நேற்றைய #WorldBookDay#SpaceMarathon ரொம்ப அருமையா இருந்தது. நல்ல initiative. புத்தகத்தை படிக்க தானே செய்யணும் எதுக்கு அதை பற்றி பேசணும் அப்படினு சிலர் கேட்கலாம். புத்தகத்தை பற்றி இம்மாதிரி எல்லாம் பேசாமலே இருப்பதால் தான் இன்னிக்கு புத்தக வாசிப்பு ரொம்ப கம்மியாகிட்டே வருது.
முன்னாடி எல்லாம் இலக்கிய கூட்டம், இல்ல புத்தக கண்காட்சி ல ஒரு ஓரத்துல மேடைல ஒருத்தர் பேசுவார் கீழ நாலு பேரு உக்காந்து கேட்பாங்க. இலக்கிய கூட்டம்லயும் பெருசா ஆட்கள் இருக்கமாட்டாங்க. இருக்கறவங்களும் வயதான மக்கள் தான் இருப்பாங்க.
ஆனா இன்னிக்கு புத்தக வாசிப்பு அதிகமா ஆகி இருக்கு. இந்த வருடம் சென்னையில் மட்டும் 12 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆகி இருக்கு அதற்கு காரணம் social media influence தான். நிறைய புத்தக வாசிப்பாளர்கள் நடுவுல கொஞ்சம் sleep mode க்கு போயிருப்பாங்க including me.
அவங்களை தட்டி எழுப்பினது இந்த social media தான். இலக்கிய கூட்டம் மாதிரி boring ஆ இல்லாம நேற்றைய spaces ரொம்ப சுவாரசியமா பலவித perspectives ஓட பலர் புத்தகங்களை பற்றி பேசும்போது கேட்க ரொம்பவே மகிழ்ச்சியா இருந்தது.
இந்த இறை நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள் இல்லையா? அவங்க ஆளாளுக்கு ஒரு கான்செப்ட் வச்சு இருப்பாங்க. உங்களுக்கே தெரியும் 1008 மதம் ஒவ்வொரு மதத்திற்குள்ளும் 1008 உட்பிரிவுகள் இது போக தனிப்பட்ட நம்பிக்கைகள் வேறு.
நாம எதாவது ஒரு கருத்துக்கு எதிர் கருத்து சொன்னா நான் அப்படி சொல்லவே இல்லையேன்னு சொல்லிடுவாங்க. இல்லைங்க உங்க மதத்தில் இப்படி ஒரு கருத்து இருக்கே என்றால் அது தப்பா புரிஞ்சுகிட்டு சொல்றாங்க அது அப்படி கிடையாது ன்னு சொல்லிடுவாங்க.
இல்ல கரெக்ட்டா அவங்க பின்பற்றும் மதப்புத்தகத்தில் இருந்து quote பண்ணி காமிச்சா அது மொழிமாற்றம் செய்யும்போது வந்த தவறு, அல்லது அதன் உள்ளர்த்தம் வேறு அது உனக்கு புரியாது என்று சொல்லிடுவாங்க.
KGF மற்றும் Beast இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வந்தது. ரெண்டுமே mass hero action movie இரண்டிலும் logic இல்லை என்றாலும் ஒரு படம் மட்டும் ஆஹா ஓஹோ என்றும் இன்னொன்று ச்சே இப்படி ஆயிடுச்சே என்றும் பேர் வாங்கிவிட்டது.
அது ஏன் இரண்டுமே logic இல்லை அப்படினாலும் ஒண்ணு மட்டும் ஆஹா ஓஹோ இன்னொன்னு ச்சே?
ஒரு சாரார் வெளியூர் ஆட்டக்காரங்களை எல்லாம் நீங்க ஆஹா ஓஹோ ன்னு சொல்லுவீங்க உள்ளூர் ஆட்டக்காரங்களை மதிக்க மாட்டீங்க பாகுபலி எல்லாம் என்ன logic இருந்ததா அதை ஆஹா ஓஹோ ன்னு சொல்லலையா?
யாஷ் அடிச்சா வரது ரத்தம்... நம்ம தளபதி அடிச்சா வரது தக்காளி தொக்கா? என்று பொங்கினார்கள். கரெக்ட் தான்.
