#ஶ்ரீராமநவமி#ஸ்பெஷல் வால்மீகி ராமாயண ஸ்லோகம், சுந்தர காண்டத்தில் 39 ஸர்கம் கடைசி ஸ்லோகம். ஹனுமார் சீதாதேவியிடம், கடைசியாக விடைபெற்று கிளம்பும் போது சொலலும் ஸ்லோகம்,
நாஸ்மின் சிரம் வத்ஸ்யதி தேவி தேஷே, ரக்ஷோகணை: அத்யுஷிதேதிரௌத்ரே |
ந தே சிராத் ஆகமனம் ப்ரியஸ்ய க்ஷமஸ்வ மத் ஸங்கமகால
மாத்ரம் ||
சீதாதேவியை கூப்பிட்டு, தேவியே இந்த தேசத்தில், ரொம்ப காலம் நீ வசிக்க வேண்டி இருக்காது. இந்த ராக்ஷசர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டு, நீ வெகு காலம் இங்கே தங்க வேண்டி வராது, உன் பிரியமான ராமர் வெகு விரைவில் வந்து விடுவார், நான் அவரை போய் பார்க்கும் அந்த ஒரு கொஞ்ச நேரம்
பொறுத்துக்கோ என்கிறார். நான் இங்கிருந்து திரும்பி போய் ராமரைப் பார்த்து, சீதை எங்கேயிருக்கா என்கிற செய்தியை சொல்லும் அந்த கொஞ்சம் நேரம் தான் நீ பொறுக்கணும், அவர் ஓடி வந்துடுவார், உன்னை மீட்டுச் செல்ல என்று ரொம்ப ஒரு அழகான ஸ்லோகம். நாம வசிக்கிற வீட்டில் ஏதோ தொல்லைகள், அக்கம்பக்கம்
சரியில்லை, அலுவலகத்தில் சிரமங்கள் இருந்தால் இந்த ஸ்லோகத்தை சொன்னால், “இந்த இடத்துல நீ ரொம்ப நாள் இருக்க மாட்டாய், இந்த கஷ்டத்தில் இருந்து சீக்கிரம் மீண்டு விடுவாய்” என்கிற வார்த்தைகள் இருப்பதால் (சுந்தர காண்டத்தில் எல்லாமே மந்த்ரம் தான்) அதனால் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நல்ல
இடத்துக்கு மாற்றம் ஏற்படும், என்பது இந்த ஸ்லோகத்துக்கான பலஸ்ருதி. பிறகு ஹனுமான் ல், நான் உங்களை பார்த்து விட்டு போனதற்கு அடையாளமாக, ஏதாவது ஒரு செய்தி சொல்லுங்கள். நான் அதை ராமரிடம் சொல்கிறேன் என்று கேட்கிறார். உடனே சீதாதேவி ஒரு வ்ருத்தாந்தம் சொல்கிறார்
“சித்திரகூடத்தில் இருக்கும்
போது ஒரு நாள் என் மடியில் படுத்து ராமர் தூங்கினார். அப்போது ஒரு காகம் வந்து என்னை மார்பில் கொத்தியது. அப்போது நான் ராமரை எழுப்பினேன். அவர் என் மார்பில் இருந்து ரத்தம் சொட்டுவதைப் பார்த்த உடனே, கோபமாக யார் இந்த மாதிரி பண்ணியது என்று கேட்டார். இந்த காக்கா தான் என்று காண்பித்தேன்.
அது இந்திரனோட பிள்ளை. ராமர் கடும்கோபத்துடன், ஒரு புல்லை எடுத்து, ப்ரஹ்மாஸ்திரத்தை சொல்லி, காக்காவின் மேல ஏவினார். அந்த புல்லே ப்ரஹ்மாஸ்திரமாகி அந்த காக்கையை துரத்தித்து. அவன் போய், தன் அப்பா இந்திரன் காலில் விழுந்தான். பிறகு எல்லா ரிஷிகள், தெய்வங்கள் காலிலும் விழுந்தான். அவர்கள்
எங்களால் ஒன்றும் செய்ய முடியாது, நீ ராமரிடம் அபசாரப் பட்டிருக்கிறாய். நீ ராமர் காலில் போய் விழுந்து மன்னிப்பு கேள், வேற வழியே உனக்கு இல்லை என்றார்கள். காக்கை ரூபமாயிருந்த அவன் வந்து ராமருடைய காலில் விழுந்தான், மன்னித்து உயிர்ப் பிச்சை கொடுங்கள் என்று கெஞ்சினான். சரி போ, என் இடது
கண்ணை இந்த அஸ்த்ரம் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்லிவிடு என்று ராமர் சொன்ன உடனே, அந்த அஸ்த்ரம் அவனின் இடது கண்ணை வாங்கிவிட்டது. உடனே அவன் நமஸ்காரம் செய்து ஓடி போய்விட்டான். இப்படி என்னிடம் அபச்சாரம் பண்ணின ஒருவனை, நீங்கள் இவ்வளவு கோபித்துக் கொண்டீர்களே இப்ப என்னை இந்த ராவணன்
தூக்கிக் கொண்டு வந்துட்டான், அவனிடம் இருந்து நீங்கள் என்னை மீட்க வேண்டாமா? நான் என்ன தப்பு செய்தேன் என்று சீதை புலம்புகிறாள். பிறகு துணியில் கட்டி வைத்திருந்த, சூடாமணியை, சீதாதேவியோட கல்யாண காலத்தில் அவர் அணிந்திருந்ததை எடுத்து அனுமனிடம் கொடுக்கிறாள் சீதை. இந்த சூடாமணியை ராமர்
இடம் காட்டு, இதை பாத்தால் அவருக்கு என் ஞாபகம், என் அப்பா, அம்மா அவரின் அப்பா எல்லார் ஞாபகமும் வரும். அதனால் இந்த சூடாமணியை ராமரிடம் காட்டவும் என்றாள். பிறகு இன்னொரு அந்தரங்கமான விஷயத்தையும் சொல்கிறாள். ஒரு நாள் நாங்கள் சென்று கொண்டிருந்த போது என் நெத்தியில் திலகம் அழிந்திருந்தது,
அப்போது அவர் சிகப்பான மனச்சிலா என்ற ஒரு கல்லை உறைத்து அதை எடுத்து என் நெற்றியில் இட்டு, கன்னத்திலேயும் பூசி விட்டார், இதை ஞாபகப்படுத்து என்று சொல்கிறாள். ஆனால் அதற்குப் பிறகு ரொம்ப பரிதாபமாக சீதாதேவி,
‘யத்னமாஸ்தாய துக்கக்ஷயகரோ பவ’
-எப்படியாவது முயற்சி பண்ணி இந்த கஷ்டத்திலிருந்து
என்னை காப்பாத்துப்பா, என் துக்கத்தைப் போக்கு என்கிறாள். நம் பாபத்னால நமக்கு துக்கம் வருகிறது, அந்த துக்கம் போகவேண்டும் என்றால், இது போல நான் பெரியவன் என்று நினைக்காமல், என் வினைகள் போகவேண்டும் என்று பணிவாக பகவானிடம் வேண்டிக் கொண்டால், அவர் கருணையால் நம் கஷ்டங்கள் தீருமே தவிர
சுவாமிக்கு ஒரு பூஜை செய்வது, ஒரு ஸ்தோத்ரம் சொல்வது, ஒரு கோவிலில் போய் செலவு செய்து உத்சவம் நடத்துவது போன்றவையால் மட்டும் நம் கஷ்டம் தீராது. ஸ்வாமியிடம் கணக்கு வழக்கு கிடையாது. அவர் கிருபை ஏற்படும்படியாக நாம் நடந்து கொள்ள வேண்டும். அது ஒன்றே வழி. அனுமன் சீதையின் கவலையை போக்க
ஆறுதல் சொல்லி இந்த ஸ்லோகத்தை சொல்கிறார், ‘அஸ்மின் தேஷே’
இங்கே நீங்கள் ரொம்ப நாள் வசிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்காது, இந்த ராக்ஷஸர்களின் துன்பத்தில் இருந்து உங்கள் பிரிய ராமர் வந்து உங்களை மீட்டுக் கொண்டு போவார் என்று சொல்கிறார்.
