இந்த Glass Bridge கேரளா மாநிலத்தில் உள்ள கண்டி , வயநாட்டில் உள்ளது . இது ஒரு Private Property ல தான் இருக்கு. இதற்கு கட்டணம் Rs.200(Above 4 years) . இந்த Glass Bridge க்கு ரொம்ப எதிர்பார்த்து செல்ல வேண்டாம் . ஆனால் இங்க போகற இடம் செமையா இருக்கும்.
நீங்கள் மலையேற்றம் அல்லது ஆஃப்-ரோடு திறன் கொண்ட வாகனம் மூலம் இங்கு செல்லலாம். Rs.1500 க்கு ஜீப் வசதி இருக்கு .
மாலை 6 மணிக்கு மேல இல்லை . எனவே ப்ளான் செய்யறவங்க கவனத்தில் வைத்துக் கொள்ளவும் .
சரி வயநாடு போனால் கண்டிப்பா பார்க்க வேண்டிய இடங்களை இங்க பார்க்கலாம் .
CHEMBRA PEAK :
வயநாடு போனால் இங்க போட்டோ எடுக்காமல் யாரும் வர மாட்டாங்க 💖
கல்பெட்டாவிற்கு தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில், மேப்பாடி நகரத்திற்கு அருகில், வயநாட்டின் மிக உயரமான உச்சியில் உள்ளது.செம spot
POOKODE LAKE :
இது ஊட்டி கொடைக்கானல் ல இருக்கற boat house மாதிரி தான் . couples ஆக போனால் மட்டும் இங்க முயற்சிக்கலாம் . பசங்களோடு போனால் bore அடிச்சிடும் . ஸ்பீட் boat எல்லாம் நாங்க போன டைம் ல இல்லை . பெடல் boat தான் .
Neelimala View Point
ஒரு த்ரில்லிங் ஆன அனுபவத்துக்கு இந்த இடம் கண்டிப்பா போகலாம் . இங்க போகும் போது மீன் முட்டி அருவியை கண்டு ரசிக்கலாம் . இந்த view point க்கு trekking மூலமாகவும் போலாம் னு சொன்னாங்க .. போக ஆசை பட்டால் , trekking முன்னேற்பாடு ரொம்ப அவசியம் .
இன்னொரு முக்கிய விஷயம் , safety. தயவு செஞ்சு கவனக்குறைவா மட்டும் இருந்திட வேண்டாம் . மது அருந்திவிட்டும் இந்த இடத்திற்கு செல்ல வேண்டாம் . Couples அல்லது வயதானவர்கள் உடன் சென்றால் trekking தவிர்ப்பது நல்லது .
Meenmutty Waterfalls
மேலே சொன்ன மீன் முட்டி அருவி இது தான்.Kalpetta வில் இருந்து 30km .இந்த அருவிக்கும் 2KM trekking மூலமாக செல்ல முடியும்.இது ஊட்டி வயநாடு வழியாக அடர்ந்த காட்டின் வழியே செல்லும்படி இருக்கும் .
மழை காலத்தில் trekking செல்ல அனுமதி இல்லை .வெள்ளம் எல்லாம் வந்தால் இந்த அருவிக்கும் அனுமதி இல்லை . இங்கு செல்ல சிறந்த காலம் : FEB to JULY
உங்க குழந்தைகளை கூட்டி செல்ல சூப்பரான இடம்.ஜீப் சபாரி இருக்கு .ஒருவருக்கு Rs.350 ஆகும் ஆனால் செம worth. இங்க யானை ,புலி ,கரடி , குரங்கு,மான் எல்லாம் பார்க்கலாம் .
எல்லாம் சரி, வாயநாடு போனால் எங்க தங்குவது? எங்க சாப்பிடுவது னு சொல்லவே இல்லையே னு உங்கள் கேள்வி புரிகிறது... அது தனி பதிவாக போடுகிறோம்🙏🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Home Decor and Home Improvement Products - #arivomfreedom
இந்த மாதிரி sale ல குறைந்த விலைக்கு வாங்கிய Home Decor items தான் எங்க வீட்டில் அதிகமா இருக்கு . சின்ன வீடாக இருந்தாலும் சரி , பெரிய வீடாக இருந்தாலும் சரி ... வீட்ல இந்த மாதிரி products எல்லாம் இருந்தா நல்லா இருக்கும் , கூடவே வீட்டை அழகா காட்டும் என்கிற மாதிரியான Home Decor பொருட்களை எல்லாம் இந்த thread ல கொடுத்து இருக்கேன். கூடவே வீட்டு பயன்பாட்டுக்கு உதவியா இருக்கற Home Improvement products களும் இருக்கு . உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சுக்கங்க.
#AmazonFreedomFestival - Day 1 : Early Deals Revealed
Early Deals தொடங்கியாச்சு. நம்ம எப்பவும் போல #arivomfreedom என்கிற tag ல இந்த sale ல கிடைக்கும் உண்மையான offers மட்டும் இந்த பதிவுல thread ஆ பதிவு செய்யறேன். நீங்க ஏற்கனவே கேட்டு இருக்கும் பொருட்களை கண்டிப்பா reply செய்யறேன் . . இனிமேல் கேட்கும் நண்பர்கள் நீங்க என்ன பொருள் வாங்க போறீங்க ? என்ன பட்ஜெட் என்பதையும் தெரியப்படுத்தினால் reply செய்ய உதவியா இருக்கும் .
