குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்க வேண்டிய முக்கிய பாதுகாப்பு பொருட்கள். 1. Baby proofing edge and corner guards.கதவிடுக்கு, கூரான மேசை முனைகள்,டைல்ஸ் முனைகள்னு இதை ஒட்டிக்கலாம்.அதிலேயே ஒட்டும் தன்மையோடுதான் வரும்.
கட்டில் திருப்பி போட்ருக்கேன்.கூரான கால்பக்கம் தலைக்கு வைக்கிற மாதிரி இருக்கும்.என் குழந்தை எப்பவும் இந்த டேப்பை எடுத்து போடுவதே வேலையா வச்சிருப்பான்.ஒரு நாள் இரவு அதை எடுத்து ஒட்டி வச்சேன்.அடுத்த 5 நிமிடங்களில் நடந்து விளையாடிட்டு இருந்தவன் அது மேலேயே கால் தடுக்கி விழுந்தான்.
நெற்றி சரியாக டேப் மேலேயே விழுந்தது.எனக்கு கொஞ்ச நேரம் எதையும் யோசிக்கவே முடியலை.அதை ஒட்டாமல் மட்டும் வச்சிருந்தேன்னா அந்த இரவு எவ்வளவு இரத்தம் போயிருக்கும். மருத்துவமனைக்கு ஓடிருப்போம்னு நினைச்சி பார்க்கவே முடியலை.
அடுத்த நாளே டபுள் டேப் மற்றும் அனபாண்ட் போட்டு இன்னமும் ஸ்ட்ராங்கா இருப்பது போல் ஒட்டி வச்சிருக்கேன். ஒரு பெரிய காயம் ,எலும்பு முறிவுன்னு அந்த இரவு குழந்தையை காப்பாற்றியது இந்த பொருள்தான்.
2.Bed rail guard barrier குழந்தைகள் இரவில் உருண்டு விழுந்திடுவாங்க. சின்னப்பையன் 8 மாதத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்துட்டான்.அப்போது அமேசானில் தேடிய போதுதான் இந்தப்பொருள் கிடைத்தது ரூ 2000 ல் இருந்து கிடைக்கும்.சுலபமா கட்டிலில் மெத்தைக்கு அடியில் ஸ்க்ரூ கொண்டு மாட்டிக்கலாம்
பகலில் தடுப்பை கீழே இறக்கியும் வைத்துக்கொள்ளலாம். அட்ஜஸ்டபிள் டைப்பில் கிடைக்கிறது. இது மாட்டின பிறகு பெரிய பையனுக்கு அந்தப்பக்கம் தலகாணி அணை கட்டுவது போய் கட்டிலிலும் தாராளமாக இடம் கிடைத்தது.
3. Two wheeler child safety belt.நம்மூர்களில் சேப்டின்னா என்னான்னு கேட்பாங்க. வெளி நாடுகளில் கார்களில் ஒரு குழந்தை பயணிக்கவே அத்தனை சேப்டி ரூல்ஸ் இருக்கு. இங்கே பைக்கில் பெட்ரோல் டேங்க் மேலே உட்கார வச்சி தூங்க போட்டு சிட்டி ட்ராபிக்கில் பைக் ஓட்டுபவர்கள் பார்த்தா கோவமா வரும்.
சில வருடங்கள் முன்பு மடியில் இருந்து தவறி குழந்தை விழுந்தது தெரியாமல் ரொம்ப தூரம் போய் திரும்பி வந்து பார்த்தால் குழந்தை உயிரோடு இல்லை. அந்த கோரத்தை முழுசா சொல்லவே முடியலை. இந்த பெல்ட் 300 ரூபாயில் இருந்து கிடைக்குது.
பெரியவனுக்கு வாங்கினது. 5 வருடங்களாக அப்படியே இருந்தது. இப்ப சின்னவர் இதில்தான் நகர்வலம் வருவது. பைக்கில் போகணும்னா பெல்டை அவனே எடுத்து குடுப்பான்.எந்த பயமும் இல்லாமல் 1 வயசு குழந்தையை பைக்கில் அழைச்சிட்டு போயிட்டு வர முடியுது.இன்னொருத்தர் உதவி தேவையில்லை.
