🌺🙏பூமியினும் பொறை மிக்குடையாள்
பெரும் புண்ணிய நெஞ்சினள் #தாய் எனில்
தோமிழைப்பார் முன் நின்றிடுங் காற்கொடுந் #துர்க்கை அனையவள் தாய்🔥🙏
TamilBharathiyaSanatani
Mar 13, 2022 • 9 tweets • 3 min read
#இந்து_மதம்_சொல்லாய்வு 1:
"#இந்து என்பதே ஆங்கிலேயன் தந்த பார்சிமொழிப் பெயர்" என வாட்சப் பல்கலை மாணவர்கள் சொல்லிவருகின்றனர். இந்து என்ற பெயர் எப்படி ஒவ்வொரு நூற்றாண்டுகளைக் கடந்து வந்துள்ளது என்பது பற்றி சிறு ஆய்வு; 3முதல் 19ம் நூற்றாண்டு வரையான இலக்கிய கல்வெட்டு தரவுகள் விளக்கமாக
1800களில் வாழ்ந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சைவ அறிஞர் ஆறுமுக நாவலர்
எழுதிய இந்து மத விளக்க நூலில்
"ஒரு ஆற்றின் பெயரால் நமது ஒப்புயர்வற்ற மதத்திற்கு பெயர் ஏற்பட்டது என்பது பொருத்தமற்றது.
ஆதலால், இதன் உண்மைப் பொருளை அறிய வேண்டுவது அவசியமானது.
இந்து மதம் எனும் பெயர் அதன் கொள்கையை...