அன்பெழில் Profile picture
Mar 5, 2022 52 tweets 15 min read Read on X
இன்றிலிருந்து ஓர் இழை தொடங்குகிறேன். ஶ்ரீ சிவன் சுவாமிகளின் #ஏணிப்படிகளில்_மாந்தர்கள் புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை எடுத்து தொடர்ச்சியாகப் போடப் போகிறேன்(அவர் அருளாலே🙏🏻)
சிவன் சார் என்றே அழைக்கப்படும் இவர் யார்?
பிரம்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகள். செல்லப் பெயர் சாச்சு. ஆச்சார- Image
அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, உரிய வயதில், எல்லாச் சடங்குகளும் நடந்தேறின. கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் கல்வி; பதினோராம் வகுப்பு முடிந்ததும் அய்யன் தெருவில் கலை- கைவினைக் கல்விப் பள்ளியில், சித்திரப் பயிற்சி எடுத்துக் கொண்டார். புகைப்படக் கலையில் Image
திறன் கொண்டார்; கும்பகோணத்தில் ‘சிவன் ஆர்ட்ஸ் அண்ட் ஃபோட்டோ ஸ்டூடியோ’ வைத்தார். அவருக்கு மண வாழ்வில் விருப்பமில்லை. எனினும், குடும்பத்தாரின் விருப்பத்துக்கு இணங்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் அனைத்தையும் துறந்து, தனிமையை நாடினார். காஞ்சி மகாபெரியவாளின் அபூர்வமான பல படங்களை
எடுத்தவர் சாச்சுதான்! கும்பகோணம் டபீர் படித் துறையில், மகாபெரியவா காவிரியில் குளித்துவிட்டு, படியில் காவிரியை வடக்குமுகமாகப் பார்த்தபடி அமர்ந்திருக்க, பின்னே சுமார் நூறு பேர் படிகளில் சுற்றி நிற்பார்கள். இந்தப் படத்தை எடுப்பதற்கு மகா பெரியவா உத்தரவிட, உடனே சிவன் சார், காவிரியில்
இறங்கி நின்றுகொண்டு, அதனை அப்படியே படமெடுத்தார்! பிறகு, இதுபற்றிக் குறிப்பிடும்போது, “பெரியவா எனக்கு வைத்த டெஸ்ட் இது” என்றார் சிவன் சார்! சிதம்பரம் கோயிலை, அதன் 4 கோபுரங்களும் தெரியும்படி புகைப்படம் எடுத்து அசத்தியதும் அவர்தான். ஒரு கட்டத்தில் போட்டோ ஸ்டூடியோவை தன் மீது மிகப் Image
பெரிய பக்தி கொண்டிருந்த வெங்டேஸ்வரா ஸ்டூடியோ பெரியசாமியிடம் ஒப்படைத்தார். ‘கேன்வாஸ் போர்ட்ரைட்’ வரைவதில் தேர்ந்தவர் சிவன் சார். இவர் வரைந்த மகாபெரியவாளின் படம், முடிகொண்டான் வாஞ்சிநாதன் என்பவரது வீட்டில் இன்றும் உள்ளது. தன்னைப் பற்றிக் குறிப்பிடும்போது, தனது தேகத்தைக் காட்டி,
‘இது, நெருப்பும் சூடும் கொண்டது; திருவண்ணாமலை தேயு’ என்பார் அவர். நல்லி செட்டியார் சிவன் சாரின் பரமபக்தர். அவர், நாலு கிரவுண்டில் ஒரு வீடு கட்டி, ஆசாரமான ஒரு சமையற்காரரையும் ஏற்பாடு செய்கிறேன் என்றாராம். ஆனால், சிவன் சார் மறுத்துவிட்டார். நாதன்ஸ் கஃபே நாதன், அமெரிக்க நண்பர் Image
