புத்தருக்கு முன்பே ராமாயணம் நடைபெற்றது என்ற பொய்க் கதையை ராமாயணத்தில் இருந்த வால்மீகியின் வரிகளை வைத்து உடைத்தெறிந்தார் பண்டிதர் அயோத்திதாசர்.
👇🏼
“ராமாயணத்தின் மூலநூலான வால்மீகி ராமாயணத்தில் ‘அனுமன் இலங்கைக்கு சென்று சீதையை தேடும் பொழுது ஒரு கோபுரத்தின் உச்சியில் அமர்ந்து இது பௌத்தர்களின் கோபுரமாக இருக்குமோ என்று சிந்தித்த வண்ணம் இருந்தான்’ என்பதாக வால்மீகியே எழுதி வைத்திருப்பதை மறுக்கிறீர்களா?” என்று வினா எழுப்பினார்.
👇🏼
மேலும் வால்மீகி ராமாயணத்தில் ராமனுக்கு கல்வி கற்று கொடுக்கும் போது ‘ உன் தந்தை புத்தரைப் போல் உத்திர முகம் நோக்கி தாமரை போன்ற சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறார்.
👇🏼
அதுபோல் நீயும் செய்வாயாக’ என்று கூறிய வால்மீகியின் வரிகளை மேற்கோள் காட்டி புத்தருக்கு முன்பே ராமாயணம் நடந்தது என்றும், ராமாயணமே இந்நாட்டின் வரலாறு என்றும் கூறும் இந்துத்துவவாதிகளின் முகத்திரையை கிழித்தெறிந்தார்.
"நாங்கள் சரணடையப் போவதில்லை.. எம் மக்களைக் காக்கவே ஆயுதங்களை மௌனிக்கிறோம்.. (தமிழீழ விடுதலைக்கான) அரசியல் போராட்டத்தைத் தொடர்வோம்.."
விடுதலைப் புலிகள், முள்ளிவாய்க்கால், மே 17, 2009
🧵👇🏼🧵👇🏼
2001இல் தமிழர் படைகளை எதிர்கொள்ள இயலாது சரணடைந்த சிங்களப் பேரினவாத அரசு தமிழர்களின் தமிழீழ தன்னாட்சி அதிகாரத்திற்கு அடிபணிந்தது.
தமிழீழ தன்னாட்சி அரசு தம்முடைய தெற்காசிய வல்லாதிக்கத்திற்கு இடையூறாக அமையுமெனக் கருதிய ஏகாதிபத்திய நாடுகள் இலங்கைக்கு பக்கபலமாக நின்று சிங்களப்படையை வலுவூட்டினார்கள். சர்வதேச அரசியலில் தமிழரின் தன்னாட்சி அரசை தனிமைப்படுத்தினர்கள்.
என் அம்மா தீவிர ஐயப்ப பக்தர். அவரது பிடிவாதத்தால் ஒருமுறை நோன்பிருந்து அய்யப்பன் கோவிலுக்குச் சென்றதுண்டு. சிறுவயதிலிருந்தே அவர் தமக்குச் சொல்லப்பட்ட ஐயப்ப வரலாறுகளையும் சபரிமலைக்கு சென்று வருவதைக் குறித்த முறைகளையும்,
👇🏼
வாழ்வில் தான் சந்திக்காத வெறும் செவிவழிச்செய்திகளை மட்டுமே கட்டிவைத்திருந்த புனிதப் பம்பையாறு, மகர சோதி போன்ற கட்டுக்கதைகளால் பெரிதாக்கப்பட்டிருக்கும் 'சபரிமலை' எனும் பிம்பம் வேறு, உண்மை வேறு. பம்பையாற்றின் சுத்தம் குறித்துப் பேசி அவர் நம்பிக்கையை மறுக்க விரும்பவில்லை.
👇🏼
மாறாக, அவரை அங்கு கொண்டுபோய் காட்டிட வேண்டுமென்று நினைத்தேன், அப்போது தானே அவரது அடிப்படைத்துவப் பிடி தளரும் என்று. "என்னால கச்சேரி மேடு ஏற்றம் ஏற முடியுமான்னு தெரியல" என்றவரிடம், "முடியலன்னாலும் பல்லக்குலத் தூக்கிட்டு போக வழி இருக்கும்மா" என்றேன் பதற்றத்தைக் குறைக்க.
உழைப்பாளர் நாளன்று வந்த 'தூய்மைப் பணியாளரும் சமூகமும்' குறித்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் பூவுலகின் நண்பர்கள் தோழர் @Geodamin பேசிய 'சமூகம் வெட்கப்பட வேண்டிய நிலையில் இவர்களை ஆக்கியது நகரமயமாதலின் தோல்வியே' என்ற கருத்து இன்று விவாதத்திற்குட்படுத்த வேண்டியத் தேவையான ஒன்று.
🧵👇🏼
இடைக்காலத்தே இறுகிய சாதியப்பிடி, காலனியாதிக்க பெருநகரக் கட்டமைப்பிற்குள்ளும் தொடர்ந்தே வந்துள்ளது. இதனைச் சீரமைக்க வேண்டியது அகமணமுறையும் இறுகிவரும் தற்காலத்தில், கரி அளவு புவியை உருக்கி வரும் காலத்தில், தமிழ்நாட்டின் அவசரத் தேவை!
👇🏼
சிந்துசமவெளி முதல் கீழடி வரையான சாதியற்ற சங்ககால திராவிட நாகரிகங்களின் ஊரமைப்புகளை மீளாய்ந்து, வாழும் இடத்திலிருந்து சாதிய - மத பேதங்களைக் களையும் நோக்கில் கலைஞர் கொணர்ந்த 'சமத்துவபுரம்' போன்ற அடிப்படை சமூகக் கட்டமைப்பு மாற்ற சீர்த்திருத்தத் திட்டங்கள் மிகவும் தேவையின்று.
பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணு தற்கே!
பெண்கட்கு கல்வி வேண்டும்
மக்களைப் பேணு தற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
உலகினை பேணு தற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே!
கல்வியில்லாத பெண்கள்
களர்நிலம்! அந்நிலத்தில்
புல்விளைந் திடலாம்; நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை!
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி, அங்கே
நல்லறிவுடைய மக்கள்
விளைவது நவில வோநான்?
வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுத ளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே! இன்று
நானிலம் ஆட வர்கள்
ஆணையால் நலிவ டைந்து
போனதால் பெண்களுக்கு
விடுதலை போனதன்றோ!