இந்த Early Deals Price எப்ப வேண்டுமானாலும் அதிகம் ஆகிடும் (Depends on Stock) . எனவே உங்களுக்கு இந்த thread ல எதாவது பொருள் பிடித்து இருந்தா உடனே வாங்கிக்கங்க . இல்லை என்றால் "Arivom Freedom" என்கிற Folder பெயரில் Bookmark செய்து கொள்ளுங்கள்.
1. Amazon Fire TV Stick HD | TV power & volume controls, Alexa voice search #ArivomFreedom
புது வீடு கட்ட போறீங்க ? அல்லது வீட்டில் Paint அடிக்கும் ஐடியா ல இருக்கீங்க என்றால் இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க . நான் இதை Facebook ல ஒரு பக்கத்துல (Credit : Homestitik) இருந்து save செஞ்சு வெச்சிருக்கேன்.
இந்த ஊருக்கு போய்ட்டு வந்த உடனே எழுத வேண்டும் என்று தான் இருந்தேன் . ஆனா வேலை , வீட்டு சூழ்நிலை னு இவ்ளோ நாள் ஆகிடுச்சு . சரி இந்த இரண்டு நாள் பயணத்தில் நான் எந்த கோயிலுக்கு எல்லாம் போனேன் , அதன் சிறப்பு என்னனு இந்த thread ல பார்க்கலாம் .
நான் Family யா போகும் போது எவ்வளவுக்கு எவ்வளவு luxury ஆ trip plan செய்வனோ , Solo trip போகும் போது அவளுக்கு அவ்வளவு budget ல தான் plan செய்வேன் . இந்த கும்பகோணம் trip ம் பட்ஜெட் ல தான் போய்ட்டு வந்தேன் . சரி எதுல போனேன் , எங்க தங்கினேன் , எங்க எல்லாம் சாப்பிட்டேன் மொத்தம் எவ்ளோ செலவு ஆச்சு னு detail ஆ பார்ப்போம்.
நான் கோயம்பத்தூர் ல இருந்து Train ல தான் போகனும் னு முதலிலே முடிவு செஞ்சிட்டேன் . அதற்காக சில வாரங்களுக்கு முன்னையே காலை 7.15 க்கு தினமும் கோவையில் இருந்து கும்பகோணம் செல்லும் Mayiladuthurai Jan Shatabdi Express ல டிக்கெட் எடுத்துட்டேன் . டிக்கெட் விலை Rs.193/- .
இது second sitting என்பதால் அமர்ந்து செல்லும் chair seat தான் , Train உண்மையாகவே அவ்ளோ neat ஆ இருந்திச்சு . கிட்டத்தட்ட 5.30 மணி நேரம் பயணம் . ஜன்னல் சீட் தான் Book செஞ்சிருந்தேன் . போகும் போதும் வரும் போதும் மனதுக்கு தோன்றுவதை எல்லாம் எழுதினேன். அதையும் சீக்கிரம் கண்டிப்பா பதிவு செய்யறேன்.
என்னுடைய Pondicherry trip organize செய்து கொடுத்த @rajeshm1228 இவங்ககிட்ட தான் என்னுடைய இந்த trip க்கு Cab மற்றும் room suggestion கேட்டு இருந்தேன் . இவர் தான் எல்லா ஏற்பாடுகளும் செஞ்சு கொடுத்தார் . சத்தியமா இவர் உதவி இல்லைனா கண்டிப்பா இவ்ளோ கோவிலுக்கு போயிருக்க முடியாது . அவ்ளோ planned and professional. நான் கும்பகோணம் போய் சேர்வதற்கு முன்னையே டிரைவர் அண்ணா எனக்கு call செஞ்சு எல்லா update கொடுத்துட்டார் . நான் பாபநாசம் ல இறங்கிட்டேன் . செம பசி. அங்க சாப்பிட ஒரு கடையுமே இல்லை . ஒரு டீயை மட்டும் குடிச்சுட்டு நேரா கும்பகோணம் ல போய் சாப்பிட்டுக்கலாம் னு கிளம்பிட்டோம்.
Best Budget Pens
இதற்கு முன் ஒன்னு அல்லது இரண்டு பேனாக்களை பற்றி எழுதி இருக்கேன் . . கூடவே ஒரு நல்ல தரமான பேனாவை #Giveaway ஆகவும் கொடுத்து இருக்கோம். சமீபத்தில் தான் பயன்படுத்தி ரொம்ப நல்லா இருக்கு னு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த பேனாக்களை எல்லாம் Collect செஞ்சு இந்த பதிவுல கொடுத்து இருக்கேன். Students, Office goers, Journal lovers, Business People னு யாருக்கு எந்த வகையான பேனா சிறந்ததா இருக்கும் என்றும் சொல்லி இருக்கேன் . மறக்காமல் இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க. கண்டிப்பா உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும். #Arivom_Pen
1. Pentonic Gel Pen
நிறைய பேர் விரும்பி வாங்கும் Budget பேனா ல இது கண்டிப்பா இருக்கும். Pilot ink மாதிரி ரொம்ப soft ஆ எல்லாம் இருக்காது , ஆனா எழுத ரொம்ப நல்லா இருக்கும். வேகமா எழுத நினைக்கும் நண்பர்கள் இதை தேர்வு செய்யலாம் .
Ultra-Smooth Ink Flow – Writes effortlessly, no smudges, perfect for fast writing.