“மாருதோ தேவி ஷோகேன மாபூத் தே மனஸோsப்ரியம்”, அழாதே
அம்மா உன் மனஸுக்கு அப்ரியமான விஷயங்கள் எதையும் நீ நினைக்க வேண்டாம், “ஷசீவ பத்யா ஷக்ரேன பத்யா நாதவதி ஹ்யஸி, எப்படி சசி தேவிக்கு இந்திரன் இருக்கானோ, அந்த மாதிரி உனக்கு உன் கணவர் ராமர் இருக்கார், நீ அநாதை கிடையாது” என்று சொல்கிறார். ராமாத் விஷிஷ்டஹ கோன்யோஸ்தி, கஸ்சித் சௌமித்ரினா சம:
ராமருக்கு சமமா யாரிருக்கா, லக்ஷ்மணனுக்கு சமமா யாரிருக்கா? “அக்னி மாருத கல்பௌ தௌ ப்ராதரௌ தவ ஸம்ஷ்ரயௌ” அக்னியையும், வாயுவையும் போன்ற அவ்வளவு பராக்ரமம் படைத்த அவர்கள், உனக்கு துணையாக இருக்கிறார்கள், அதனால் நீ ஏன் கவலைப்படற, இனி கவலைப்பட வேண்டியதே இல்லை” என்று அவ்வளவு சக்தி வாய்ந்த
நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் சொல்கிறார். “தமரிக்னம் க்ருதாத்மானம் க்ஷிப்ரம் த்ரக்ஷ்யஸி ராகவம், லக்ஷ்மணம் ச தனுஷ்பாணிம் லங்காத்தவாரம் உபஸ்திதம்” இந்த லங்கையோட வாசலில் ராமரும் லக்ஷ்மணரும் தனுஷ்பாணியாக வில்லோடு வந்து நிற்பதை வெகு விரைவில் நீ பார்ப்பாய்” என்று பத்து சர்க்கதுல
இருபது தடவை சொல்கிறார். சீக்கிரம் வந்துடுவா, இதோ வந்துடுவா என்று திரும்ப திரும்ப ஆறுதலான வார்த்தைகளை சொல்கிறார்.
சீதாதேவி, “ஹனுமான், என்னால் இனி ராவணன் பேச்சைக் கேட்டுக் கொண்டு உயிரோட இருக்க முடியாது. இன்னும் ஒரு மாசம் பொறுத்துக் கொண்டு இருப்பேன், அதற்குள் நீ எப்படியாவது
அழைத்துக் கொண்டு வந்துவிடு” என்கிறாள். ஹனுமார் சரி என்று சொல்லி சீதா தேவியிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு, சூடாமணியை மடியில கட்டிக் கொண்டு, நமஸ்காரம் செய்து ஹனுமார் கிளம்புகிறார்.
பிறகு அசோக வனத்தை அழித்து, ராவணனை பார்த்து, அவனுக்கு நல்ல புத்தி சொல்லி, அவன், அவர் வாலில் தீ வைக்கறான்
அதை கொண்டு, இலங்கையையே எரித்து, அதனால் சீதைக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ என்று பயந்து, திரும்ப சீதா தேவியை வந்து பார்க்கிறார். சீதாதேவி தான் நெருப்பை எரிப்பாளே தவிர, நெருப்பு சீதா தேவியை ஒன்றும் பண்ணாது என்றும் நினைக்கிறார். ஆகாசத்துல சாரணர்களும், அதே வார்த்தைகளை
சொல்கிறார்கள். பிறகு நேரில் வந்து சீதா தேவியை பார்த்து, நமஸ்காரம் செய்துவிட்டு திரும்பப் போகிறார். கண்டேன் சீதையை, அப்படீன்னு நண்பர்களுக்கு சொல்றார்.
ஜானகி காந்த ஸ்மரணம் ஜெய் ஜெய் ராம ராம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#இறந்தகுழந்தையை_உயிர்ப்பித்த_ராமநாமம்
கோபன்னா என்பவர் சிறந்த ராம பக்தர். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். வருடாவருடம் ஸ்ரீ ராம நவமியை மிக விமரிசையாகக் கொண்டாடுவார். கோபன்னா நடத்தும் ஸ்ரீ ராமநவமி உற்சவம் என்றால் ஏராளமான பாகவதர்கள் வந்துவிடுவர். பத்து நாள்களுக்கு இரவு
பகல் பாராமல் பஜனை நடந்துகொண்டேயிருக்கும். வருபவர்கள் அனைவருக்கும் உணவுப் பந்தி நடந்துகொண்டே இருக்கும்.
