ஸ்ரீராமரின்_68தலைமுறை முன்னோர்களை பற்றி #ராம_நவமி ஆன இன்று தெரிந்து கொள்வோம்..!!
1. பிரம்மாவின் மகன் -மரீசீ 2. மரீசீயின் மகன்- கஷ்யபர் 3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான் 4. விவஸ்வானின் மகன்- மனு 5. மனுவின் மகன் -இஷ்வாகு 6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி 7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா 9. அணரன்யாவின் மகன் -ப்ருது 10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா 11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா 12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1 13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட் 14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா 15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா 17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத் 18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா 19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப் 20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா 21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா 22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத் 23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா 25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா 26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா 27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு 28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத் 29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2 30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா 31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான் 33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா 34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா 35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு 36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன் 37. ஹரிசந்திரனின் மகன் ரோஹிதாஷ்வா 38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித் 39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய் 41. விஜயின் மகன் -ருருக் 42. ருருக்கின் மகன் -வ்ருகா 43. வ்ருகாவின் மகன் -பாஹு 44. பாஹுவின் மகன்- சாஹாரா 45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன் 46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன் 47. அன்ஷுமனின் மகன் -திலீபன் 48. திலீபனின் மகன்- பகீரதன் 49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக் 51. நபக்கின் மகன்- அம்பரீஷ் 52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப் 53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு 54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா 55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா 56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ் 57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2 59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3 60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா 61. நிக்னாவின் மகன்- ரகு 62. ரகுவின் மகன் -துலிது 63. துலிதுவின் மகன் - கட்வாங் திலீபன் 64. கட்வாங் திலீபனின் மகன் - ரகு2 65. ரகுவின் மகன் - அஜன்
66. அஜனின் மகன் - தசரதன் 67. தசரதனின் மகன் 68. #ஸ்ரீரகுராமன்
இப்படி 68 பரம்பரை கொண்டது ஸ்ரீ ராமரின் தலைமுறை
ஸ்ரீ ராமரின் குல வம்சத்தை பற்றி அறிவதே பெரும் புண்ணியம்!!!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
புல்லரிக்கும் இந்த உண்மை கதையினை படித்து முடித்த பின் கண்ணீருடன் உங்களை அறியாமல் சொல்வது.
ஸ்ரீ ராம்.. ஆம் ஸ்ரீ ராம்..
நாமம் ஒன்றே போதுமே..
ராம யோகி !
கோபன்னா என்பவர் சிறந்த ராம பக்தர். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.
வருடாவருடம் ஸ்ரீ ராம நவமியை மிக விமரிசையாகக் கொண்டாடுவார்.
கோபன்னா நடத்தும் ஸ்ரீ ராமநவமி உற்சவம் என்றால் ஏராளமான பாகவதர்கள் வந்துவிடுவர். பத்து நாள்களுக்கு இரவு பகல் பாராமல் பஜனை நடந்துகொண்டே யிருக்கும். வருபவர்கள் அனைவருக்கும்
உண்வுப் பந்தி நடந்துகொண்டே இருக்கும்.
கோபன்னாவுக்கேற்ற குணவதி அவர் மனைவி.
ஒரு சமயம் ஸ்ரீ ராம நவமி உற்சவத்தில் காலை பஜனை நடந்து கொண்டிருந்த சமயம்.
அன்னத்தை வடித்து வடித்து சமையலறையில் உள்ள முற்றத்தில் ஒரு தொட்டியில் கொட்டி வைப்பது வழக்கம்.
‘ராமன்’ என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான்.
வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆனந்தமாகவே இருந்தான்.
சுக துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவது தான் யோகம். அப்படியிருப்பவனே யோகி.
இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வது தான். சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால்,
காவல்துறையில் சாதாரண காவலராக பணிபுரிந்தார் ராம கிருஷ்ண தாஸ்.
ராம பக்தியில் தலைசிறந்தவர், ராமாயணம் சொற்பொழிவு எங்கு நடந்தாலும் அதைக் கேட்கப் போய் விடுவார் அவரின் ராம பக்தியை ஊரே புகழ்ந்தது.
ஒருநாள் வீட்டின் அருகில் ராமாயண உபன்யாசம் நடப்பதை அறிந்து கேட்க போய்விட்டார்.
நிகழ்ச்சி முடிந்தது, அப்போதுதான்,
அடடா.. இன்று நமக்கு காவல் நிலையத்தில் வேலை போட்டிருக்கின்றனர்.
அதை மறந்து, இங்கு ராமாயணம் கேட்க வந்து விட்டேனே.. என்று ராமகிருஷ்ணர் தாசுக்கு நினைவு வந்தது.
அவசர அவசரமாக வீடு திரும்பி,
சீருடைஅணிந்து காவல் நிலையத்திற்கு வந்தார். இவர் போன நேரம்,
காவல் நிலைய உயர் அதிகாரி ஆங்கிலேயர், தன் அறையில் இருந்தார். அதிகாரியிடம் போய், தயவு செய்து, என்னை மன்னிக்க வேண்டும்.
இன்று நான் வேலை பார்க்கத் தவறிவிட்டேன்.
தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில் லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து ஐந்து வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார்.
விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்துவிட்ட அந்தப் பெண்ணை எல்லோரும்
துக்கிரி அதிர்ஷ்டம் கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே வர இயலாது.
பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர்.
நிர்கதியாக இருக்கும் பெற்றோர்களுக்கு தூரத்து உறவினர்கள் உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர்.
யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது.