அடுப்பங்கரையிலும் அமெரிக்காவிலும், புரோகிதராகவும், பிரொபஷனலாகவும், தமிழ் எழுத்தளாராகவும், நுனி நாவில் ஆங்கிலம் பேசுவராகவும், பழுத்த ஆத்திகராகவும், கம்யூனிஸ்டாக… பல தளங்களில் பரந்து விரிந்தோம்.
அமெரிக்கா போனாலும் ‘ஆத்து’ பாஷை. எங்கெங்கு சென்றாலும், உலகெங்கும் தமிழ் சங்கம் வளர்த்தோம். தமிழ் நூல்கள் எழுதினோம். தமிழை ‘செந்தமிழ்’ முதலில் சொன்னோம். தேடி தேடி பழந்தமிழ் இலக்கியம் சேகரித்தோம்.
திடீரென ஒருவன் “நீ தமிழனில்லை” என்றான். முதலில் திகைத்து பிறகு சிரித்து சமாளிக்க கற்றோம்.
அரசாங்க வேலை உன்னதம் என்றே நம்பினோம். வேலையில் உண்மையாய் இருந்தோம். ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து’ என்று எவரும் சொல்லிக் கொடுக்காமலேயே வாழ்ந்தே காட்டினோம்.
திடீரென ஒருநாள் “உனக்கு அரசு ஊழியம்” இல்லை என்றான். மாற்றுவழி கண்டோம். அரசு ஊதியம் பற்றி கவலை கொள்ளாத, ஏன் விண்ணப்பமும் செய்யாத ஒரு தலைமுறை கண்டோம். ஏன்! 45 வயதுக்கு கீழ் அரசு ஊழியத்தில் எவரும் இல்லை என்றே நிலை கண்டோம்.
சுதந்திர போராட்ட களம் கண்டோம். தியாகிகள் பலரை தந்தோம். துப்பாக்கி ஏந்தினோம்.ரகசிய இயக்கங்களில் இருந்தோம்/நடத்தினோம். அடிபட்டோம், உதைப்பட்டோம். சிறை சென்றோம்.
இன்று தமிழகத்தின் முக்கிய கட்சிகள் பலவற்றில் எம்.எல்.ஏ.வாக அல்லது அமைச்சராக அல்ல. ஒரு கவுன்சிலர் ஆக கூட தடை இருக்கும். ‘நவீன தீண்டாமைக்கு’ பழகி கொண்டோம்.
மகாத்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க ‘அரிஜன சங்கம்’ அமைத்தோம். தமிழகத்தின் கோயில் கதவுகளை தாழ்த்தப்பட்டோருக்காக திறந்தோம். ‘வைக்கம்’ ஞாபகத்தில் இருப்பவர்களுக்கு மதுரையும் சிதம்பரம் கோயில்கள் எவ்விதம்/யாரால் தலித்துக்களுக்கு திறக்கப்பட்டன என்பது தெரியவே தெரியாது.
அவைர்களில் சிலர் “ஆரிய” வாதம் செய்யும்போது அமைதியாய் விலகுகிறோம்.
கணித மேதையை தந்தோம். அறிவியலில் நோபல் பரிசுகள் பெற்றோம். (இந்தியா அறிவியலில் பெற்ற 4 நோபல் பரிசுகளில் 3 தமிழகத்தை சேர்ந்தது) நல் ஆசிரியராய் இருந்தோம்.இந்திய அரசியல் சாசன அமைப்பில் பெரும்பங்கு ஆற்றினோம்.
கல்வி சாலைகள் அமைத்தோம். அறிவு தளத்தில் பெரும் பங்கு ஆற்றினோம். ஆனால் நாடகங்களிலும் சினிமாவில் ‘அறிவு இல்லாத’ முட்டாளாக மட்டுமே பிராமணர்களை காட்டும் மூடநம்பிக்கையை கண்டு சிரிக்க கற்றோம்.
“பார்பார புத்திய காட்டிடேயே” என்ற வசவுகள் வலித்தாலும், சிரிக்கும் முகம் எளிய வாழ்க்கை. உலகில் எந்த தவறு நடந்தாலும் (அட! மழை பெய்யாவிட்டாலும்) ‘பார்பன அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டு சதியை முறியடிப்போம்’ என சிவப்பு மையில் அடிக்கப்படும் போஸ்டர்களை பார்த்து அடிக்கடி குழம்பி போவோம்.
எம்மை காரணம் இல்லாமல் வெறுப்பவர்கள் ஒரு நாள் மாறுவர். அதுவரை நாம் காத்திருப்போம்.