கோபன்னாவுக்கேற்ற குணவதி அவர் மனைவி. ஒரு சமயம் #ஸ்ரீராமநவமி உற்சவத்தில் காலை பஜனை நடந்து கொண்டிருந்த சமயம், அன்னத்தை வடித்து வடித்து சமையலறையில் உள்ள முற்றத்தில் ஒரு
தொட்டியில் கொட்டி வைப்பது வழக்கம். உறங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையை ஓரமாக சமையல் அறையிலேயே விட்டிருந்தாள் கோபன்னாவின் மனைவி. நைவேத்ய சமயம் வந்துவிட்டதா என்று பார்க்க கூடத்திற்குச் சென்றார். மிக உற்சாகமாக பஜனை நடந்து கொண்டிருந்தது. தன்னை மறந்து சிறிது நேரம் அங்கேயே
#மகாபெரியவா
மகாபெரியவாளின் உன்னத பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர். வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர். மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டு இருப்பவர். இப்போது அவருக்கு வயது என்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம். பல வருடங்களுக்கு முன் மகானின் அருகே
அமர்ந்து சாமவேதத்தை பாராயணம் செய்து கொண்டு இருந்தார். மகான் வழக்கம் போல் பக்தர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கிக் கொண்டு இருந்த நேரம். ஒரு பக்தர் கையில் ஒரு சிறிய பையுடன் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். அவரது முறை வந்தபோது மகானிடம் ஆசிபெற்று பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அவர்
நகர முற்பட்டபோது, பெரியவரின் குரல் அவரை நிறுத்தியது. "எனக்கு கொடுக்கணும்னு கொண்டு வந்ததை கொடுக்காம போறியே"
பக்தர் திடுக்கிட்டு நின்றார். அவர் கையில் இருந்த பையில் அவர் தோட்டத்தில் விளைந்த நெல்லிக் கனிகள். அவை மகானுக்கு கொடுக்கவே அவர் கொண்டு வந்தார்.
"இங்கே நிறைய ஆரஞ்சு, ஆப்பிள்,
#ஶ்ரீகுர்ய்ஷ்ணன்கதைகள்#ஶ்ரீராமநவமி
'ராம நாமா சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை, தீய சக்திகளை, நோய்க்கிருமிகளை அழித்துவிடும். ராம நாமா அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள கோபம், வெறுப்பு, பொய், பொறாமை, சூது
போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமானவற்றை அழித்து, ராம நாம அதிர்வு சாந்தம், பொறுமை, பணிவு, உண்மை, தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ தத் பவதி’-எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்!) அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே ராம்
ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து. பிரம்மம் என்பதும் அவனே! எண்ணம், மனம், செயல், உள்ளம், உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும். இடை விடாது ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா இன்பத்தை ஶ்ரீராமன் அருள்வான் என ஸ்வாமி
#ஶ்ரீராமநவமி ராம நாமத்தின் பெருமை:
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
(கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14)
ஸ்ரீ ராமநவமியன்று அனைவரும் கம்பராமாயணத்தில் கீழுள்ள பாக்களை
பாராயணம் செய்ய வேண்டும்.
‘வேய்புனர் பூசமும் விண்ணுளோர்களும்
தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே
சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும்
நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத்
தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஓங்கவே.
ஒருபகல் உலகெலாம் உதரத்துட் பொதிந்
தருமறைக்
குணர்வரும் அவனை யஞ்சனக்
கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்ககொள் கோசலை.’
(கம்ப ராமாயணம் : பாலகாண்டம் – திரு அவதாரப் படலம்)
எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நிதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து,
#மகாபெரியவா பிராமணர்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரம். அப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு காஞ்சி மஹா பெரியவர் தன் கையால் தீர்த்தம் கொடுப்பது இல்லை. ஒரு தடவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி சதாசிவம் தம்பதிகள், கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு திரும்பி
வந்தவுடன் நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள். அவர்கள் வந்த அந்த வேளையில் பெரியவர் தன் கையாலேயே பக்தர்கள் எல்லாருக்கும் தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். சற்றும் யோசிக்காமல் சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்று விட்டார்.
[அவருக்கு இந்த ஆச்சாரம்
அனுஷ்டானம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ தெரியவில்லை!] சதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக எழுத்தாளர் நின்று கொண்டிருக்கிறார். [இவர்தான் காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவற்றைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்] காஞ்சி மடத்துக்கு ரொம்ப நெருக்கமான
#கர்மா பலவகை. இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் எடுத்திருப்போம். அத்தனைப் பிறவியிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்து வைத்துள்ளோம். அந்தத் தொகுப்பின் பெயரே #சஞ்சித_கர்மா
அதன் ஒரு பகுதியை இப்பிறவியில் அனுபவிக்கக் கொண்டு வருகிறோம். அதுவே #பிராரப்தக்_கர்மா இந்த பிராரப்தக் கர்மா
நிறைவடையாமல் இப்பிறவி முடிவடையாது, இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் விடுதலைப் பெற முடியாது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும். துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும்
ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும் அவரவர் கர்ம கதியே. இதைத் தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என நம் மதம் போதிக்கிறது. இதைத் தவிர #ஆகாம்ய_கர்மா என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல, கெட்ட செயல்களால் புதிதாக ஏற்படுவது. நம் நல்ல கெட்ட