காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் அடுத்த 10 ஆண்டுகளில் அழியும் – #கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை.
கடந்த 8 ஆண்டுகளாக ஒன்றிய அரசாக இருப்பதால் இத்தனை தெனாவெட்டு...60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸை பற்றி பாடம் நடத்துகிறார் @annamalai_k
காங்கிரஸ் உருவாக்கிய நிறுவனங்களில் படித்து அப்பொழுதும் அறிவு வளராமல் பிதற்றுகிறார் அண்ணாமலை..
காங்கிரஸ் என்பது #சித்தாந்தம். மக்களின் சுதந்திரம், பேச்சுரிமை, ஒற்றுமை, வளர்ச்சி, சமூக நீதி. அது என்றும் அழியாது.
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது வரும் போகும்
வெற்றி பெறும் பொழுது அகந்தைக் கூடாது
இன்று பிஜேபி அந்த அகந்தையில் தான் சுற்றி வருகிறது.
இத்தனை பேசும் பாரதிய ஜனதா #தேர்தல்#பத்திரங்களைப் பற்றி வாய் திறப்பதில்லை ஏன் ??? அதில் தான் அவர்கள் கோடிகளை பெரும் நிறுவனங்களில் இருந்து நன்கொடையாக லஞ்சமாக பெற்று வருகிறார்கள்...
இங்கே சாதாரண மக்கள் வீடு கட்டுவது குதிரைக்கொம்பாக மாறி வருகிறது ஆனால் மாவட்டம் தோறும் புதிய பிரம்மாண்டமான பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்களை கட்டி வருகிறார்கள் அதற்கெல்லாம் நிதி எங்கிருந்து வருகிறது??
திருப்பூரில் ஏற்றுமதி வர்த்தகம் எந்த அளவு உள்ளதோ அதைவிட இரண்டு மடங்கு உள்நாட்டு உற்பத்தி உள்ளது. நாம் பயன்படுத்தும் உள்ளாடை முதல் சாதாரன கடையில் எடுக்கும் பனியன் துணிகள், பிராண்டட் காட்டன் பாலிஸ்டர் டிசர்ட சார்ட்ஸ் வரை திருப்பூரில் தான் உற்பத்தி ஆகுகிறது, @ptrmadurai
தோராயமாக பின்னலாடை வர்த்தகம் 20-30 ஆயிரம் கோடியாக இருக்கலாம். லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சிறு குறு மிகப்பெரிய தொழிற்சாலைகள் உள்நாட்டு உற்பத்தியை நம்பி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த துறை கடுமையான மந்த நிலையில் உள்ளது. பல இடங்களில் தயார் செய்யப்பட்ட சரக்குகள் தேங்கி உள்ளது
இதற்கு காரணம் மக்களிடம் நுகர்வு குறைந்து உள்ளது. பணவீக்கம் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு 12.5 சதவீதமாக கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களின் அன்றாடும் பயன் படுத்தும் பொருட்களின் விலை உயர்வே இந்த பணவீக்கத்திற்கு காரணம். இதற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வும் ஒருவகையில் நேரடியாக தொடர்பு
திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் திருப்பூர் எக்ஸ்போர்டர்ஸ் பாரம், சாய ஆலை உரிமையாளர் சங்கம் மற்றும் #Tiruppurcoronafighters குழுவால் 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட வளாகம் மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களால் திறந்து வைக்கப்பட்டது, @ksivasenapathy
அந்த வளாகத்தை மேற்கூறிய சங்கங்கள் மூலம் நாம் ஆட்கள் நியமித்து பணியாளர் உதவியுடன் 24 மணி நேரமும் பராமரித்து வருகிறார்கள். நோயாளிகளுக்கான மூன்று வேளை உணவு கிரீட்டிங்ஸ் நிறுவன ராஜேந்திரன் அண்ணா அவர்கள் மூலம் ட்ரீம் கேட்டரிங் மூலம் சிறப்பாக வழங்கி வருகிறது, சுத்தம், சுகாதாரம்,
பாதுகாப்பு, எலக்ட்ரீசியன் என்று ஒரு நாளைக்கு 10 பேர் இங்கு வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கான சம்பளத்தையும் திருப்பூர் எக்ஸ்போர்ட் பாரம் மற்றும் சாய ஆலை உரிமையாளர் சங்கங்கள் வழங்கி வருகின்றன. இந்த வளாகம் திறந்த பிறகு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மிக பெரிய ஒரு பக்கபலமாக
27.02.2021 அன்று நடைபெற்ற வனத்துக்குள் திருப்பூர் -6 நிறைவு , வனத்துக்குள் திருப்பூர் -7 , இதுவரை நடப்பட்ட மறக்கண்களால் ஏற்பட்டுள்ள சூழலியல் மாற்றங்களை பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது,
கோவை சித்தார்த் பௌண்டடேஷன் நிறுவனத்தின் சூழலியல் துறையில் முனைவர்கள் குழுவாக 6 மாதங்கள் மாவட்டம் முழுவதும் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் வாயிலாக நடப்பட்ட மரக்கன்றுகளை ஆய்வு செய்து தயாரித்த அறிக்கை ,
அதன் சாரம்சங்கள்
நடப்பட்ட மரக்கன்றுகளில் 88 .4 % காப்பாற்றப்பட்டு
வளர்ந்து வருகிறது
7377 டன் கரியமில வாயு பிரித்தெடுக்கப்பட்டுள்ளது
4076 டன் பயோ மாஸ் -உயிரினபால்திரள் பெருகியுள்ளது
2038 டன் கரியமில வாயு நடப்பட்ட மரங்களால் உறிஞ்சப்பட்டுள்ளது
நடப்பட்டதோ 70 வகை மரக்கன்றுகள் , களத்திலோ 210 வகை மரங்கள், மூலிகைகள் , தாவரங்கள் காணப்படுகிறது ,
நேற்று மார்ச் 1 முதல் பத்து ரூபாய் நூல் விலை உயர்ந்து இதோடு 70 ரூபாய் கடந்த ஆறு மாதத்தில் நூல் விலை உயர்ந்துள்ளது.
திருப்பூரில் சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய ஏற்றுமதியாளர்கள் அனைவரும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் தொழில் சங்கிலி தொடர் போல நூல் வாங்கியவுடன் நூலை துணியாக நைய நிட்டிங்_ Fabrication அதன் பிறகு சாயமேற்றும் சாயப்பட்டறைகள் என்று இந்த சங்கிலித் தொடர் முழுவதும் தற்போது பிரச்சனையில் சிக்கி தவிக்கிறது.
மத்திய அரசிற்கு இது குறித்து பலரும் கடிதம் எழுதியும்
இதுவரை செவிசாய்க்காமல் நூல் ஏற்றுமதியை தான்தோன்றித்தனமாக அனுமதித்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது ஏற்கனவே விலை நிர்ணயம் செய்யப்பட்ட ஏற்றுமதி ஆடைகளை அனுப்ப முடியாமலும் உள்நாட்டு வர்த்தகத்தில்