சங்க காலம் தொட்டே தமிழர் கோட்பாட்டியல் என்பது அறிவியலின் வழியிலே இருந்தது. எந்தவோர் மூட நம்பிக்கைக்கும் தமிழர் இடம் தந்திருக்கவில்லை.
'நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகு'
ஐந்து பூதங்களின் கலந்த மயக்கம் தான் உலகம் என்கிறது தொல்காப்பியம். பிரம்மத்தில் இருந்து படைக்கப்பட்டது இந்த உலகம் என்ற 'தர்மநூல்கள்' போற்றும் நம்பிக்கை தொல்காப்பியர் காலத்தில் இல்லை.
மாறாக, இயற்கையின் பொருட்களின் சேர்க்கையே இந்த உலகம் என்பது உலகம் பற்றிய தமிழர்களின் கோட்பாட்டுப் புரிதல் நிலை இருந்தது.
தொல்காப்பியர் காலத்தில் தமிழரின் மெய்யியல் கோட்பாட்டு மரபாக ஆசீவகம் இருந்தது.
உலகம் அணுக்களால் ஆனது, அணுக்கள் நிலையானது, அதற்கு அழிவு இல்லை. அதாவது புதிய அணுக்கள் தோன்றுவது இல்லை பழைய அணுகள் கழிவதும் இல்லை. இந்த அணுக்களின் சேர்க்கை தான் பொருட்கள். அணுக்களின் சேர்க்கையைப் பொருத்துப் பொருட்களின் தன்மை இருக்கும்.
மனித உடல் நிலம், நீர், காற்று, தீ என்ற நான்கு அணுக்களால் ஆனது.
மனிதன் இறந்த பின்; நிலம் நிலத்தோடு சேர்ந்து விடுகிறது, நீர் நீரோடு சேர்ந்து விடுகிறது, தீ தீயோடு சேர்ந்து விடுகிறது, காற்று காற்றோடு சேர்ந்து விடுகிறது, அவன் உணர்வு வெளியோடு சேர்ந்து விடுகிறது.
உடல் இறக்கும்போது மூடனாயினும், அறிஞனாயினும் அழிவர். இறப்பிற்குப் பின் அவர்கள் வாழ்வதில்லை என்பது ஆசீவகத்தின் கோட்பாடு.
எந்த பொருளும் நிலைத்து இருப்பது இல்லை, அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது; அந்த மாற்றம் ஒரு நியதிப்படியே(ஊழ்) நடைபெறுகிறது என்பது ஆசீவகத்தின் கோட்பாடு.
நம் முன்னோர்கள் முற்பிறவி - மறுபிறவி பேசும் இருமையியல், பாவம் - புண்ணியம் போன்ற கரும வினைகளின் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. நாம் செய்யும் நல்வினைகளே நம் அடுத்த தலைமுறைக்கு உதவும் என்பதே.
அதாவது நம் முன்னோர்கள் மரம் நட்டதால் நமக்கு நல்ல கனிகள் கிடைக்கிறது. இந்த மரங்களை தாம் பாதுகாத்தால், ஏமதடுத்த தலைமுறையினர் அந்த மரத்தால் பயன் பெறுவர் என்பதே அவர்களின் வாழ்வியல் கோட்பாடாக இருந்திருக்கிறது.
அறிவின் வழியே அறியும் அறிவையே நம் முன்னோர் வளர்த்தெடுத்து இருக்கின்றனர். அதனை தாண்டி எந்த மூட நம்பிக்கைக்கும் அவர்கள் இடம் தந்திருக்கவில்லை.
'உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே' என்ற புறப்பாடலில் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இயற்றிய புறப்பாடல் அரசுக்கு அறிவுடையோன் வேண்டும் என வலியுறுத்துகிறது.
என் அம்மா தீவிர ஐயப்ப பக்தர். அவரது பிடிவாதத்தால் ஒருமுறை நோன்பிருந்து அய்யப்பன் கோவிலுக்குச் சென்றதுண்டு. சிறுவயதிலிருந்தே அவர் தமக்குச் சொல்லப்பட்ட ஐயப்ப வரலாறுகளையும் சபரிமலைக்கு சென்று வருவதைக் குறித்த முறைகளையும்,
👇🏼
வாழ்வில் தான் சந்திக்காத வெறும் செவிவழிச்செய்திகளை மட்டுமே கட்டிவைத்திருந்த புனிதப் பம்பையாறு, மகர சோதி போன்ற கட்டுக்கதைகளால் பெரிதாக்கப்பட்டிருக்கும் 'சபரிமலை' எனும் பிம்பம் வேறு, உண்மை வேறு. பம்பையாற்றின் சுத்தம் குறித்துப் பேசி அவர் நம்பிக்கையை மறுக்க விரும்பவில்லை.
