Mathar_மதார் Profile picture
House Wife l 2 Kids | B.E (Civil) | Stock Market | Short Term & Long Term Investment | Technical Analyst | Not Sebi Regd | Views are study purpose only
Feb 6 13 tweets 2 min read
Stock market investment is not only finding a Multibagger.

1000,2000% ரிட்டர்ன் எடுத்தால்தான் சரியான முதலீடு என்பது கிடையாது. நாம் முதலீடு செய்யும் ₹10000 ரூவாய்க்கும் ₹2000 ரூவாய் லாபமாச்சும் வரணும். -₹5000 நட்டம் குடுக்கக்கூடாது. 1/ Which one is good Fundamental or Technical Analysis?

நாம் செய்யும் முதலீட்டு பணத்தை சார்ந்தது. மார்க்கெட்டில் இவங்கள்ளாம் பெரிய அளவில் சம்பாதித்தவர்கள்னு சொல்லப்படுபவர்களின் ஆரம்பகால முதலீட்டை எடுத்து பார்த்தால் சில லட்சங்கள் ,கோடிகளில் ஆரம்பித்திருக்கும். 2/
Dec 31, 2023 20 tweets 3 min read
ஒவ்வொரு முறை ஸ்டாக் மார்க்கெட் வெபினார் பற்றிய போஸ்ட் போடும்போதும் ஆர்வமாக வந்து மேற்படி விவரங்கள் கேட்பாங்க. முன்னர் மெசேஜ் மாதிரி அனுப்பினேன். அதையும் படிக்க மாட்டேங்குறாங்கன்னு 1 பக்க போஸ்டர் அனுப்புறேன். அதில் இருக்கும் தகவல்கள். 1/ தேதி
நேரம்
Fundamental topic
Technical Analysis topic
What you get after class
Payment

இதில் குறிப்பிட்டிருக்கும் விசயங்களையே திரும்ப கேட்பாங்க.ரெக்கார்டிங் தருவீங்களா? சந்தேகம் கேட்டால் சொல்லித் தருவீங்களா?ஷேர் பண்ணிருப்பதை திரும்ப படிக்கச் சொல்லுவேன். 2/ Image
Nov 22, 2023 11 tweets 4 min read
Stock market
IPO Application

NSE/BSE ல் இருக்கும் பங்குகளை அலசி வாங்குவது சுலபம். ஒரு ப்ரைவேட் நிறுவனம் பப்ளிக் நிறுவனமாக தங்களிடம் இருக்கும் பங்கின் சில % விற்பது IPO. தொழில் விரிவாக்கத்துக்கு முதலீடு திரட்ட இந்த மாதிரி வருவாங்க. 1/ சிலர் Listing gain கு வாங்குவாங்க. சிலர் நீண்ட கால முதலீட்டுக்கும் வாங்குவாங்க. நீங்க எதற்காக அப்ளை பண்றீங்க என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

சரி மார்க்கெட்டுக்கு வரும் எல்லா IPO ம் வாங்கலாமானா ? இல்லை. 2/
Oct 20, 2023 6 tweets 2 min read
#Stockmarket
#Investing
2 வருடங்களாக என்னைத் தொடர்ச்சியாக பாலோ பண்றவங்களுக்குத் தெரிந்திருக்கும். பணம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து கொண்டேதான் இருக்கும். மார்க்கெட் கேப்,செக்டார் என்று ரொட்டேசன் நடக்கும் என்று பதிவு பண்ணிட்டு இருக்கேன்.1/ Money control இந்த ஆர்ட்டிகிள் கிட்டத்தட்ட அதையேதான் சொல்லிருக்கு. 2/
moneycontrol.com/news/business/…
Oct 5, 2023 13 tweets 2 min read
ரொம்ப நாளா எழுத நினைத்த போஸ்ட்.