ஒருவருடன் சிவன் சாரை சந்திக்கச் சென்றார். அவரை நமஸ்கரித்தவர், பெரிய தொகைக்கு செக் ஒன்றை சமர்ப்பித்தார். அப்போது, தான் உடுத்தியிருந்த துண்டைக் காண்பித்து, “இதுவே எனக்குப் பாரமாக உள்ளது. வேறு பாரம் தேவையா?” என்று ஏற்க மறுத்துவிட்டாராம். காலப் போக்கில் நடந்த மாறுதல்கள், மக்களின்
நாகரிக மோகம், பண்பாடு- கலாசார மாற்றம் ஆகியவற்றை ஆராய்ந்து, சிவன் சார் எழுதிய கருத்துக் களஞ்சியமே, #ஏணிப்படிகளில்_மாந்தர்கள்
இந்தப் புத்தகத்துக்கு அட்டைப்படம் வரைந்தவர் ஓவியர் மணியம்செல்வன். அவர் படம் வரைந்தபோது சிறு திருத்தம் சொன்னார் சிவன் சார். “அந்தச் சிறு திருத்தம் பெரும்
மாற்றத்தை உண்டாக்கியது; படம் சாந்நித்தியத்துடன்
திகழ்ந்தது”என்ற சிலாகிக்கிறார் ஓவியர் மணியம்செல்வன். ‘எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறாக, சிவன் சாரின் இந்த நூலைப் பதிப்பிக்கும் வாய்ப்பு கிட்டியது’ என்கிறார் நர்மதா பதிப்பகம் ராமலிங்கம். சிவன் சாரின் ஜோதிட மேதாவிலாசமும் வானியல்
சாஸ்திர அறிவும், கணிதப் புலமையும் வியக்கவைக்கும். வேத வித்தான ஸ்ரீவிஜயபானு கன பாடிகள் கண்ட காட்சி இது- சிவன் சார், கைப்பிடி நெல்லை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ஒருவித ஒலியெழுப்பிக் கூவ, குருவிகள் வந்து, அவரது கையில் அமர்ந்து நெல்லைச் சாப்பிடுமாம்! இதை மகா பெரியவாளிடம் கனபாடிகள்
சொன்னதும், “சாச்சுவுக்கு மூணு பாஷை தெரியும். உனக்குத் தெரியுமோ?” என்றாராம் மகாபெரியவா. அதாவது, மனிதர்கள், மிருகங்கள் மற்றும் பட்சிகளின் பாஷையை அறிந்தவர் சிவன் சார்! இவரைப் பற்றிய முக்கிய தகவலை குறிப்பிடவில்லையே! இவர் #மகாபெரியவரின் இளைய சகோதரர் ஆவார்🙏🏻
#ஏணிப்படிகளில்_மாந்தர்கள் #சமஸ்கிருதம் #Maxmuller #ஜெர்மானியர்கள் சமஸ்கிருதம் செத்த பாஷை இல்லை. உண்மையான வேதாந்த மாணவர்கள் என்றும் சமஸ்கிருதத்தை நாடுவார்கள்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 ImageImageImage
A.K.Warder Prof of Sanskrit and head of the Deepartment of Sanskrit and Indian Studies of Toronto Canada says, “No language has so far produced a greater work than Panini’s grammar. It is the most complete description of a language ever written and it has given eternal life to
Sanskrit language.” He regretted that Sanskrit is badly neglected in India. “India ought yo have recognized Sanskrit in the constitution itself.”
The root cause lies there! No recognition for our ancient language which holds a wealth of information and all the secrets to science
technology astronomy medicine philosophy and everything under the Sun. We have become dumb by ignoring it.
