2007 காலேஜ் 3year 5th Sem முதல் symposium பாண்டிச்சேரியில ஒரு காலேஜ்கு போனோம் அதுல எங்க dep ல 6பேர் போனோம் நான் 6வது ஆள் ECEdeptல ஒருத்தன் paper presentations க்கு வந்தான் மொத்தம் 7 பேர் சர்கீயூட் டிசைனீங் & mini project நாங்க focus செய்தோம்
Paper presentation and circuit designing ஒரே டைம்ல நடந்தது நாங்க second prize paper presentation செய்தவன் win பண்ணலை evening Pondy குதுகலமாக இருந்துட்டு அடுத்த நாள் mini project காலையில 8மணிக்கு ரெடி ஆகினோம் 10மணிக்கு stall போகனும் ஆனால் அப்பதான் ஓர் பேர் அதிர்ச்சி காத்திருந்தது
இரண்டு project கொண்டு வந்திருந்தோம் (3பேர் ) laptop amplifier (3பேர்)irrigation control, அறியா வயதில் இதெல்லாம் அரிய கண்டுபிடிப்பு என நினைத்து கண்டிப்பா prize வாங்கிறோம்ன்னு கிளம்பினோம் இங்க வந்த என்ன என்னமோ innovative வெச்சுருக்கானுக சரி பேர் அதிர்ச்சிக்கு வருவோம்
காலையில குளிச்சுட்டு ரூம்முக்கு வரேன் என் நண்பன் வந்து மச்சான் நீ project submitting வர வேண்டாம் என்றான், ஏன்டா என்றேன்? உனக்குதான் ஒரு wining prize இருக்கு இல்ல, eceல இருந்து வந்தவன் irrigation சேர்த்துக் கொள்கிறோம் அவனுக்கு prize win செய்யட்டும் என்றன் அழுகைதான் வந்தது ☺️
சில நண்பர்கள் சமதானம் செய்தார்கள் எல்லோரும் 8.15மணிக்கு கிளம்பிட்டானுக நான் மட்டும் ரூம்ல திரும்ப கிளம்ப bagல எடுத்து வெச்சுட்டு இருந்தேன் அப்ப எனக்கு கிடச்ச ஓர் சர்க்கீயூட் எனக்குள்ள புதிய தெம்பை தந்தது அந்த சர்கீயூட் ரெம்ப பெரிய சர்கீயூட் கிடையாது ஒரு இத்துனுனு சர்க்கீயூட்
இப்ப பவர் பேங் antroid iPhones என காலம் மாறிடுச்சு அன்று Nokia 1100 sony Ericsson mobile இருந்த காலம் அந்த சர்க்கீயூட் சார்ஜ்ர் வாங்க காசு இல்லத்தால நானே ரெடி செய்த சார்சர்தான் 😀 அது ரூம்ல 2amp 24v transform கலேஜ்ல ஆட்டைய போட்டு வெச்சு இந்த circuit வெச்சு சார்ஜ் போடுவேன்
அந்த சர்கீயுட்ல பழையா toy கார் பேட்ரியை ரீசார்ஜ் செய்து போட்டால் அப்படியே போனும் பேசலாம் அதாவது power bank ஆக ஒர்க ஆகும் அதற்கு நான் அப்ப வெச்ச பேர் travel charger சரின்னு அதை தூக்கிட்டு போனேன் open projectனால யார் வேணலும் கலந்துக்கலாம் round wise select செய்வாங்க,
நான் போனப்ப பசங்களுக்கு ஷாக் சரிடா demo வை என அவனுக பக்கத்துலேயே ஒரு ஸடால் கிடைத்து first roundலேயே score செய்ய ஆரம்பித்தேன், demo வை நான் story மாத்தினேன் அது எல்லாத்தையும் அட்ரேக் செய்தது என்ன கதைனா🤔 கம்பி கட்ற கதைதான் மேல பறக்குது விமானம் கடல்ன்னு கப்பல் என்பதை போல
பொள்ளாச்சி to Namakkal 5 மணிநேரமாகும்,Sony மொபைல்ல சார்ஜ் நிற்பதில்லை அப்ப எனக்கு தோன்றிய ஞானோதயம்தான் இது, 10ரூ க்கு 9volt battery போட்டா கூட emergency பேசலாம் இது சார்ஜரை விட விலை குறைவு நான் சொல்ல சொல்ல இவர் இடிப்பாரு இவர் கிண்டுவார்ன்னு ரேஞ்சுக்கு அவுங்களையும் கேட்க வைத்தேன்
