1968ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம்.
நான் அரசு கலைக்கல்லூரி மாணவன்.திடீரென்று கலவரக்கோலம் பூண்டது சென்னை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே கடுமையான மோதல். மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியிலிருந்து சோடா பாட்டில் வீச்சு, சட்டக்கல்லூரி மாணவர் விடுதி அருகில் 1/1
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஊர்வலமாக சட்டக் கல்லூரி விடுதியை சூழ்ந்து நிற்கிறார்கள்.
காவல்துறை திகைத்து நிற்கும் அந்த தருணத்தில் ஒரு தொழிலாளர் தவைவர் சூழலை அப்படியே மாற்றி அமைக்கிறார்.
விடுதி வாயிலில் தரையில் தலை வைத்து படுக்கும் அந்தத் தலைவர் சொல்கிறார
1/2
"நீங்கள் விடுதிக்குள் நுழைந்து மாணவர்களை தாக்க நினைத்தால் என் பிணத்தைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்".
தொழிலாளர் கூட்டம் அப்படியே கலைந்து செல்கிறது. அதே காலகட்டத்தில் தான் நாளிதழ்களில் அவருடைய அறிக்கை ஒன்றையும் படித்தேன்.
தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே 1/3
ஒற்றுமையை வலியுறுத்திய அறிக்கை அது.தொழிலாளர் தலைவரான
வி.பி.சிந்தன் ஒரு மாணவனான எனக்குள்
இப்படித்தான் வந்து அமர்ந்தார்.
மாணவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தை கையாண்ட
விதத்துக்காக..அன்றைய முதல்வர் அண்ணா சட்டமன்றத்தில் வி.பி.சிந்தனை
மனம் திறந்து பாராட்டினார்.
1/4
நான் இணைந்து செயலாற்றிய மாணவர் சோசலிச அமைப்பு நடத்திய கூட்டத்துக்கு ஒரு நாள் வந்திருந்தார்.தும்பை நிற வேட்டியும்,முழுக்கை சட்டையும் அணிந்தபடி குறித்த நேரத்தில் கூட்டத்துக்கு வந்த சிந்தன் ஆற்றிய உரையும், அவருடைய நட்பார்ந்த அணுகுமுறையும்தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 1/5
மீது ஒரு பெருமதிப்பையும்,
ஈர்ப்பையும் என்னிடம் உருவாக்கின.
உள்ளூர் அரசியலில் மட்டும் ஊறித்திளைத்துக்கொண்டிருந்த எனக்கு உலக அரசியலை தொட்டுக்காட்டியவரும் அவர்தான். பாரிஸ் நகர மாணவர்கள் அரசியல் மாற்றத்திற்காக போராடுவதையும், அமெரிக்க மாணவர்கள் வியட்நாம் விடுதலைக்கு குரல் 1/6
எழுப்புவதையும், சுட்டிக் காட்டிய சிந்தன் ஒரு போராட்டம் எத்தகைய நோக்கங்களை கொண்டிருக்க வேண்டும் என்று மையப்படுத்திச் சொன்னார்,
"நோக்கமில்லாத போராட்டம் வீண்".
அன்று முதலாக தோழர் வி.பி.சி.நடத்தும்
வாயிற்கூட்டங்கள்,பேரணிகள்,
போராட்டங்கள், மேதின ஊர்வலங்கள் எல்லாவற்றிலும் பங்கு 1/7
கொள்ள ஆரம்பித்தேன். விரைவில் சோசலிஸ்ட் மாணவர் அமைப்பை கலைத்து விட்டு, இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்தோம்.
"மாணவர் சங்க வேலைகள் மட்டும் போதாது.
தொழிற்சங்க இயக்கத்துடனும் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும்" என்று அடிக்கடி
வலியுறுத்துவார் தோழர் வி.பி.சிந்தன்.