோர்க்கும், உழைக்க இயலாதவர்களுக்கும் ஓய்வூதியமாக முழுச்சம்பளமும் வழங்கப்பட்டது.
☆ஓய்வூதியத்தை உலகமே அறிந்தது ரஷ்ய புரட்சியின் விளைவாகத்தான். 1/4
☆எல்லோருக்கும் குடியிருப்பு உறுதி செய்யப்பட்ட முதல் நாடும் ரஷ்யா தான்.
☆வீட்டு வாடகை, எரிபொருள், மின்சாரம், தண்ணீர் உட்பட எல்லாவற்றிற்கும் சேர்த்தே ஊதியத்தில் 3 சதவீதம் மட்டுமே பெறப்பட்டது.
☆பெண்களுக்கு பேறுகால விடுப்பு நான்கு மாதங்கள் முழு ஊதியத்துடன் வழங்கப் பட்டது. 1/5
☆தேவைப்படின் ஓராண்டு காலம் வரை பாதி ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்பட்டது.
☆தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரைக்கும் பெண்களுக்கு வாரத்தில் 6 நாட்களோ, நாள் ஒன்றுக்கு 7மணி நேரமோ உழைக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை.
☆எல்லா குழந்தைகளுக்கும் 16 வயது வரையிலும், 1/6
தனித்து வாழும் பெண்கள் வளர்க்கும் குழந்தைகளுக்கு 18 வயது வரையிலும் அரசு மானியம் வழங்கியது.
☆எல்லோருக்கும் வேலை வழங்கிய முதல் நாடும் ரஷ்யா தான்.
☆இன்னும் இதுபோன்ற பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவ்வளவு ஏன், இன்றைக்கு நான் அனுபவிக்கிற பல உரிமைகளும், தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள1/7
பல உரிமைகளும் ரஷ்ய புரட்சியின் மூலமாகவே இந்த உலகம் அறிந்தது, பெற்றது.
☆சூரிய அஸ்தமனமே இல்லாத பெரும் செல்வம் படைத்த பிரிட்டிஷ் சாம்ராஜியமே, தன் சொந்த நாட்டு மக்களுக்கு அறிமுகம் கூட செய்யாத பல நலத்திட்டங்களை அன்றைக்கு வறுமையிலிருந்து உருவான ரஷ்யாவின் புரட்சிகர அரசாங்கம் 1/8
செய்துகாட்டியது.
☆காரணம் செல்வம் ஒரே இடத்தில் குவியாமல், எல்லோருக்கும் நாட்டின் மொத்த செல்வமும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய பொதுவுடைமை கருத்தாலேயே அது சாத்தியமானது. 1/9
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1968ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம்.
நான் அரசு கலைக்கல்லூரி மாணவன்.திடீரென்று கலவரக்கோலம் பூண்டது சென்னை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே கடுமையான மோதல். மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியிலிருந்து சோடா பாட்டில் வீச்சு, சட்டக்கல்லூரி மாணவர் விடுதி அருகில் 1/1
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஊர்வலமாக சட்டக் கல்லூரி விடுதியை சூழ்ந்து நிற்கிறார்கள்.
காவல்துறை திகைத்து நிற்கும் அந்த தருணத்தில் ஒரு தொழிலாளர் தவைவர் சூழலை அப்படியே மாற்றி அமைக்கிறார்.
விடுதி வாயிலில் தரையில் தலை வைத்து படுக்கும் அந்தத் தலைவர் சொல்கிறார
1/2
"நீங்கள் விடுதிக்குள் நுழைந்து மாணவர்களை தாக்க நினைத்தால் என் பிணத்தைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்".
தொழிலாளர் கூட்டம் அப்படியே கலைந்து செல்கிறது. அதே காலகட்டத்தில் தான் நாளிதழ்களில் அவருடைய அறிக்கை ஒன்றையும் படித்தேன்.