சதுரங்கவேட்டையில சொல்வதை போல பாதி உண்மை பாதி பொய், 1round student round நான் selected, நம்பி வந்த irrigation control reject 😳 அடுத்து lectures round ம் நான் செலக்ட் amplifier out 😳 guest judgment நான் out இருந்தாலும் prize allowance செய்யும் போது என் project பேரை சொன்னாங்க
இது குட்டியா இருந்தாலும் pattern அளவுக்கு worth உள்ள project என அன்று ஒலித்தது இன்னும் காதுகுள்ள ஒலிக்குது, எல்லோத்தோட faceலையும் ஈ ஆடால கெத்த இருந்தது ஒருத்தன் தள்ளிவிடறப்பதான் நாம சொந்தமா எந்திரிக்க முயற்ச்சிப்போம் அதற்கு பிறகு வேற வேற பிரஜக்ட் என டீமாக ஜெயித்திருக்கோம்
காலேஜ் final project வரைக்கும் ஒரே டீம் தான் ஆனாலும் அன்று என்னை உட்கார வைக்க நினைத்தால் செம வலிதான்.. என் வாழ்வில் கிடைத்த சிறந்த சில வெற்றிகளில் அதுவும் ஒன்று .. யாரையும் under estimate செய்யாதீங்க முடியாதுனா முன்னாடியே சொல்லிடுங்க ஆசை வளர்த்த விடாதீங்க.
ஏரியா நட்பு வட்டாரம் எல்லாத்துக்கும் இருந்துருக்கும் அதை அட்டி, மந்தை, gulli இப்படி ஏதாவது ஒரு பெயரும் இருக்கும் அப்படி ஓர் பெயர்தான் இந்த “சங்கம்” இங்க வயது வித்தியாசம் இல்லாத நட்பு இருக்கும் பள்ளி,காலேஜ்ல ஒரே வயதுடைய பசங்கதான் நண்பர்கள்
ஆனால் இங்கமட்டும் எல்லா வயசுலேயும் இருப்பாங்க பெருசு பொடுசுன்னு எல்லாம் இருக்கும் அப்படியான ஒரு இடம்தான் இந்த சங்கம்ங்கற அட்டி.. கையில நையா பைசா இல்லாத காலம், நேரம் நிறைய இருக்க காலம், எப்ப போனாலும் எவனாவது இருப்பான் போயி குத்த வெச்சு உட்காந்து பேச ஆரம்பிச்ச முடிக்கறப்ப
டைம் போனதே தெரியாது மொத்த ஏரியா பசங்களும் ஒவ்வெருத்தனும் வந்து சேர்ந்துப்பானுக .. சரி அப்படி என்னட பேசினீங்க? இங்கென்னா உலக பிரச்சனையை பேசி தீர்திடவா போறோம் ஒன்னும் இல்லை ஒருத்தனை காலய்க்க ஆரம்பிச்சு வரவன் போறவன்னு வம்பு இழுத்து கலகலப்போட இருக்கும் நேரம் போறதும் தெரியாது
*சவூதியில் காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள் அல்லது ஹூரூப்(Runaway),மத்லூப்(police case),இதர கஃபீல்(Sponsor) பிரச்சினை, சம்பளம் பாக்கி, EOSB பாக்கி, Harassment.etc., போன்ற ஏதாவது பிரச்சினையில் தமிழர்கள் சிக்கி தவிக்கின்றார்களா?*
_தாயகம் செல்ல வேண்டுமா?_
கீழுள்ள MADAD/இந்திய எம்பாஸி / தமிழக அரசு தொடர்பு ஈமெயிலில் உங்கள் கோரிக்கையை ஆங்கிலத்தில் கடித வடிவில் தெரிவிக்கவும்... உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கின்றனர்...
கோரிக்கைகள்/புகார்களைப் பதிவு செய்ய தேவையான முக்கியமான தகவல்கள் / ஆவணங்கள்: *பாஸ்போர்ட் / இகாமா நகல்,
விசா பக்க நகல் மற்றும் ஸ்பான்சரின் பெயர், உங்கள் முகவரி மற்றும் மொபைல் எண்.*
*புகாரை கீழுள்ள MADAD portalஇல் தெரிவிக்கவும்👇
இந்திய தூதரக சமூக நலன்(Community Welfare) பிரிவு :
சமூக நல பிரச்சினைகள் தொடர்பான குறைகளை ஆன்லைனில் பதிவு செய்தல்:
👇
கோடை விடுமுறையில் ஓய்யாரமாய் 9மணிக்கு எழுந்து கயிறு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தான் பார்த்திபன்.. ஒரு கையில் அலைபேசி ஒரு கையில் கடுங்காப்பி டம்ளரோட ஒரு சிப் காபி பல்தெரியாத புன்னகையோட மற்றொரு கை விரல்கள் மொபைலில் அதகளம் செய்து கொண்டு இருந்தது..
