#Books #படித்தலும்பகிர்தலும்
இந்த வருடத்தின் முதல் வாசிப்பு. மிகுந்த மன நிறைவையும், நெகிழ்வையும் உண்டாக்கிய நூல்.
மிகச் சிறிய நூல். 60 பக்கங்கள் தான். ஒரு புத்தகத்தின் சிறப்பு அதன் பக்க எண்ணிக்கையில் இல்லை. அது நம் மனதில், சிந்தனையில் உண்டாக்கும் விளைவுகளை பொறுத்தது. 1/8
2/8 அவ்வகையில் ஒரு புத்தகம் என்ன செய்ய வேண்டுமோ அதை சிறப்பாக செய்திருக்கிறது.ரோஸா பார்க்ஸ் பற்றி மிக சிறிய அளவில் அறிந்திருந்தாலும் இதனை படிக்கும் போது உண்டான பிரமிப்பு விவரிக்க இயலாதது. அமெரிக்க கறுப்பினத்தவர் நீதியின் முன் பட்ட கொடுமைகள் மிக வலி தரக் கூடியவை.
3/8 இந்தியாவில் சாதிய ஒடுக்கு முறையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்நூல் தனிப்பட்ட முறையில் பெரு வலியைத்தரும். ஒரு பேருந்து பயணத்தில் வெள்ளையர் நிற்கும் போது கருப்பர் அமரக்கூடாது என்றொரு காலம் இருந்தது என்பதும், வெள்ளையருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கறுப்பர் அமரக்கூடாது என்பதும்
4/8 இன்றைய அமெரிக்காவை நாம் எண்ணும் போது கற்பனை செய்ய முடியாதது. பேருந்தில் அமர்ந்து சென்றதற்காக தொடங்கிய போராட்டம் பெரு வடிவம் எடுத்து கறுப்பினத்தவர்களால் பேருந்து புறக்கணிப்பு போராட்டமாக உருவாக்கி ஒரு சமுதாயமே 381 நாட்கள் பேருந்து பயணத்தை புறக்கணித்த வரலாறு பிரமிப்பாக உள்ளது.
5/8 அமெரிக்க நீதி வரலாற்றில் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் நீதி பரிபாலனம் நடந்த விதம் ஆகப் பெரும் கொடு நிகழ்வாக இருந்துள்ளது. இங்கு போராடாமல் எதுவும் கிடைக்காது, எதையும் தக்க வைக்க முடியாது என்பதை ரோஸா பார்க்ஸ் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறது.
6/8 இந்திய சாதிய கொடுமைகளும் கறுப்பர் அனுபவித்த கொடுமைகளும் இப்புத்தகம் படிக்கும் போது நம் கண் முன்னே விரிகின்றன. தனிப்பள்ளிகள், பேருந்து பயண அவமானங்கள் என நீண்டு செல்கிறது துயரங்கள். இன்னும் நிறைய எழுதலாம்.நீங்களே வாசித்து உணருங்கள்.
7/8 நூலை அருமையாக எழுதியுள்ள இணையர் மா. லைலா தேவி & ச,மாடசாமி, இருவருக்கும் நன்றிகள். தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் அணிந்துரை மிக சிறப்பு. பாரதி புத்தகாலயத்தின் சிறந்த வெளியீடுகளில் ஒன்று. 50 ரூபாய் தான். தோழர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
#நிலம்_பூத்து_மலர்ந்த_நாள் #படித்தலும்பகிர்தலும்
பாணர்களின் புலம் பெயர்தல் வழியே சங்க காலத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் ஒரு புதினம் நிலம் பூத்து மலர்ந்த நாள். மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட நூல். இதன் மூலம் மலையாளம் என்பது மிக வியப்பு தரும் ஒரு செய்தி.
1/15
2/15
மலையாளத்திலும் இதன் பெயர் நிலம் பூத்து மலர்ந்த நாள் தான் என்பது இன்னமும் வியப்பு. மூல நூலின் ஆசிரியர் மனோஜ் குரூர் அவர்களுக்கு வணக்கங்கள்.
3/15
தமிழை தாய் மொழியாக கொள்ளாத கேரளத்தை சேர்ந்த ஒருவர் சங்கப் பாடல்கள் வழியே பயணித்து இப்படி ஒரு நூலை எழுதியிருப்பது சக தமிழ் எழுத்தாளர்களுக்கு விடப்பட்ட ஒரு சவால் என்றே எண்ணுகிறேன். மிக சிறப்பு.