பள்ளி மாணவியின் உயிரைப் பறித்த கிறிஸ்தவ மதமாற்ற மிஷனரிகள்...
அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த மு.லாவன்யா என்ற மாணவி தஞ்சாவூர் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்தார். 10ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றவர்.
அப்போதே பள்ளி நிர்வாகம் அந்த மாணவியை மட்டுமல்லாமல் பெற்றோர்களிடமும் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறது.
அவர்கள் மறுத்து விட்டனர்.தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிற அந்த மாணவியை படிக்க விடாமல் விடுதியை சுத்தம் செய்வது, உணவு சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது ,தோட்ட வேலை
இதுபோன்ற வேலைகளை வாங்கி படிக்க விடாமல் தொந்தரவு செய்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் அனைத்து மாணவிகளையும் அனுப்பிவிட்டு இந்த மாணவியை மட்டும் விடுதியிலேயே தங்கவைத்துள்ளனர்.
இதனால் மனம் நொந்து போன மாணவி கடந்த 10 தினங்களுக்கு முன்பு பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு
முயன்று இருக்கிறார்.
பெற்றோரிடம் விஷம் அருந்திய தைக் கூறாமல், பள்ளி நிர்வாகம் மருந்து வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அந்த மாணவியை அனுப்பி இருக்கிறார்கள். பள்ளி நிர்வாகமும் பெற்றோரிடம் முறைப்படி ஆன விஷம் அருந்தியதை கூறவில்லை. மாணவியும் பயத்தில் பெற்றோரிடம் கூறவில்லை.
வீட்டிற்கு வந்த மாணவிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கும் பொழுது தான் மாணவி விஷம் அருந்தியது தெரியவந்தது.
உடல் மிகவும் மோசமான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இன்று மாலை மாணவி இறந்தார்.மாணவியின் இறப்பிற்கு காரணமானவர் மீது
கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பள்ளி விடுதி மாணவர்கள் அனைவரையும் முழு விசாரணைக்கு ஆட்படுத்தினால் மதமாற்றக் கொடுமையின் முழு விவரங்கள் தெரியவரும்.
ஆகவே அரசு பாரபட்சமின்றி விரைந்து செயல்பட வேண்டும்.