மாட்டை புடிச்சு கட்டிட்டு கறந்தபாலை சொசைட்டியில ஊத்திட்டு வந்தால் சாந்தா.. பார்த்தி.. கொஞ்சம் ரேசன் கடைக்கு போயிட்டு வாயேன் அம்மாக்கு கால் நோவுதுடா..
ம்மோ அதெல்லாம் முடியாது நீ போ
வூட்டுல சும்மா உட்காந்து போனை தானே நோண்டுற அதுக்கு அங்காச்சும் போயி வாங்கிட்டு வரலாம் இல்லை
ம்மோ நீயே போமா.. ரேசன் கடையில நின்ன என் பிரஸ்டேஜ் என்ன ஆவதுன்னு சொல்லி முடிக்கலை..
நொட்டுச்சு பிரஜ்டேஜ் வாயக்கட்டி வவுத்த்தை கட்டி படிக்க வெச்ச துரைக்கு கவுரம் வந்துடுச்சு சட்டு புட்டுன்னு எந்துருச்சு போறீயா இல்லையா?
ம்மோ மேட்ச் இருக்கு போகனும் நீ போம்மா அங்க கூட்டமா இருக்கும்
நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு காதல் கதை.. இல்லை இல்லை ஒரு கான்வர்சேசன் நல்ல இருந்த என்ஜய் இல்லைனா 🏃♂️🏃♂️🏃♂️
“தேவதையோடு”
ஹலோ !!
ஹலோ!!!
எங்க இருக்க?
வீட்டுல ஆமா நீங்க?
ஹேய் பிசாசு நான்தான்
எப்பட வந்தே நல்ல இருக்கையா?
ஹீம் பைன் .. லாஸ்ட்வீக் வந்தேன்..
என்ன சார் திடீர்ன்னு போன்னெல்லாம் செய்றீங்க ? எங்க ஞாபகமெல்லாம் இருக்கா..
சின்ன புன்னகையோடு சும்மதான் உன் ஏரியலதான் சின்ன வேலை வந்தேன் அதான்..
ஓஹோ ..
Freeயா இருக்கையா மீட் பண்ணலாம?
இல்லை பிஸி
ஓ அப்ப ஒகே சரி தம்பி என்ன செய்றான் அப்பா? அம்மா?
எல்லோரும் நலம்
ம்ம்ம்
அப்புறம்?
சும்மாதான் சரி பாய் கால் யூ லேட்டர்.
வண்டி முன்னோக்கி ஏதே நினைத்துக்கொண்டே நகர்ந்தது அடுத்த போன் ரிங் அலற..
பள்ளிக்கூடம் போறதே ஒரு விதமான உணர்வு அதுல கொஞ்சம் பயம் கொஞ்சம் காதல் கொஞ்சம் பொறுப்பு கொஞ்சம் பரவசம் இப்படி எல்லாம் கலந்த ஓர் உணர்வு இந்த உணர்வு எப்பவுமே மாறிட்டே இருக்கும் டெஸ்ட்டுனா ஒரு மதரி அவள பார்க்க போகிறோம்னா ஒரு மதிரி கேம்ஸ்னா வேற மதிரி இருக்கும்
இப்படி மாறுபட்ட உணர்வோடு வீட்டுல இருந்து பள்ளிகூடம் போற வரைக்கும் இருக்க பயணம் ரெம்பவும் அழகானது என் பயணத்தை பகிர முற்படுகிறேன்..
காலையில 6மணி அம்மா வந்து அப்பா எழுந்துருடான்னு முதல் குரல் அடுத்த சில நிமிடத்தில் அந்த குரல் டேய் எழுந்துரு அடுத்த சில நிமிடத்தில் ..
தண்ணியை எடுத்து ஊத்துறேன் இருடான்னு சொல்லும் போது வேண்டா வெறுப்பாய் கண்கள் விரியும் சூரியன் வேற இவன் எப்ப முழிப்பான்னு காத்திருந்து பொழுச்சுனு கண்ணுல அடிக்கும் அப்படியே எழுந்து ரெடியாக கிட்டதட்ட 7.20 ஆகிடும் 7:25க்கு பஸ் அதை விட்ட ஸ்கூல் அம்போதான்..