நாங்க பெருங்குடியில் முதல் தளத்தில் குடி இருந்தோம்.அருகில் இருந்த வீட்டின் மொட்டை மாடியில் சின்னப்பசங்க ட்யூசன் படிக்க வருவாங்க. எங்க ஹால் டிவி பால்கனி வழியா அந்த மொட்டை மாடிக்கு தெரியும்.1/ சிவகார்த்திகேயன் நடிச்ச படங்களின் பாட்டுன்னா பசங்க எட்டி எட்டி பார்ப்பாங்க.அவ்வளவு கொண்டாட்டமா ரசிப்பாங்க.எதிர் நீச்சல்,வருத்தப்படாத வாலிப சங்கம் பாடல்கள் செம ஹிட்டு.2/
Apr 1, 2023 5 tweets 3 min read
க்ளாஸ் எடுக்கிறவங்க அவங்க ட்ரேட் சரியா பண்ண மாட்டாங்கன்னு இங்கே சிலருக்கு எண்ணம் இருக்கு. என்னோடது சின்ன முதலீடுதான்.நான் அதில் நீண்டகால பங்குகள்,மியூச்சுவல் பண்ட் போக மொத்தமாகவே 30-60 ஆயிரங்கள் மட்டுமே Short term ட்ரேடுக்கு எடுத்துப்பேன். ஒரு பங்கில் ப்ராபிட் புக் பண்ணி வெளி வந்த பின்புதான் இன்னொன்றில் எண்ட்ரி எடுப்பேன்.2022 பிப்ரவரி முதலே மார்க்கெட் அந்தளவு சரியாக இல்லை.இருந்தும் நான் குறிப்பிடக்கூடிய லாபம் எடுத்திருக்கேன்.இந்த மார்க்கெட்டிலேயே லாபம் எடுக்க முடியுதுன்னா புல் மார்க்கெட்டில் 📈🔥.
Mar 18, 2023 20 tweets 7 min read
குறுகிய கால முதலீடு (short term) பங்கு எப்படி அனலைஸ் செய்து வாங்குவது???.

நான் வாங்கினதில் இருந்து ப்ராபிட் புக் பண்ணின வரைக்கும் தொடர்ச்சியாக இங்கே பதிவிட்ட ட்வீட்டுகளின் தொகுப்பு.