#ஏணிப்படிகளில்_மாந்தர்கள் சிவன் சார் இந்தப் புத்தகத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் இருந்து மிக உயர்ந்த நிலையில் உள்ள மனிதர்களின் நடவடிக்கை, குணம், செயல், தன்மை, மனோபாவம் போன்றவற்றை பல தொகுப்புகள் மூலம் அளித்திருக்கிறார். இந்த தொகுப்புகளை பார்த்தவுடன் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் ImageImageImageImage
என்பதை வரையறுக்க முற்படுவோம். ஆனால் அதற்கு அவர் சொல்கிறார், இதை நாம் மேலெழுந்தவாரியாக முடிவு செய்ய முடியாது, ஒரு பகுதியை மட்டும் நமக்குப் பொருத்தி உயர்ந்த நிலையில் இருப்பதாக நிர்ணயித்துக் கொள்ள நேரிடும் என்கிறார். எனவே ஒவ்வொரு நிலைக்குமுள்ள நடவடிக்கை, குணம், தன்மை போன்றவைகளை Image
முழுமையாக பரிசீலித்த பிறகே நம் நிலையை தீர்மானிக்க வேண்டும் என்கிறார். எல்லா தொகுப்புகளிலுமுள்ள விவேக வரிகள், பாமர வரிகள், பாபி வரிகள் அனைத்தையும் தனியாக பிரித்து எழுதி வைத்து கொண்டு அவற்றை பரிசீலித்து நம் நிலையை எளிதாக உணர்ந்து கொள்ளலாம், விருப்பமுள்ளவர்கள் தங்களை உயர்த்திக்
கொள்வதற்கும் உதவும் என்கிறார். ஒரு சாதாரண பாபியில் இருந்து ஒரு கொடிய பாதகன் வரை % மூலம் கணக்கிட்டுக் கொள்ளவும் முடியாது என்கிறார். ஒரு பாமரன் நிலையில் இயங்கி வரும் ஒருவன் ஓரிரு பாபிகளின் வரிகளை ஏற்றுவிட்டாலும் அவன் பாபியே ஆவான், ஆனால் அவன் உள்ளத்தால் உருகி, உணர்ந்து அதற்கான
பிராயச்சித்ததை செய்து, அந்த பாவங்களை நீடிக்க விடாமல் செயலாற்றினால் அவன் பாமர நிலையை அடைந்து விட்டதாக கூறலாம் என்கிறார் சிவன் சார். பாதிக்கப்பட்டவர்களிடம் பணிந்து மன்னிப்பு கேட்பது, அவர்களின் மூலம் சரீர தண்டனை ஏற்பது, பொருள், பணம் போன்ற அபராதங்களை ஏற்பது இவையே பிராயச்சித்தமாகும்.
மனத்தினால் ஒருவனுக்கு தீங்கு இழைத்தால் கூட இவற்றை செய்ய வேண்டும். இப்படி செய்பவர்களுக்கு நரக லோகத்தில் பாவிகளுக்கான தண்டனைகள் கிடையாது என்கிறார் அவர். மேலும் நம் நிலையை நாமே பரிசீலித்து முடிவு எடுப்பதை காட்டிலும் பக்கத்து வீட்டுக்காரனிடம் அல்லது நாம் நெருங்கி பழகுபவர்களிடம் நம்மை
எடை போடச் சொல்லலாம். ஆனால் அத்தகையவர்கள் நம்மிடம் பயப்படாதவர்களாகவும் மனம் திறந்தவர்களாகவும் அமைய வேண்டும் என்கிறார். நாம் திருந்துவதற்கு இது வழி வகுக்கும். சிவன் சார் சொல்கிறார், நாம் இருக்கும் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர ஏதாவது பயிற்சி எடுக்க வேண்டுமா, மந்திரம் கற்க
வேண்டுமா என்ற சந்தேகம் இதை படித்தவுடம் நம் மனத்தில் எழும். அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது என்கிறார். ஒருவன் ஒரு நிலையை முடித்துவிட்டாலே மறு ஜென்மத்தில் அடுத்த நிலைக்கு தானாகவே உயர்ந்துவிடுகிறான். ஆனாலும் தெய்வ விவேகிகள் உலகத்துடன் ஈடுபட்டு வந்த போதிலும், சாஸ்திரம், வேதாந்தம்,
தூய மந்திரம், யக்ஞம், தெய்வீக கர்மாக்கள் போன்றவைகளை உற்ற உறவை ஏற்று வந்தனர் என்கிறார். உலகம் உய்வுத்து இயங்குவதற்கும் தெய்வீகத்தை நிலவ வைப்பதற்கும் சாஸ்திரங்கள் இன்றியமையாதவை என்பது ஆச்சார்யர்கள் கருத்து.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#ஏணிப்படிகளில்_மாந்தர்கள்
“தெய்வங்களையும் வேதத்தையும் யொழுவோம்”
அனாதி காலமாக இருப்பது வேதம். காலத்துக்கு எப்படி ஆதியும் அந்தமும் கிடையாதோ அதே மாதிரி வேதத்துக்கும் கிடையாது. காலம் நான்கு யுகங்களாக பிரிந்து அத்தொகுப்பு ஒரு மகாயுகம். இதுபோல பல ஆயிரம் மகாயுகத் தொகுப்பை கொண்டு உலகம் ImageImageImage
இயங்கி வருகிறது. ஒவ்வொரு மகாயுகத்தின் முடிவிலும் பிரளயம் ஏற்பட்டு ஜீவன்கள் மடிந்து பின் புது யுகத் தொடக்கத்தில் அதே ஜீவன்கள் உருவாகின்றன. ஒவ்வொரு யுகத்திலும் மனிதர்களின் நிலை மாறுகிறது. சுற்று சூழல் மாறுகிறது. வாழ்க்கை தரம் மாறுகிறது. இதை ஓர் ஆராய்ச்சியாளர் அவர் பார்வையில்
விவரித்திருக்கிறார். யுகங்கள் தோறும் சீரழிவு ஏற்பட்டு பின் க்ருத யுகத்தில் உத்தமமாகிறது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
ஶ்ரீ சிவன் சார் பற்றிய மேலதிக தகவல்கள். இவர் 3.10.1904 அன்று பூச நட்சத்திர புண்ய தினத்தில இவ்வுலகில் அவதரித்தார். சிவன் சாரின் பூர்வீக வாழ்க்கை பற்றி விவரங்கள் அதிகம் இல்லை ஏனெனில் இவர் ஏறக்குறைய எப்பொழுதும் மௌனமாகவே இருப்பார். திருவெண்காடு அதிஷ்டானத்தில் பரமசிவேந்திர சரஸ்வதி Image
ஸ்வாமிகள் - (காஞ்சி காமகோடி பீடம்) நந்தவனம் இவராலேயே அமைக்கப்பட்டது. தன் வாழ் நாளில் ஒரு கணிசமான பகுதியை திருவெண்காட்டிலும் கும்பகோணத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்திலும் இவர் கழிக்க நேரிட்டது. சங்கர மடத்தில் வாசம் செய்த பொழுது தனக்கு தோன்றிய ஆத்மீக விஷயங்களை தொகுக்க ஆரம்பித்தார்.
இவரால் வெளியிடப்பட்ட ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ புத்தகத்திலிருந்து இவருடைய வேதாந்த கருத்துக்களையும் வாழ்க்கையைப் பற்றி அவருடைய எண்ணங்களையும் ஓரளவு தெரிந்து கொள்ளலாம். எது ஆத்மீகம், எது ஆத்மீகம் இல்லை ’ என்ற விஷயத்தை இப்புத்தகம் நன்கு புலப்படுத்துகிறது. மற்றைய
பிரசித்தி பெற்ற வேதாந்த புத்தகங்களை போலல்லாமல் ஏணிப்படிகளில் மாந்தர்களை படிப்பவர்கள் தான் மானிட யாத்திரையில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். சிவன் சார் ஒரு அதிசயிக்கத்தக்க வாழ்க்கையை நடத்தினார். இவருடைய சீடர்கள் இவரை தக்ஷிணாமூர்த்தியின்
அவதாரமாகவே கண்டனர். ஸ்ரீ சிவன் சார் அவர்கள் 20 வருடம் நீர் அருந்தவில்லை. மூன்று விரல் அளவுதான் உணவு அதுவும் பல நாட்களுக்கு ஒருமுறை தான்.
வாழ்க்கைக்கு இன்றியமையாத ஸ்நான பான ஆகாரத்தைக்கூட தவிர்த்து, தன் வாழ்ந்த காலத்தை புனிதப்படுத்தினார் ஸ்ரீ சிவன் சார். இவர் எந்த விதமான
விளம்பரத்தையும் தவிர்த்து வந்ததுடன் தன்னிடம் போடப்பட்ட நியாயமான சந்தேகங்களுக்கு சுருக்கமாகவும், தெளிவாகவும் விடை தந்தார். சுருங்க சொன்னால் போதிப்பதை விட வாழ்ந்து காட்டியே தன் சீடர்களுக்கு வழிகாட்டினார். ஸ்ரீ சிவன் சார், 07-03-1996 அன்று, தன்னுடைய 91-வது வயதில் மஹாசமாதி அடைந்தார்.
இன்றும் அவருடைய நினைவு அவருடைய நினைவு அவருடைய பக்தர்களைப் பண்படுத்துகிறது. அவர் புத்தகத்தில் வெளியிட்டுள்ளவை நமக்கு இப்பொழுது அதிக தேவை. அதனால் தான் இந்தத் தொடர். புத்தகத்தில் இருந்து:

பெற்றவர்களுக்கு அன்னமிடாதவன் பாபி !
தெய்வத்தை உள்ளத்தில் இருத்தி உணவை ஏற்பவன் பாமரன்! Image
தாழ்ந்தோரின் உணவு பண்டங்களை ஏற்காதவன் விவேகி !
மிதத்துடன் புசிப்பவன் சிறந்த விவேகி!
சிற்றுண்டியை போல் உண்பவர் மகான்!
மருந்தளவு ஏற்கவும் கூடியவர் துறவி!!

இந்த புத்தகம் ஸ்ரீமத் பகவத்கீதையின் சாரம் என்று அவரிடமும் ஆங்கரை பெரியவா இடமும் இளம் வயதிலிருந்து சிஷ்யராக இருந்த பக்தர் Image
திரு. கணபதி சுப்பிரமணியம் சுந்தரம் கூறுகிறார். சிறந்த விவேகி, முற்றின விவேகி நிலைகள் வரை கர்ம யோகமும்--தெய்வ ஸாது, மஹான் வரை பக்தி யோகமும்--துறவி, ஞானி நிலைகள் ஞான யோகத்தையும் சொல்வது போல் இந்த புத்தகத்தில் உள்ளது. இதை அவரிடம் அவர் சொன்னபோது “ஆனால் நான் உங்களுக்கு எல்லாம் புரியற
மாதிரி சொல்லி இருக்கேன்” என்று சிவன் சார் பதில் அளித்தார் என்கிறார் கணபதி சுப்பிரமணியம். மாந்தர்கள் நாம் யாவரும் ஏணிப்படிகளில் நிற்பவர்கள். அடியில் இருந்து மேல் வரை பல தட்டு உயரம் படிக்கு படி அதிகம். உயரம் தாழ்ச்சி என்று ரகவாரியாக மக்கள் வித்யாசப்படுபவர்கள். மேல் படி, அடிப்படி,
மனிதர்களை அவர்கள் சொல் செயல் ஞானம் மூலம் பாகுபடுத்தி, பாபி, பாமரன், விவேகி, சாது, சிறந்த விவேகி, முற்றின விவேகி, தெய்வ விவேகி, தெய்வ சாது, மஹான், துறவி, ஞானி என்று ஆன்மீக லக்ஷணங்களை விவரிக்கிறார். உலகத்தின் பல பாகங்களில் இருந்து மேற்கோள்கள். காலப்போக்கில் உலக மாறுதல்கள் நாகரிக
மோகம், பண்பாடு கலாச்சார மாற்றம் எல்லாம் அவர் கவனத்தில் சென்றிருக்கிறது. அவசரப்படாமல் பொறுமையாக படிக்கவேண்டிய ஒரு முக்கிய புத்தகம்.
“மகான்களிடம் தனது குறைகளைச் சொல்லித்தான் பரிகாரம் தேடவேண்டும் என்பதில்லை அவர்களின் சந்நிதியை நோக்கி நடக்கத் தொடங்கினாலே, ஊழ்வினைகள் அலறி ஓடிவிடும்'' Image
You are what you eat என்பது பிரபலமான ஆங்கில சொலவடை. இதை முதலில் சொன்னது ஒரு ப்ரெஞ்சுக்காரர். இதன் பொருள் நாம் உண்ணும் உணவே நம் ஆரோக்கியத்தின் அளவு கோல். உணவு உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல மன ஆரோக்கியத்துக்கும் முக்கியமான ஒன்று. சிவன் சார் சொல்கிறார், “சிறந்த குணங்களுக்கும் ImageImageImageImage
உயர்ந்த புத்திக்கும் வேதாந்த பக்குவங்களுக்கும் உற்ற உணவுப் பண்டங்களையும் காய்கறி
வகைகளையும் தெய்வ விவேகிகள் பயன்படுத்தி வந்தனர்.” மேலும் துர்குணங்களை உருவாக்கும் பதார்த்தங்களை சாஸ்திரங்கள் மூலம் அறிந்து விலக்கி வைத்திருந்தனர். அவர் மேலும் சொல்கிறார், சரித்திரம் அறிந்த வரையில்
எகிப்து தேசத்திலும் பொது மக்கள் கூட ஆகார நிர்ணயத்தில் கண்டிப்பை, வரையறுக்கப்பட்டதை மட்டுமே உண்ணுவது என்கிற விதியை கடைபிடித்து வந்திருக்கின்றனர். கோதுமையில் சத்து இருந்த போதிலும் அதில் ஒரு களங்கம் இருப்பதை அறிந்து (spelt) அதை விலக்கி வைத்து மாடுகளுக்குக் கூட அதை அவர்கள்