பள்ளிக்கு குழந்தைகளை அழைச்சிட்டு போறவங்க , சிட்டிக்குள் அடிக்கடி குழந்தையை பெட்ரோல் டேங்க் மேல் வச்சி வண்டி ஓட்டுறவங்கன்னு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டில் தவறாமல் வாங்கிக்கங்க. குழந்தைகள் சேப்டி முக்கியம். #kidssafety#Easyhome
படிக்கட்டு ,பால்கனி, போன்ற இடங்களில் குழந்தைகள் பாதுகாப்புக்கு இவற்றை முயற்சி செய்யலாம். #childsafety#Easyhome
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தொடர்ச்சியாக சந்தையில் #ITstocks ஏன் விழுகுதுன்னு சிலருக்கு புரியாமல் இருக்கலாம். என்னோட ஒரு சின்ன அனாலிஸிஸ் இங்கே ஷேர் பண்றேன்.எவ்வளவு நல்ல செக்டார் அல்லது கம்பனியாக இருந்தாலும் தொடர்ச்சியாக மேலே போகாது. கீழேயும் வராது.நீண்ட காலத்தில் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
#overbought ,#oversold இது கண்டிப்பாக தெரிஞ்சிருக்கணும். நான் இருக்கும் வாட்சாப் குழுமத்தில் மெட்டல் ஸ்டாக்ஸ் ,மற்றும் ஐடி ஸ்டாக்ஸ் முன் கூட்டியே வெளியேறச் சொல்லிட்டேன். கோவிட் 2020 மார்ச் இறக்கத்தில் இருந்து நிப்டி மற்றும் பல இண்டெக்ஸ் ரிட்டர்ன்ஸ் எடுத்து பார்த்தாலே தெரியும்.
2020 மார்ச் 25 க்கு பிறகு சந்தை ஏற ஆரம்பித்தது.லாக் டவுணில் பல தொழில்கள் பாதிக்கப்பட்டபோது வீட்டில் இருந்து பணி செய்யும் ஆப்சன் மற்றும் அதிகப்படியான மெடிக்கல் தேவைகள் கொண்டு முதலில் ஏற ஆரம்பித்தவை பார்மா மற்றும் ஐடி பங்குகள். மெதுவா ஒவ்வொன்னா மேலே வர லாக்டவுணில் சந்தையில் நுழைந்த
பங்குச்சந்தை இப்பொழுது இறக்கத்தில் இருக்கிறது. நீண்ட கால முதலீட்டுக்கு பங்குகள் வாங்க சரியான நேரம். Large cap ,IT துறை பங்குகள் விலை குறைவாக இருக்கிறது. மாதம் 10,15,20 ஆயிரம் வரை என்னால் சேமிக்க முடியும் ஆனால் எப்படி எங்கே முதலீடு பண்ணுவதுன்னு குழப்பமாக இருக்கிறதா?
பெருகி வரும் பண வீக்க விகிதம் குறைந்து வரும் வங்கி வட்டி விகிதம் இதெல்லாம் சமாளிக்க பங்குச்சந்தை தவிர வேறு எங்கும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. ஈமு கோழி மாதிரி யாராச்சும் மாதம் இவ்வளவு பணம் தருகிறோம் எங்களிடம் உங்கள் பணத்தை லட்சக்கணக்கில் முதலீடு பண்ணுங்கன்னு சொல்வாங்க.
இன்னும் நாலு பேரை சேர்த்து விடுங்க உங்களுக்கு போனஸ் தரோம்னு சொல்வாங்க. இந்த மாதிரி வசீகர விளம்பரத்தில் மாட்டி மொத்தமும் இழந்தவங்க ஊருக்குள் நிறைய பேர் இருக்காங்க. உங்க பணத்தை நீங்க மட்டுமே முதலீடு பண்ணுங்க. உங்க அக்கவுண்டில் பணம் இருக்கும்வரை மட்டுமே அதற்கு பாதுகாப்பு.
குடும்பத் தலைவிகளுக்கு ப்ரிட்ஜில் இட்லி மாவு இல்லேன்னா தலைவலி வந்திடும். எனக்கு 2 குழந்தைகள் வீட்டில் வச்சுக்கிட்டு மாவு எப்பவும் இருந்தே ஆகணும்.ஆனா 2 நாள் தான் மாவு நல்லா இருக்கும். அப்புறமா அதிகமா புளிச்சி தண்ணி சேர்த்துன்னு நிறைய சோதிச்சது.இன்வெஸ்ட்மெண்ட் கு ஒரு ஸ்டாக் வாங்க
எவ்வளவு ஆராய்வேனோ அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் சில பல ஆராய்ச்சிகள் மூலம் ஒரு வாரமானாலும் புளிக்காத இட்லி மாவு சூட்சுமம் கொண்டு வந்துட்டேன்.மாவு தீர்ந்து போகும் கடைசி நாளில் கூட மிருதுவான புளிக்காத இட்லி வர வைக்கும் இட்லி மாவு அரைப்பது எப்படி?
உதயம் உளுந்து,AST ரக குண்டு இட்லி அரிசி . அரிசியும் உளுந்தும் 4:1 அளவில் எடுத்துக்கணும். 1 ஸ்பூன் வெந்தயம்.வெந்தயத்தை அரிசியில் சேர்த்து ஊற வைக்கணும். 4-5 மணி நேரங்களாச்சும் அரிசியும் உளுந்தும் ஊறணும்.மாவு அரைக்கும் நேரத்தையும் எப்படி மிச்சப்படுத்தலாம்னு சொல்றேன்.