Technical analysis for #Mahindracie 80% நேரம் Fundamental Analysis கண்டிப்பாக பண்ணிருவேன். அது அந்தப் பங்கு வாங்கி ஒருவேளை இறங்கினாலும் (If the overall market trend is down)சில நாட்கள் கழித்து மேலே வருவதற்கு Holding support தரும்.இந்தப்பங்கு 2 மாதங்களா கவனித்து வந்தேன். Market is 80% waiting 20% only Execution.
Mar 18, 2023 6 tweets 1 min read
மீன் குழம்பு ரெசிபி முன்னர் யாரோ கேட்ருந்தீங்க.
அரைக்கிலோ மீன் அளவுக்கு சொல்றேன்.
புளி பெரிய எலுமிச்சை அளவுக்கு தண்ணீரில் ஊற வைக்கணும்.
அரைக்க :
தேங்காய் 3 சில்
அரை பெரிய வெங்காயம்.
மிக்சியில் 1 ல் வைத்து அரைக்கணும்.ரொம்ப மை போல அரைக்கக்கூடாது.90% அரைக்கணும். நறுக்க - தாளிக்க:
1 பெரிய சைஸ் தக்காளி
1/2 பெரிய வெங்காயம்
2 பச்சை மிளகாய்
கைப்பிடி கறிவேப்பிலை.
மண் சட்டியில் தாராளமாக எண்ணைய் விட்டு கடுகு 1 ஸ்பூன் தாளிச்சி நறுக்கி வைத்தவை ,கறிவேப்பிலை சேர்த்து வதக்கணும்.
Mar 14, 2023 15 tweets 2 min read
ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு சாதாரண மக்களிடம் இருப்பது குறைவு. ஆனா மெத்தப்படிச்ச கம்பனி நிர்வாகிக்கும் தெரியலையா அல்லது அதை ஒரு தற்காப்பு ஆயுதமாக சிம்பதிக்கு பயன்படுத்துறாரான்னு தெரியலை.1/ ஆட்டிசம் என்பது நோயல்ல அது ஒரு பிறவிக்குறைபாடு. ஆட்டிசம் குழந்தைகளை ட்ரீட்மெண்ட் குடுத்து சரி பண்ண முடியாது. அவர்களின் நிலைக்கேற்ப தெரபி தான் குடுக்க முடியும். 2/
Mar 13, 2023 9 tweets 1 min read
மார்ச் 8 பையன் பள்ளியில் பெண்கள் தின விழாவுக்கு காலையில் தலைக்கு குளிச்சிட்டு நல்லா ட்ரையர் வைத்து காய வச்சிட்டுதான் போனேன்.எனக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் ஈரத்தலையோட இருக்க மாட்டேன். தலை துவட்டினதும் ட்ரையர் போட்ருவேன். பள்ளியில் ஏசி இருந்தது. 60-70 இருந்திருப்போம்.மாலை தலைக்கணம்,வலி ஆரம்பித்தது.இரவில் தூக்கத்தில் தொண்டை இன்பெக்சன் ஆனது. எச்சில் முழுங்கிட்டே இருந்தேன்.மார்ச் 9 தலைக்கணம் அதிகமாச்சு.ஏற்கனவே குழந்தைக்கு சளி இருந்ததால் ஆஸ்பிடல் போனோம்.
Mar 12, 2023 7 tweets 3 min read
How Pump and Dump working.
நீங்க இதுவரை கேள்வி பட்டு இருக்காத ஒரு penny stock முக்கியமாக 90% BSE stock ஆக இருக்கும். ஏதாவது ஒரு யூ ட்யூப் சேனலிலோ, டெலிகிராம் சேனலிலோ இதை வாங்குங்க,Multi bagger னு சொல்லுவாங்க.எந்த ஒரு பங்கை ஒரு பப்ளிக் மீடியாவில் வாங்கச் சொல்றாங்களோ உசார் ஆகணும் இங்கேதான் Pump and Dump வரும். தினம் அப்பர் சர்க்யூட்டில் இருக்கும். மேலே மேலே போக வைத்து ஆர்வத்தை தூண்டுவாங்க. நடுவில் சில நாட்கள் சர்க்யூட் உடையும் அது புதியவர்களை உள்ளே வர வைப்பாங்க. சில நாட்களிலேயே 200-300% அசால்டாக வரும்.
Feb 1, 2023 5 tweets 1 min read
சேமிக்காதீங்க செலவு பண்ணி அமெரிக்கா போல கடனட்டையில் காலம் தள்ளுங்கன்னு சொல்றாங்க.அதுக்காக சேமிக்காமல் மட்டும் இருக்காதீங்க.மியூச்சுவல் பண்ட்,ஈக்விட்டி இருக்கு. 20 வருடத்துக்கு LIC கட்ட தயக்கம் இல்லை. Equity, mutual fund ல் மட்டும் உடனே லாபம் கொட்டணும்னு ஏன் எதிர்பார்க்கிறீங்க.தினம் தினம் எடுத்து பார்க்காமல் ஒரு நீண்ட கால சேமிப்பா மட்டும் பாருங்க.
Jan 29, 2023 8 tweets 2 min read
குழந்தைகள் மேல் மறைமுகமாக செலுத்தப்படும் வன்முறை பற்றி நாம் நிறைய உரையாட வேண்டி இருக்கிறது . என் பையன் வகுப்பில் ஒரு பெண் நன்றாகப் படிப்பாள். நோட்ஸ் நல்லா எழுதுவாள்.யார் வந்து நோட்ஸ் கேட்டாலும் மிஸ் அவ நோட்டுதான் வாங்கித் தருவாங்க . அவளோடு சேர்த்து இன்னொரு பெண் ,ஒரு பையன் இவங்க 3 பேருக்கும்தான் வகுப்பில் போட்டி நடக்குமாம்.யார் முதலில் எக்சாம் எழுதி முடிப்பதுன்னு.க்ளாஸ் மானிட்டரும் அந்த பெண்தான். இன்னொரு பையன் அசிஸ்டண்ட் மானிட்டர். என் பையனுக்கு மானிட்டர் ஆகனும்னு பெரும் ஆசை.
Jan 19, 2023 21 tweets 3 min read
ஷேர் மார்க்கெட் சுழல்

தெரிந்த அண்ணா 1 வாரம் முன்னர் போன் பண்ணினார். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின்னர் அவர் சொன்னதுதான் அதிர்ச்சியாக இருந்துச்சு. என்னிடம் 3 வருடங்கள் முன்னர் பேங்க் ல பெர்சனல் லோன் தராங்க. எனக்கு ஷேர் மார்க்கெட்டில் போட ஹெல்ப் பண்றியான்னு கேட்டார்.(1) இல்லை. உங்க சூழ்நிலைக்கு அது சரியா வராது. அதுவும் கடன் வாங்கி மார்க்கெட்டில் போடவே கூடாது. ரிஸ்க் எடுக்காதீங்கன்னு சொல்லிருந்தேன்.ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருந்தால் யாரையும் காப்பாத்த முடியாது.அண்ணனின் நண்பர் ட்ரேடிங்கில் பெரிய புள்ளி. (2)
Dec 27, 2022 17 tweets 3 min read
நான் எப்படி ஷேர் மார்க்கெட்டில் நுழைந்தேன்.....நிறைய பேர் கேட்டாங்க.

பொறியியல் 2007 ல் முடித்த கையோடு சென்னைக்கு வந்து ஒரு கன்ஷ்ட்ரக்சன் கம்பனியில் ட்ரெய்னி சைட் இஞ்சினியராக வேலைக்கு சேர்ந்தேன்.காலை 6 மணிக்கு சைட் போகணும்.பெரிய பெரிய பைல் மெசின் 4 சுத்தி நின்னு அடிக்கும். ஒரு பெரிய ரவுண்ட் ஸ்டீல் பைப் அடியில் மூடி இருக்கும். 18 அடிக்கு மண்ணுக்குள் பெரிய சுத்தி கொண்டு அடிச்சி இறக்கும். ட்ராயிங்கில் column சரியா மார்க் பண்ணி பைப் வெர்ட்டிக்கல் மட்டம் பார்த்து சரியான அளவு கீழே இறங்கிருக்குதான்னு செக் பண்ணி காங்கிரீட் போட வைக்கணும்.
Dec 26, 2022 4 tweets 2 min read
ஷேர் மார்க்கெட் வகுப்புகள் ஆன்லைன் தமிழில்.

ஜனவரி 7,8 (Batch 7) மாலை 6-9 வரை.

மொத்தம் 6 மணி நேரம் டெலிகிராம் வீடியோ கால் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளவிருப்பவை 1.முதலீட்டுக்கான ஒரு பங்கை தேர்ந்தெடுக்கும் முன் என்னவெல்லாம் பார்க்க வேண்டும்
(Fundamental Analysis)

2.தேர்ந்தெடுத்த பங்கை மார்க்கெட்டின் எந்த விலையில் வாங்க வேண்டும்
(Technical analysis)

ஒவ்வொரு ஏற்ற இறக்கத்திலும் என்ன செய்ய வேண்டும் ? Image
Dec 25, 2022 4 tweets 1 min read
இந்த வார OTT quota :
Fall -Hotstar
பரவாயில்லை பார்க்கலாம்.அழுத்தமான கதை இல்லை.எங்கோ ஆரம்பிச்சு எப்படியோ முடிச்சிருக்காங்க.பட் மோசமில்லை. அஞ்சலி,சரண்,சோனியா அகர்வால் நல்லா பண்ணிருந்தாங்க.சரணுக்காகவே வைத்த மாதிரி ரோல் சில டயலாக்குகளும். ஏற்கனவே பாதி பார்த்ததுதான் , முடிச்சிட்டேன் Breathe - In to the shadows -Amazon prime
சீசன் 1 தொடர்ச்சி.சீசன் 2 மெதுவா ஆரம்பிச்சு பரவாயில்லை மாதிரி முடிச்சிருக்காங்க.சீரியல் கில்லர் ரகம். வாரம் முழுக்க பார்த்தது ஒரு வழியே முடிச்சிட்டேன்.
Dec 25, 2022 13 tweets 6 min read
குழந்தைகளின் எழுத்து ,வாசிப்பு பயிற்சியை எப்படி செய்வது? தொடர்வது? மொபைல்,டிவி பார்க்கும் நேரத்தைஎப்படி குறைப்பது?

