#JaiBhimControversy ஐ மட்டுமல்ல, சாதி, மதத்தை வைத்து அரசியல் பண்ணி, கருத்தை கருத்தோடு மோதாமல், சமூக ஊடகத்தில் தலையை கொண்டுவருபவனுக்கு, அடிப்பவனுக்கு, உதைப்பவனுக்கு லட்சம் என்று அறிவிப்பவன் மட்டுமல்ல அவனோடு கூட இருந்து ஊடகத்திற்கு போஸ் கொடுப்பவன் வரை குண்டர் சட்டத்தில் அடைக்க
2013ல் மரக்காணம் கலவரத்தையொட்டி, பா.ம.க வன் சட்டவிரோத சாதிய வன்முறை நடவடிக்கைகள் தொடர்ந்தால் பா.ம.க தடை செய்யப்படும் என்று அன்றைய முதல்வர் #ஜெயலலிதா அறிவித்தவுடன் அடங்கியது.
சாதி, மதத்தை வைத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை குழைக்கும்
செயலை
செய்யும் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கைஎடுக்க @mkstan அவர்களே என்ன தயக்கம்?
அனைத்து சாதி மக்களும், எல்லா மதத்தினரும் அமைதியை விரும்புவர்கள் தான்.
ஆனால் சாதி, மத அரசியல் நடத்தி மக்களை பிளவுபடுத்தி விரோதத்தை வளர்க்கும் தீயசக்திகளை ஒடுக்க ஏன் தயக்கம்?
ஜெயலலிதா போல் முதல்வராக வேண்டும் என்று நினைத்தால் போதாது, அவர் போல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதைவிடுத்து ஊடகத்தில் கம்பு சுத்த அனுமதித்து சாதிய, மத கலவரத்திற்கு வழிவகை செய்யாதீர்கள்.
பேச்சு, கருத்து, ஊடக சுதந்திரத்தை நசுக்கும் மோடி அரசிற்கும், அதை வைத்தே மக்களின் மனதில்
படைப்பாளர்கள் மனதில் அச்ச உணர்வை ஊடகங்கள் வாயிலாக தோற்றுவிக்கும் அனைத்து தீய சக்திகளையும் ஒட்டு மொத்தமாக குண்டர் சட்டத்தில் அடைத்த வரலாற்று பெருமை பெற்றவராக @mkstalin ஆவீர்களா?
இல்லை ஓட்டு அரசியலுக்காக இந்த தீயசக்திகளை வளர்ப்பீர்களா?