செலவு குறைந்த எளிய உணவு, வேலையில் அற்பணிப்பு. வழியில் கோயிலை பார்த்தால் கன்னத்தில் போடும் பக்தி. அவசர கதியில் காயத்திரி ஜபம். குழந்தைகளின் எதிர்கால கவலை. சாதி சண்டை மற்றும் மத சண்டைகளை படித்தால், மனதில் வருத்தம்.
எவரையும் விட உயர்ந்தவனும் இல்லை. எவரையும் விட தாழ்ந்தவனும் இல்லை. என் தாய் மொழியையும் நாட்டையும் நேசிக்கும் நாங்கள் எளிய மனிதர்கள்.
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அடுத்த முறை, நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த மிக முக்கியமான, கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். 🙏🇮🇳1
ரத்தினச் சுருக்கமாக, இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.
🙏🇮🇳2
சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும் போதே, உங்கள் உள்ளுணர்வு அந்தகோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம, கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.
"அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம் - யப்பா முடியலடா சாமி! இதைவிட ஒரு காமெடி என்னன்னா... அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம்.
அவ்ளோ பெரிய ஆமையை Discovery channelல கூட காமிக்கலையே. தேவர்களும், அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம். அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம்.
அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம். சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம். விஷத்த குடிச்சா சாமி சாகுமா? இல்ல அப்படி செத்தா அது சாமியா? அப்புறம் அமுதம் வந்துச்சாம் அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.
1. பலிராம் பந்த் ஹெட்கேவர் – ரேவதி தம்பதியருக்கு 1 ஏப்ரல் 1889 ல் நாக்பூரில் பிறந்தவர்.
2. தனது 13வது வயதில் பிளேக் நோயால் பெற்றோரை இழந்தார். 1914 ல் மருத்துவப் படிப்பை கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் முடித்து, 1915இல் நாக்பூருக்கு மருத்துவராகத் திரும்பினார்.
3. மருத்துவ சேவையைவிட மக்களின் மனத்திற்கு மருத்துவம் தேவை என்பதை உணர்ந்து சமுதாய சேவகராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
#ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்/#RSS
தேசீயத் தொண்டர் சங்கம்
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh, தேசியத் தொண்டர் அணி, ஆர் எஸ் எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து
அமைப்பு அல்லது ஆர் எஸ் எஸ் (RSS, தேசிய தொண்டர் அணி)
என அழைக்கப்படுகின்றது. இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவரால் நிறுவப்பட்டது.
சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்கு மிக முக்கிய காரணம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி "இந்து" என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
1. 1905 - ம் ஆண்டு வங்காளம் துண்டாடப்பட்டது. ( டாக்கா - டாக்கேஷ்வரி 52 சக்தி பீடத்தில், ஒன்று இன்று நம்மிடம் இல்லை )
2. 1919 ஆகஸ்டு மாதம்வரை நம்மிடம்இ௫ந்த உபகனிஸ்தான் (ஆப்கானிஸ்தான்) பாரதத்தில் இ௫ந்து பிரிட்டிஷாரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ( காந்தார தேசம் -சகுனி, காந்தாரிமற்றும் பிரகலாதன் பிறந்த இடம் )
3. 1937-ல், பர்மா ( பிரம்ம தேசம் ) பாரதத்திலி௫ந்து பிரிட்டிஷாரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
காலம் காலமாக கழகங்கள் கொடுக்கும் பில்ட் அப்பை மட்டுமே பார்க்கும் எவருக்கும் வைக்கம்போராட்டம் என்பது என்னமோ ஈ.வெ.ராவால் ஆரம்பிக்கப்பட்டு , நடத்தப்பட்டு , வெற்றிகரமாக ஆலய நுழைவு செய்யப்பட்டது என்றே நினைக்கத்தோன்றும்.....
வைக்கம் என்னும் ஊர் கேரளாவில் , அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கிராமம்....
1916 ல் திட்டமிடப்பட்டு 1924ல் துவங்கிய அந்த போராட்டத்தை துவங்கி , நடத்தியவர் டி.கே.மாதவன் என்பவர்....
அன்றைய காலகட்டத்தில் , தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழையமுடியாத நிலை நாடு முழுவதும் இருந்தது....
ஈ.வெ.ரா ஏன் தன் போராட்டத்தை தமிழகத்தில் நடத்தவில்லை? அவர் பிறந்த ஈரோட்டிலோ , சேலத்திலோ , கோவையிலோ ,எல்லா கோயிலகளிலும் தலித்கள் அனுமதிக்கப்பட்டனரா என்ன?