என் பையனுக்கு 3 வயது முதல் நான் செய்தவை வாங்கிய புத்தகங்கள் பற்றி மட்டுமே இந்த 🧵. 1/ பிரிக்க முடியாதது குழந்தைகளையும் செல்போன்களையும்தான்.அந்த செல்போனையே எப்படி அவர்களுக்கு பயனுள்ள வகையில் மாற்றலாம்? Learning games போட்டாலே நிறைய ஆப் வரும்.colors,shapes,buzzles, fruits and vegetables,ABC, Numbers சுலபமா கற்றுக்கொள்ள முடியும். 3 வயதில் ஆரம்பிக்கலாம்.1 மணி நேரம்
Dec 9, 2022 9 tweets 1 min read
ஒரு பெருமழைக்கு எப்படி தயாராவது?
நாங்க எப்படி எங்களை தயார்படுத்திக்கொள்வோம் என்பது பற்றி ஒரு 🧵.

2015,2016 மழைகள் சென்னைவாசியான எங்களுக்கு கற்றுக்கொடுத்தவை ஏராளம்.ஒரு தண்ணீர் கேன் ,மெழுவர்த்தி வாங்க அலைந்திருக்கிறோம். 1/ முதலில் இன்வெர்ட்டர் பேட்டரியில் தண்ணீர் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.தொடர் மின் வெட்டு வரும்போது 16 மணி நேரங்கள் ஒரு லைட்,பேனுக்கு உத்திரவாதம் கொடுப்பது இன்வெர்ட்டர். அடுத்து மெழுகுவர்த்திகள்,தீப்பெட்டி கண்ணுக்கு தெரியும் இடத்தில் உடனே எடுக்கும்படி வைக்கணும்.
Nov 12, 2022 13 tweets 2 min read
இந்த முறை மழை நீர் வடிகால் பணிகள் சென்னையில் வெகு சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. ஒரு சில இடங்கள் தவிர அனேக இடங்களில் போக்குவரத்து எப்போதும் போலவே செயல்படுகிறது. இதுவே மழை நீர் கடந்த வருடங்கள் போல தேங்கி இருந்தால் விடியல் ஆட்சியின் விடியா லட்சணம்னு திட்டி தீர்த்திருப்பாங்க. ஆனால் இன்று சென்னையின் சிறப்பான மழை நீர் பணிக்கு திமுக அரசுக்கு நன்றி சொல்ல வெகுவாக மனசு இல்லை.சென்னை கார்ப்பரேசனுக்கும் பணியில் இருக்கும் அதிகாரிகள் ,ஊழியர்களுக்கும் நன்றி சொல்றாங்க. நல்ல விசயம்தான் ஆனா இந்த துறைகள் ,அதிகாரிகள் எல்லாமே ஒரு இரவில் முளைத்து வரவில்லை.
Oct 25, 2022 10 tweets 2 min read
SIP - Systematic Investment Plan🧵
1/n.இந்த SIP வார்த்தை பரவலாக மீச்சுவல் ஃபண்ட் களில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஸ்கீம் என்று நினைக்கிறார்கள்.அது அப்படியல்ல ,எஸ் ஐ பி என்பது ஒரு குறிப்பிட்ட தொகை மாதா மாதம் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர் முதலீடு செய்யப்படுவது. Image 2/n மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமல்ல நீங்கள் எஸ் ஐ பி யை பங்குகளிலும் நடைமுறைப்படுத்தலாம் .நல்லப் பங்குகளை குறைந்த விலையில் மாதாமாதம் குறிப்பிட்ட தொகைக்கு வாங்கி சேர்த்துக் கொண்டிருப்பதும் எஸ் ஐ பி தான். இதில் நமக்குச் சில வசதிகள் உள்ளன. Image