Human Profile picture
பெரியார் எக்காலத்திற்குமான தத்துவம். எவருக்குமான உரைகல். 🖤❤️💙
Dec 7, 2023 22 tweets 4 min read
#Michaungcyclone பாதிப்பில்....

1983 முதல் 1988 வரை சென்னையில் இருந்தவன் நான். போரூரில் தான் தங்கியிருந்தேன். Guindy, Teynampet, அண்ணாசாலை ஆகிய இடங்களில் வேலை செய்து கொண்டிருந்தேன். வேலையை முன்னிட்டு அம்பத்தூர், எண்ணூர், மணலி, பெருங்குடி ஆகிய இடங்களுக்கு செல்வதுண்டு.
1/n
2/n
#Chennai
நண்பர்களை பார்க்க கீழ்பாக்கம், அயனாவரம், பெரம்பூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கும் சென்றதுண்டு. அப்போதிருந்த சென்னைக்கும் இப்போதிருக்கும் சென்னைக்கும் மடுவுக்கும் மலைக்குமான வேறுபாடு. போரூரில் தற்போது சரவணா ஸ்டோர்ஸ் இருக்கும் இடத்தின் பின்புறம் தான் வாடகை வீடு.
Oct 10, 2023 16 tweets 2 min read
#படிப்பு_முக்கியம்
நான் பத்தாவது முடித்தவுடன் அடுத்து என்ன படிக்கலாம் என ஒன்றும் தெரியாது. அப்பா அவரது நண்பர் ஒருவரிடம் கேட்டார். அவர் Diploma, ITI எல்லாவற்றிற்கும் apply பண்ணுமாறு கூற அப்படியே நடந்தது. நான் நன்கு படிக்கும் மாணவன். எனக்கு +1 சேர ஆசை.
1/n
ஆனால் அப்பாவோ இன்னொருவர் வழி காட்டலில்.
சென்னை தரமணியில் CPT ல் MECHANICAL DIPLOMA விற்கு தேர்வாகி இருந்தேன். உடன் உள்ளூரிலேயே ITI ல் Draughtsman க்கு தேர்வு எழுத கடிதம் வந்தது. அதையும் எழுதினேன். இப்போது இரண்டிற்கும் தேர்வாகி முடிவெடுக்க வேண்டிய தருணம்.
2/n
Mar 22, 2023 16 tweets 2 min read
#அப்பா உங்களின் நினைவுகளோடு நீங்கள் வாழ்ந்த, எங்களை வளர்த்த இடம் நோக்கி வந்து கொண்டுள்ளோம். 300 km தான். நீங்கள் இருந்தால் இதற்குள் குறைந்தது இரண்டு தொலைபேசி அழைப்புகளாவது வந்திருக்கும்...எங்கப்பா இருக்க...சாப்பிட்டிங்களா..ட்ராஃபிக்கா இருக்கா...கவனமா வாங்க..
1/n
30 நொடிகளுக்கு மேல் நீங்கள் தொலைபேசியில் பேசியது அபூர்வம். கவனம்...பத்திரம்...சாப்பாடு..இவைகளே மீண்டும் மீண்டும். அப்பல்லாம் கோபம் வரும்.
எங்களின் கார் பயணம் உங்களுக்கு அவ்வளவு பதட்டம். இப்போது சொல்ல நீங்கள் இல்லையே என்று வருத்தம்.
2/n
Jan 22, 2022 8 tweets 3 min read
#Books
#படித்தலும்பகிர்தலும்
இந்த வருடத்தின் முதல் வாசிப்பு. மிகுந்த மன நிறைவையும், நெகிழ்வையும் உண்டாக்கிய நூல்.
மிகச் சிறிய நூல். 60 பக்கங்கள் தான். ஒரு புத்தகத்தின் சிறப்பு அதன் பக்க எண்ணிக்கையில் இல்லை. அது நம் மனதில், சிந்தனையில் உண்டாக்கும் விளைவுகளை பொறுத்தது.
1/8 2/8
அவ்வகையில் ஒரு புத்தகம் என்ன செய்ய வேண்டுமோ அதை சிறப்பாக செய்திருக்கிறது.ரோஸா பார்க்ஸ் பற்றி மிக சிறிய அளவில் அறிந்திருந்தாலும் இதனை படிக்கும் போது உண்டான பிரமிப்பு விவரிக்க இயலாதது. அமெரிக்க கறுப்பினத்தவர் நீதியின் முன் பட்ட கொடுமைகள் மிக வலி தரக் கூடியவை.
Dec 28, 2021 15 tweets 3 min read
#நிலம்_பூத்து_மலர்ந்த_நாள்
#படித்தலும்பகிர்தலும்
பாணர்களின் புலம் பெயர்தல் வழியே சங்க காலத்திற்கு நம்மை இட்டுச் செல்லும் ஒரு புதினம் நிலம் பூத்து மலர்ந்த நாள். மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட நூல். இதன் மூலம் மலையாளம் என்பது மிக வியப்பு தரும் ஒரு செய்தி.
1/15 2/15
மலையாளத்திலும் இதன் பெயர் நிலம் பூத்து மலர்ந்த நாள் தான் என்பது இன்னமும் வியப்பு. மூல நூலின் ஆசிரியர் மனோஜ் குரூர் அவர்களுக்கு வணக்கங்கள்.