1962 பொதுத் தேர்தலில்
நடிகர் SSR திமுக வேட்பாளராக தேனி தொகுதியில் போட்டியிட்டார் இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளராக செல்வாக்கு பெற்ற என்.ஆர். தியாகராஜன் போட்டியிட்டார்.
காங் வேட்பாளர் தியாகராஜன் ஒரு மலை அதை சாய்க்க எந்த கொம்பனாலும் முடியாது என்றே பேசப்பட்டது.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது திமுக வேட்பாளர் SSR 12794 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் சட்டமன்றம் செல்லும் முதல் திரைப்பட நடிகர் என்ற பெயரை பெற்றார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#சந்திரபாபுவு Vs #MGR
ஒரு மனிதன் எல்லோருக்குமே நல்லவனாக இருக்க முடியாது. அது எம்.ஜி.ஆராக இருந்தாலும். அடிமட்ட தொண்டன் முதற்கொண்டு அமைச்சர் பெருங்குடி மக்கள் வரை அனைவரின் கண்களுக்கும் வள்ளலாக தெரிந்தவர், சந்திரபாபுவின் கண்களுக்கு மட்டும் ஏன் அப்படி இருக்கவில்லை?
குலேபகாவலி ஷூட்டிங்கில் சந்திரபாபு, பட குழுவினருடன் சேர்ந்து ஜோக் அடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.அவர் அடித்த ஜோக்கிற்கு எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தனர்
எம்.ஜி.ஆரை தவிர.
இதற்கு அவமானமாக உணர்ந்த சந்திரபாபு, மற்றவர்களுடன் விசாரித்ததில் தெரிந்துக்கொண்டது.அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார்.கூட்டத்தோடு சேர மாட்டார்.தனிமையில்தான் அமர்ந்திருப்பார்
தமிழ் திரையுலகில் 1950 களிலேயே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று ராஜ வாழ்க்கை வாழ்ந்து பிற்காலத்தில் வறுமையில் வாடியவர். பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர் 46 வயதில் மரணமடைந்தது சோகம்
சந்திரபாபுவின் ஆங்கில பாணிதான் அவரின் பலம். அதுதான் அந்தக் காலத்தில் ரொம்பவே நம்மை ஈர்த்தது. ஆச்சரியப்படவைத்தது. தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று ஜெய்சங்கரைச் சொன்னது போல, தென்னகத்து சார்லிசாப்ளின் என்று சந்திரபாபுவை ரசிகர் உலகம் கொண்டாடியது.
ஜெமினி ஸ்டுடியோவில் வாய்ப்புக் கிடைக்காத சோகத்தில் கடிதம் எழுதிவைத்து அங்கேயே தற்கொலைக்கு முயன்ற இளைஞர் அடுத்த சில ஆண்டுகளில் ஒருவார கால்ஷீட்டுக்கு ரூ. 1 லட்சம் (அப்போது தங்கம் ஒரு சவரன் 100 ரூபாய் இருந்தது) சம்பளம் வாங்கும் நிலையை அடைந்தார். அவர்தான் சந்திரபாபு.
குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.
பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.
புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.
பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.
முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.
பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.
பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.
மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள்.