காட்டவில்லை. மேலும் பறவைகள் பிராணிகளின் இறைச்சியில் இருக்கும் நன்மை தீமைகளை பிரித்தறிந்து வைத்திருந்து வேண்டாததை நீக்கி சரியான ஆகார முறைகளை ஏற்று வந்ததால் எகிப்து மக்கள் நேர்மையில் வழுவாதிருந்ததுடன் ஒருவர் கூட குண்டாகவோ ஒல்லியாகவோ இல்லை என்கிறார் கிரேக்க சரித்திரவியலாளர்
Herodotus. கால்நடைகளும் இவ்வாறே இருந்திருக்கின்றன. கண்ணப்ப நாயனார் தன் கண்ணையே சிவனுக்கு அர்ப்பணித்தார். அவர் புலால் உணவை பகவானுக்கு அர்ப்பணித்து வந்தாலும் அவர் தெய்வ சாது நிலையில் உள்ளார் என்கிறார் சிவன் சார்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#ஏணிப்படிகளில்_மாந்தர்கள் வேலியே பயிரை மேயும் என்பதை நாம் அனுபவித்திருப்போம். வேலி என்பது நாம் பாதுகாப்புக்காக போட்டிருக்கிறோம். அதை மதித்து காப்பது அரசின் கடமை. அவர்கள் தான் நமக்கு வேலியாக இருந்து நம்மை காக்கவும் வேண்டும். ஆனால் வேலியை பிடுங்கி திருடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் ImageImageImageImage
என்பதை விளக்குகிறார் சிவன் சார். உடைமைகளை இழந்து தவித்து வருபவர்கள் ஏராளம். இவர்கள் படும் துன்பம் இந்த அராஜக செயல்கள் செய்பவர்களால் வந்தது.
அடுத்து பகவானை ஆராதிக்க வேண்டும் என்பது நம் கடமை என்கிறார். அது நமது நன்றி கடன். அதனால் பகவானை ஆராதிப்பது புண்ணியமல்ல, ஆனால் ஆராதனை ImageImage
செய்யாமல் இருப்பது பாவம் என்று சொல்கிறார். உலக ரீதியாக வரும் அதிர்ஷ்டங்களுக்காக நாம் நற்செயல்களை செய்து புண்ணியம் அடைவதை போல ஒரு முற்றின விவேகி அதிர்ஷ்டங்களுக்காக நற்செயல்களை செய்வதில்லை, தெய்வத்தை ஆராதிக்க தவறுவதுமில்லை என்கிறார். அதே போல் ஓர் அன்னியன் எவ்வளவு தர்க்குறைவாக
பேசினாலும் சற்றும் தரம் குறையாமல், உணர்ச்சி வசப்படாமல் பதில் கொடுக்காமல் இயங்குபவன் சாது என்கிறார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#ஏணிப்படிகளில்_மாந்தர்கள் எத்தனையோ தெய்வீக புராணங்களை தெரிந்து வைத்திருந்தாலும் இராமாயணத்தை மட்டும் திரும்ப திரும்ப படிக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறோம் ஏனென்றால் நாம் எப்படி நெறியான உத்தமமான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதை இராமாயணம் சொல்லித் தருகிறது என்கிறார் சிவன் சார். ImageImage
இராமன் அவதாரமே ஆனாலும் சாதாரண மனிதனாக இவ்வுலகில் நடமாடினார். ராவணனை வதம் செய்ய சுக்ரீவன் உதவியை நாடினார். அவரே வதம் செய்திருக்க முடியும் ஆனால் சாதாரண மனிதராக இயங்கினார். மேலும் வாலி வதத்தை இக்காலத்தில் சர்ச்சையாக்குவது தவறு என்கிறார் சிவன் சார். தகாதவர்களை தண்டிக்க ஓர் அரசனுக்கு
முழு உரிமையுண்டு. அதனால் ராஜ தந்திரம் அல்லது வேறு உபாயத்தை நாடி ஓர் இக்கட்டில் அவர் தண்டித்தத முறையில் தவறில்லை என்கிறார். ஜெய் ஶ்ரீராம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 30
#நாலாயிரம்_பிள்ளையார்_கோவில் நாங்கூர் சீர்காழி அருகில்.