👇🏼
மாறாக, அவரை அங்கு கொண்டுபோய் காட்டிட வேண்டுமென்று நினைத்தேன், அப்போது தானே அவரது அடிப்படைத்துவப் பிடி தளரும் என்று. "என்னால கச்சேரி மேடு ஏற்றம் ஏற முடியுமான்னு தெரியல" என்றவரிடம், "முடியலன்னாலும் பல்லக்குலத் தூக்கிட்டு போக வழி இருக்கும்மா" என்றேன் பதற்றத்தைக் குறைக்க.
உழைப்பாளர் நாளன்று வந்த 'தூய்மைப் பணியாளரும் சமூகமும்' குறித்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் பூவுலகின் நண்பர்கள் தோழர் @Geodamin பேசிய 'சமூகம் வெட்கப்பட வேண்டிய நிலையில் இவர்களை ஆக்கியது நகரமயமாதலின் தோல்வியே' என்ற கருத்து இன்று விவாதத்திற்குட்படுத்த வேண்டியத் தேவையான ஒன்று.
🧵👇🏼
இடைக்காலத்தே இறுகிய சாதியப்பிடி, காலனியாதிக்க பெருநகரக் கட்டமைப்பிற்குள்ளும் தொடர்ந்தே வந்துள்ளது. இதனைச் சீரமைக்க வேண்டியது அகமணமுறையும் இறுகிவரும் தற்காலத்தில், கரி அளவு புவியை உருக்கி வரும் காலத்தில், தமிழ்நாட்டின் அவசரத் தேவை!
👇🏼
சிந்துசமவெளி முதல் கீழடி வரையான சாதியற்ற சங்ககால திராவிட நாகரிகங்களின் ஊரமைப்புகளை மீளாய்ந்து, வாழும் இடத்திலிருந்து சாதிய - மத பேதங்களைக் களையும் நோக்கில் கலைஞர் கொணர்ந்த 'சமத்துவபுரம்' போன்ற அடிப்படை சமூகக் கட்டமைப்பு மாற்ற சீர்த்திருத்தத் திட்டங்கள் மிகவும் தேவையின்று.
பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணு தற்கே!
பெண்கட்கு கல்வி வேண்டும்
மக்களைப் பேணு தற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
உலகினை பேணு தற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே!
கல்வியில்லாத பெண்கள்
களர்நிலம்! அந்நிலத்தில்
புல்விளைந் திடலாம்; நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை!
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி, அங்கே
நல்லறிவுடைய மக்கள்
விளைவது நவில வோநான்?
வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுத ளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே! இன்று
நானிலம் ஆட வர்கள்
ஆணையால் நலிவ டைந்து
போனதால் பெண்களுக்கு
விடுதலை போனதன்றோ!
“இந்த ஒப்பந்தமானது தமிழீழ மக்களின் அரசியல், தேசிய நலன்களைப் பேணுவதாக அமையவில்லை. தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனையின் சிக்கலான பரிமாணங்களை எந்த வகையிலும் செம்மையாக அணுகவில்லை. அவற்றிக்கு பரிகாரம் காண முனையவில்லை.
மாறாக, ஈழத்தமிழரின் தேசிய பிரச்சனையை முற்றிலும் தவறான அடிப்படையில் இந்த ஒப்பந்தம் தொட்டு நிற்கிறது”
– இந்திய இலங்கை ஒப்பந்தம் – விடுதலை புலிகளின் நிலைப்பாடு, பக்கம்-3
“வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று உலக வல்லாதிக்கங்களாளும் கருதப்பட்ட ஆனையிறவு இராணுவப் படைத்தளத்தை 2000-ஆம் ஆண்டு இதே நாள் (22-04-2000) விடுதலைப்புலிகள் முற்றாக
கைப்பற்றினர்.
ஆனையிறவு யாழ் நிலத்திற்கான கணவாய் என்பார்கள். இது 1760 லிலேயே போர்ச்சுகீசியர்களால் கோட்டையுடன் கூடிய பாதுகாப்பு தளமாக மாற்றப்பட்ட இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நிலம்.
இப்பகுதி வழியாகச் செல்லும் தமிழர்கள் சிங்களப் படையினரால் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டனர், பலர் காணாமலும் ஆக்கப்பட்டனர். இப்படியாக 240 ஆண்டுகளாக அந்நியர் ஆக்கிரமிப்பில் இருந்த ஆனையிறவு தளத்தை மார்ச் 26, 2000 துவங்கிய சமரின் வழியாக ஏப்ரல் 22, 2000 தமிழர் படை கைப்பற்றியது.