சில பேரு, screenplay முக்கியம் திரைக்கதையின் வேகம் லாஜிக்கை மறக்கடிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள் அதுவும் சரி தான். இந்த இரண்டும் சரிதான். மூணாவதா ஒண்ணு இருக்கு.
சித்திரம் பேசுதடி படத்துல சாரு அப்பா எப்போ பாரு சுத்தம் பண்ணிகிட்டே இருப்பாரு. அது ஒரு மனநோய். பெரும்பாலும், எதாவது ஒரு பெரிய தவறு செய்தவங்க அந்த guilty conscious ல இருந்து தப்பிக்க கையை கழுவிகிட்டே இருக்கிறது... வீட்டை துடைச்சுக்கிட்டே இருக்கிறது...
இப்படி over ஆ சுத்தம் செய்யறது மூலமா தான் செய்த தவறு போய்டுச்சு நாம இப்போ சுத்தமா தான் இருக்கோம் அந்த தப்பு என்கிற அழுக்கை நாம துடைச்சுட்டோம் என்பது போன்ற உளவியல் சிக்கல்ல மாட்டிப்பாங்க. இதே தான் "அதீதமா" தன்னை பக்திமானா காட்டிக்கிறவங்க கிட்டயும் இருக்கு அப்படின்னு நினைக்கறேன்.
நான் ரொம்ப சிறந்த பக்திமான் என்று எப்போதும் நிரூபித்து கொண்டு இருக்க முயலுபவர்கள் ஏதேனும் ஒரு பெரிய குற்ற உணர்வில் இருந்து வெளிப்பட முயலுகிறார்கள். அல்லது இனிமேல் ஒரு பெரிய குற்றம் செய்ய போகிறார்கள் அதற்கு ஒரு façade தான் பக்திமான் தோற்றம்.
யாரிடமாவது "அறிவியல் என்றால் என்ன? என்று கேட்டால் அல்லது அறிவியலில் இருந்து ஏதாவது சுட்டிக்காட்ட முடியுமா?" என்றால் ராக்கெட், கப்பல்கள், விமானங்கள் அல்லது test tube baby மற்றும் மரபணு கையாளுதல் போன்றவற்றைப் பற்றி தான் பலர் பேசுகின்றனர்.
விஞ்ஞானிகள் என்றால் புதிய விஷயங்களைப் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்பாளர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இம்மாதிரியான புரிதல் இருப்பதால் தான் நீ atheist ஆ அப்போ science ல என்ன mark என்பது போன்ற கேள்விகளை கேட்கிறார்கள்.
அறிவியல், என்பது அறிவின் தேடலாகும். அனைத்து வகையான அறிவு, எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அறிவு.
இந்த காரணத்திற்காக அறிவியல் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது:
மதத்தினால் சிறுமைப்பட்டாலும், சாதியால் ஒடுக்கப்பட்டாலும் பெண்கள், சூத்திரர்கள் ஏன் மதத்தை விட்டொழிக்காமல் அதை தாங்குகிறார்கள்? மதம் ஒரு சிறந்த மூளைச்சலவை நிறுவனம். அதுவும் பிறப்பில் இருந்தே செய்யப்படுவதால் மிக எளிதில் அதை விட முடியாது.
மதம், அது எந்த மதமாக இருந்தாலும் மக்களை கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய mould செய்கிறது. அதிகாரத்திற்கு அடிபணிய சொல்கிறது. தெய்வம் (தெய்வதுடன் பேசுபவர்கள்), அரசன், குடும்ப தலைவன் என்றும், சாதி படிநிலைகள் மூலமாகவும் அதிகார படிநிலைகளை நிறுவுகிறது.
அதீத பக்தி கொண்டவர்கள் இந்த அதிகார படிநிலைகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள்.
மதம் என்பது நமது மூளையை program செய்து இருப்பதால் ஒரு பெண் ஆணுக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டும், அரசனுக்கு கீழ் படிய வேண்டும், மேல் சாதிக்கு கீழ் படிய வேண்டும் அப்படி கீழ்படிதல் தான் நல்ல குணம்