இந்த விநாயகப் பெருமான் அமைதியான சூழலில் ஒரு குளத்தின் அருகில் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார். சதுர் ஸஹஸ்ர கணபதி என்று வட மொழியில் வழங்கப்படும் இப்பிள்ளையாருக்கு இப்பெயர் வந்த காரணம் சுவாரஸ்யமானது. இராமாயண காலத்தில் Image
நடைபெற்ற சம்பவத்தைக் கொண்டு இப்பெயர் காரணப் பெயர் ஆயிற்று.
இவரே க்ஷேத்ர கணபதி. கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வர வேண்டும் என்ற வரத்தைப் பிரமதேவனிடம் பெற்றான். பிரமனை நோக்கிக் கடுமையான தவம் செய்ய ஒரு குகைக்குள் இருந்தான். Image
நெடும்காலமாகியும் வாலி வெளியில் வராதது கண்டு அஞ்சிய அவனது வீரர்கள் குகையை ஒரு பாறாங் கல்லால் மூடிவிட்டுக் கிஷ்கிந்தைக்குத் திரும்பி விட்டனர். இதற்கிடையில், கடும் தவத்தின் பலனாக வாலிக்குப் பிரமனின் தரிசனம் கிடைத்தது. வாலி வேண்டியவாறே எதிரியின் பலத்தில் பாதி அவனுக்கு வரும்படியாக
Read 14 tweets
Apr 30
#துர்க்கையின்_நவ_வடிவங்கள்
வன துர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வாலா துர்கா, லவண துர்கா, தீப துர்கா, ஆசுரி துர்கா என்று 9 வகையான வடிவங்களை கொண்டுள்ளாள் துர்கை Image
#வன_துர்கா
பண்டைத் தமிழ் இலக்கியங்களால் #கொற்றவை என்ற பெயரால் குறிப்பிடப்பட்டவள். அகத்திய முனிவர் வனதுர்க்கையை வழிபட்டார். ராவணனை வதைத்திடும் வல்லமையைப் பெறுவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி ராமபிரான் இந்த துர்க்கையை வழிபட்டார். வனதுர்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தம். மகாவித்யா என்று லலிதா சகஸ்ரநாமம் பராசக்தியை துதிக்கும். தன்னை வழிபடுபவர்களை சம்சாரமாகிய கட்டிலிருந்து காப்பாற்றுபவள் வனதுர்கா என்பது பக்தர்களின் நம்பிக்கை. தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் கதிராமங்கலம், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தருமபுரத்தில் வனதுர்க்கை கோயில்கள் காணப் படுகின்றன.
#சூலினி_துர்கா
துர்க்கையின் வடிவங்களில் இவள் மிகவும் சக்தி படைத்தவள். சரபேஸ்வரரின் இறக்கை ஒன்றில் இவள் வசிக்கிறாள். சிவனின் உக்ரவடிவின் தேவி. முத்தலை சூலத்தினைக் கையில் ஏந்தி இருப்பதால் சூலினி துர்க்கா எனப் படுகிறாள். திருவாரூர் மாவட்டம், பேரளம் எனும் ஊருக்கு அருகில் உள்ள அம்பர் மாகாளம் எனும் பாடல் பெற்ற தலத்தில் மாகாளி சூலினிதுர்க்கையாக காட்சி தருகிறார். இவளது திருமேனியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. ஒரு சிறிய கோலின் துணையாலேயே மாலை, ஆடை முதலியவற்றை அணிவிப்பார்கள்.
Read 10 tweets
Apr 29
#திருவிசைநல்லூர்_சிவயோகிநாதர்_கோவில்
8 ஸ்தல விருட்ச மரங்களை கொண்ட அதிசய சிவாலயம்
கும்பகோணம் அருகில் உள்ளது திருவிசைநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவில்
ஸ்தல விருட்சங்கள்
வன்னி, உந்து வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசு வில்வம் என இங்கு 8 ஸ்தல விருட்சங்கள் இருக்கின்றன.Image
இன்னும் சில அதிசயங்கள்: எல்லா சிவத்தலங்களிலும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம் முதலிலும் பின்னர் பலிபீடம், நந்தி என்று இருக்கும். ஆனால் இந்த ஆலயத்திற்குள் நுழையும் போது, நந்திதான் முதலில் உள்ளது. இறைவன் 7 முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் கருவறையில் இருக்கும் சிவலிங்கத் திருமேனிImage
மேல் பகுதியில் 7 சடைகள் காணப் படுகின்றன. சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுகிறது. தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன்Image
Read 17 tweets
Apr 29
#திருவெண்காடர்
காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்து வந்தவர் சிவநேசர். பேருக்கேற்றாற்போல சிவனார் மீது அளப்பரிய பக்தி கொண்டிருந்தார். மனைவி ஞானகலா அம்மையார். ஆணொன்றும் பெண்ணொன்றுமாக குழந்தை வேண்டும் என்பதுதான் இவர்களின் விருப்பம். பெண் குழந்தை பிறந்தது. அடுத்து ஆண் குழந்தைக்காக இறைவனை Image
வேண்டினார்கள். சிவனின் சித்தமாகவும் அது இருக்க, ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ந்த பெற்றோர், குழந்தைக்கு திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். திருவெண்காடனுக்கு 5 வயதிருக்கும் போது தந்தை காலமானார். தாயாரின் அரவணைப்பிலும் அன்பிலும் நல்ல குணமும் பக்தியும் கொண்டு வளர்ந்தார். நாளாக
ஆக, சிவபூஜை செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார் திருவெண்காடர். ஒருநாள் 'நாளைய தினம் திங்கட்கிழமை. சோமவாரம். திருவெண்காட்டுக்கு வா. அங்கே பெரியவர் ஒருவர் உனக்கு சிவலிங்கம் தருவார். அதைக் கொண்டு அனுதினமும் பூஜித்து வா' என அசரீரி கேட்டது. விடிந்ததும் அம்மாவிடம்
Read 8 tweets
Apr 28
#ஸ்ரீமத்ராமாயணம்
சீதையை பூமாதேவி பூமியை பிளந்து அழைத்து சென்றதுடன் ராமாயணம் முடிந்தது என்பதே நம் எண்ணம். ஆனால் அதற்கு பிறகு நடந்த நிகழ்வுகளை தெரிந்து கொள்வோம். மிதிலை ராஜசபையில் அரியாசனத்தில் ஒரு நாள் ஜனகர் மகாராணி சுனயனாவுடன் அமர்ந்து இருந்தபோது . அயோத்தியிலிருந்து தூதுவன் ஒரு Image
செய்தி கொண்டு வந்தான். ஓலையை பிரித்து செய்தியை வாசித்த ஜனகர் ஏதொன்றும் பேசாமல் அந்த ஓலையை அப்படியே தன மனைவியிடம் கொடுத்தார். அவர் ராஜரிஷி! அவர் முகத்தில் அந்த செய்தி எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஓலையை வாங்கி வாங்கி வாசித்த, சுனயனா தேவியின் விழிகளிலிருது, சரசரவென
கண்ணீர் அருவியென வழியத் தொடங்கியது. அவள் வாழ்வில் அடுத்தடுத்து எத்தனை எத்தனைத் துயரங்களை தாங்கிக் கொண்டு இருக்கிறாள். பட்டாபிஷேகம் முடிந்து தன் மகள் சீதை பட்டத்து ராணியாகப் பொறுப்பேற்ற போது, அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் சிறிது காலத்திலேயே, ஏதோ ஒரு துணி வெளுப்பவன் சொன்ன
Read 25 tweets
Apr 27
#சிவலிங்கம்_சாட்சி_சொன்ன_புராணம்
அந்தக் காலத்தில் காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் அரதன குப்தன் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மதுரையிலேயே வாழ்ந்து வந்தான். காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த அவன் தங்கைக்கும் தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் Image
ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை. எதிர்பாராமல் ஒரு நாள் அரதன குப்தனின் தங்கையும் அவள் கணவரும் இறந்து விட்டதாக காவிரிபூம் பட்டினத்தில் இருந்து தகவல் வர, உடனே புறப்பட்ட அரதன குப்தன் காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு
திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான். வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே ஒரு புன்னைவனம். அதில் ஒரு வன்னிமரம் அருகில் ஒரு சிவலிங்கம். சற்றுத் தள்ளி ஒரு கிணறு. கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு அங்கேயே தங்கி
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(