#இந்து_மதம்_சொல்லாய்வு 1:
"#இந்து என்பதே ஆங்கிலேயன் தந்த பார்சிமொழிப் பெயர்" என வாட்சப் பல்கலை மாணவர்கள் சொல்லிவருகின்றனர். இந்து என்ற பெயர் எப்படி ஒவ்வொரு நூற்றாண்டுகளைக் கடந்து வந்துள்ளது என்பது பற்றி சிறு ஆய்வு; 3முதல் 19ம் நூற்றாண்டு வரையான இலக்கிய கல்வெட்டு தரவுகள் விளக்கமாக
1800களில் வாழ்ந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சைவ அறிஞர் ஆறுமுக நாவலர்
எழுதிய இந்து மத விளக்க நூலில்
"ஒரு ஆற்றின் பெயரால் நமது ஒப்புயர்வற்ற மதத்திற்கு பெயர் ஏற்பட்டது என்பது பொருத்தமற்றது.
ஆதலால், இதன் உண்மைப் பொருளை அறிய வேண்டுவது அவசியமானது.
இந்து மதம் எனும் பெயர் அதன் கொள்கையை...
மேற்கொண்டு வந்ததாகும்.
ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது வருந்துவதாக இருந்தால் அதற்காக தான் வருந்தி அத்துன்பம் தனக்கு வந்ததாக கருதி அதை அகற்ற பணிபுரிபவனே இந்து. அப்பண்பு வாய்ந்த மக்களை கொண்ட மதமே இந்து மதமாகும்"
என #இந்து மதத்திற்கு வேத உபநிடதங்களில் பொருள் உள்ளதாக கூறுகிறார்
மன்னர்கள் தங்களை இந்து சக்ரவர்த்தி என கூறியது:
"சுபமஸ்து ஸ்வஸ்திஸரீ ஸரீமன் மகா மண்டலேசுவர அரி ராய விபாடன் பாஷைக்குத் தப்புவராய கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் - "இந்து ராயசுரத்ராண" இராசாதி ராசன் இராச பரமேசுவரன்"
- இரண்டாம் தேவராய மகாராயர் மெய்க்கீர்த்தி
தமிழ் இலக்கியத்தில் இன்னும் கடல் போல் தரவுகள் இருக்கின்றன...
உதவிய நண்பர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
சம்ஸ்கிருத இலக்கியங்களில்
உள்ள தரவுகளை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh