SK..JSK... Profile picture
May 23, 2022 17 tweets 3 min read
#சந்திரபாபுவு Vs #MGR
ஒரு மனிதன் எல்லோருக்குமே நல்லவனாக இருக்க முடியாது. அது எம்.ஜி.ஆராக இருந்தாலும். அடிமட்ட தொண்டன் முதற்கொண்டு அமைச்சர் பெருங்குடி மக்கள் வரை அனைவரின் கண்களுக்கும் வள்ளலாக தெரிந்தவர், சந்திரபாபுவின் கண்களுக்கு மட்டும் ஏன் அப்படி இருக்கவில்லை? குலேபகாவலி ஷூட்டிங்கில் சந்திரபாபு, பட குழுவினருடன் சேர்ந்து ஜோக் அடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.அவர் அடித்த ஜோக்கிற்கு எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தனர்
எம்.ஜி.ஆரை தவிர.

“என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர், சிரிச்சா முத்தா உதிர்ந்திரும்?” (எல்லோரையும் மிஸ்டர் என்றுத்தான் அழைப்பார்)
May 23, 2022 22 tweets 3 min read
நடிகர் சந்திரபாபு

தமிழ் திரையுலகில் 1950 களிலேயே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று ராஜ வாழ்க்கை வாழ்ந்து பிற்காலத்தில் வறுமையில் வாடியவர். பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர் 46 வயதில் மரணமடைந்தது சோகம் சந்திரபாபுவின் ஆங்கில பாணிதான் அவரின் பலம். அதுதான் அந்தக் காலத்தில் ரொம்பவே நம்மை ஈர்த்தது. ஆச்சரியப்படவைத்தது. தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று ஜெய்சங்கரைச் சொன்னது போல, தென்னகத்து சார்லிசாப்ளின் என்று சந்திரபாபுவை ரசிகர் உலகம் கொண்டாடியது.
May 22, 2022 7 tweets 4 min read
#நடிகர்_திலகம் என்றால்...
இன்று நாம் சிவாஜியை தான்
நினைவுகூர்வோம்.

ஆனால்..
திரைதுறையில்
ஒரு பெரும் சகாப்தமாக,
நிஜமான நடிகர் திலகமாக வந்திருக்க வேண்டியது...
#SSR என்றழைக்கபடும்...

#S_S_ராஜேந்திரன் தான்..
சிவாஜிக்கு நிகரான நடிப்புதன்மையும்... Image @dineshDj_ @kalgikumaru @HAJAMYDEENNKS @pencil_tweets
May 20, 2022 5 tweets 1 min read
நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின், தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்..!

வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..

நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது,

சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி,

குறுக்குப் பலகைகள் போட்டு,

அதன் மேல பல சித்தாள்கள் நின்னு,

கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு,

அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு,
May 19, 2022 5 tweets 1 min read
குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.
பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.
புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது. பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.
முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.
பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.