காந்தியின் பெயரால் வன்முறை நிகழ்த்தும் வடக்கன்களின் காந்தியத்துக்கு எதிரான வாழ்வோடு ஒப்பிட்டால்...
<1/ஃ>
வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்து திருந்தும் தமிழர்கள் நாம் மாமனிதர்களே எனச் செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கிறீர்கள்! காந்தி, தாதா, சத்தியவான் எனப் பெயர்த் தேர்வு அசத்தல்! ‘சாராய வணிகத்தின் அரசன்’, எனும் அடைமொழி கதை பேசும் பூகோள அரசியலை ஆணியடித்து நிறுத்துகிறது. அவ்வகையில்...
<2/ஃ>
இந்தப் படம் பேசும் அரசியல் இன்றைய இந்திய அரசியல் சூழலில் இன்றியமையாதது!
மறுபுறம் படத்தின் கதைப்போக்கு...! அப்பப்பா! உள்ளம் உடைகிறது. இதுவரை இரண்டகத்தால் (betrayal) ஏற்படும் வலி எப்படிப்பட்டது என்பதைத்தான் திரைப்படங்கள் பேசியிருக்கின்றன. ஆனால் முதன் முறையாக இரண்டகம்...
<3/ஃ>
செய்பவனின் வலி எப்பேர்ப்பட்டது என்பதைப் பார்க்கும் எங்களையே உணரச் செய்து விட்டீர்கள்! கடைசியில் எல்லாவற்றையும் செய்து விட்டு வலி தாளாமல் விக்ரம் அலறிக் கத்தும் அந்த இடத்தில் நமக்கே முடியைப் பிடித்துக் கொண்டு கத்தலாமா என்றிருக்கிறது! எப்படியய்யா நீர் இப்படியெல்லாம்...
<4/ஃ>
சிந்திக்கிறீர்! அதை விட எப்படி இப்படிப்பட்ட நுட்பமான உணர்வுகளையெல்லாம் அப்படியே பார்வையாளனுக்குக் கடத்துகிறீர்!அதுவும் இவ்வளவு வேகமான திரைக்கதையில்! அலாதி!
படத்தின் ஒரே குறை கடைசித் திருப்பத்தை முன்கூட்டியே கணிக்க முடிவது. ஞானம் அவ்வளவு ஞானமுள்ளவன் இல்லை என்பதும்...
<5/ஃ>
அந்தத் திட்டம் தாதாவுடையதாகத்தான் இருக்கும் என்பதும் முன்கூட்டியே புரிந்து விடுகிறது. ஆனாலும் விக்ரம் அவர்களின் நடிப்பு தாங்கிப் பிடிக்கிறது! விக்ரம் மட்டுமா? துருவ் அப்பாவையே சாப்பிடும் அடேங்கப்பா நடிகராக இருக்கிறார். நொடிக்கொரு முகப் பாவனை காட்டும் அவர் நடிப்பு மிரட்டல்!
<6/ஃ>
கடைசியில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து சரக்கடித்தபடி ஒன்றாய் நிற்பது போல் காட்டி முடித்தது இழப்புகள் தந்த வலிக்கு ஒரு சிறு மென்வருடல்!
மிக்க நன்றி இப்படி ஒரு நுண்ணரசியல் படத்துக்காக! 🫡💝💐
<7/7>
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நெஞ்சுக்குநீதி படம் இன்றுதான் பார்த்தேன்!
நெகிழ வைத்து விட்டீர்கள்!🥲🥲
பல இடங்களில் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டி வந்தது, கதையின் சோகத்தினால் மட்டுமில்லை பெருமிதத்தினாலும்!
<1/11>
"கொட்டுற தெய்வம் கூரைய பிச்சி
கொட்டுன்னுதானே சொன்னாங்க?
கூரையுமில்லா வீட்டுல வாழும்
எங்களை எதுக்கு கொன்னாங்க?"- என்ற பாடல் வரியில் சோகத்தால் கண்ணீர். கடைசியில் எல்லோரும் ஒரே மேசையில் அமர்ந்து தேநீர் அருந்தும்பொழுது பெருமிதத்தால் கண்ணீர். கண்ணீருக்குத்தான் பாகுபாடு இல்லையே!
<2/11>
எனவேதான் சோகத்திலும் வருகிறது, பெருமிதத்தாலும் வருகிறது!🥲
ஒரு படம் பார்க்கையில் இத்தனை தடவை மெய்சிலிர்க்குமா? இந்தப் படத்தில் அது நிகழ்கிறது. கொல்லப்பட்ட நம் தங்கை அனிதாவுக்குப் படத்தில் மருத்துவ அங்கி மாட்டி அழகு பார்த்திருக்கிறீர்கள்! அந்த ஒரு காட்சியே கோடி பெறும்!
<3/11>
மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கை!
இந்திக்காரன், நேபாளி, மார்வாடி என எவனெவனோ தமிழ்நாட்டில் வந்து பிழைக்கிறான். ஆனால் கூப்பிடு தொலைவில் உணவின்றித் தவிக்கும் நம் தொப்புள் கொடி உறவுகள் இங்கு வர முடியவில்லை. வந்தால் முகாம் எனும் சிறை! இதற்கொரு...
<1/6>
முடிவு கட்ட மாட்டீர்களா முதல்வரே?
"ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்" என்று முழங்கினீர்களே? அப்பேர்ப்பட்ட நீங்களே ஈழ மக்களை இப்படியோர் இக்கட்டான சூழலில் காப்பாற்றாவிட்டால் வேறு யார் காப்பாற்றுவார்?
கப்பல் கப்பலாக நீங்கள் உணவுப் பொருள்களை அனுப்பி வைக்கிறீர்கள்தாம். ஆனால்...
<2/6>
அப்படி எத்தனை நாட்களுக்குச் செய்ய முடியும் என்பதை நீங்கள் கனிவு கூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
மாறாக மற்ற நாட்டு மக்கள் இங்கு வந்து பிழைப்பது போல் நம் தமிழ் மக்களும் இங்கு வந்து வாழ வகை செய்தால் சிறிது காலமாவது அவர்களுக்கு அது ஆறுதலாக அமையும்.