பதின் வயது பிள்ளைகளை கவனியுங்கள் பெற்றோர்களே....
Instagramல் பிள்ளைகள் உலாவுகையில் கண் காணியுங்கள் பள்ளி பருவ காதல் என வரும் insta ree கள் ஏற்கனவே பல பிள்ளைகளை தடம் மாற்றிவிட்டது... பெயர் தெரியாத நபருக்கு தன்னை பற்றிய தகவல்களை சொல்லுமளவுக்கு பிள்ளைகள் இன்னும் வெகுளிகளாக தான்
இருக்கிறார்கள்.
ஏழாம் வகுப்பு மாணவி ஒருத்தி வகுப்பு தோழியிடம் தனக்கு ஒரு crush இருப்பதாக சொல்ல இது பேசு பொருளாகி பந்து வந்தது student support councilலிடம் (நானே தான்) Mam can a girl of my class have a crush இது ஒரு குழந்தையின் கேள்வி சங்கிலியாய் நீண்ட யாரது கேள்வி அம் மாணவியிடம்
Heard you got a crush how good is he என்ன பண்றான்(கேக்கனுமே background எப்படி guess பண்ண) ரொம்ப casualஆ insta followerனு id சொன்னா என் idல இருந்து பாத்தா அந்த idல bike photos தவிற வேற ஏதும் இல்ல சரி இங்கேயே ஆராய்வோம்னு
பேர் என்ன - நா அவன bujji சொல்வேன் அவனும்
என்ன பேபி னு தான் சொல்வான்
என்ன பண்றான் - college 2nd yr சொன்னான்
Good நீயும் நல்லா படிச்சு college எல்லா போகனும்.... சரி பாத்திருக்கியா - ஒரே ஒரு நாள் instagramல video cal பண்ணான் ஆனா பாட்டி வந்துடாங்க so i couldn't pick that cal...
உள்ளூர சின்ன பயம் பற்றியது
தவறாக ஏதேனும் 😳😱
பெற்றோரை அவளின் கைபேசியோடு வர சொன்னோம் அதில் Instagram app இல்ல browserல் வைத்து பயன்படுத்தி வந்ததும் அதில் இருந்த அந்த பையனின் உரையாடல்களும் மேலும் அதிர்ச்சி
நீ ஹீரோயின் நா ஹீரோ ஹக் பண்ணிக்கலாம் +++என நீண்டு proposal வரை போய்விட்டது
ஆனால் எங்குமே அவனை யற்றிய ஒரு தகவல் கூட இல்லை
பெற்றோர்களே online classes முடிந்து பள்ளிகள் சரிவர இயங்க துவங்கி விட்டது பிள்ளைகளுக்கு அலைபேசி மற்றும் வேறு gadgetsன் பயணளவு குறைவே.
கவனிக்கவும்
குடுக்காதீங்கனு சொன்னா சண்டைக்கு வருவாங்க உங்கள் பிள்ளைகளின் மனமும் படிப்பும் இப்போது உங்கள் கையில்
சரிவர ஒரு வழிகாட்டுதல் இல்லையெனில்
அந்த சிறு பிள்ளையின் மனமும் படிப்பும் சிதைந்து விடும்... Freedom தவறல்ல அது மலர் மகுடம் ஆகாமல் முள் கிரீடம் ஆனால் உங்களுக்கும் வலிக்கும் தானே #parenting_tips #teenagers
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh