ஒரு நாடு. அந்த நாட்டில் திருடர் கூட்டம் ஒன்று இருந்தது. கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தது. திருடர்களை உயிரோடு பிடிக்க அரசர் பல முயற்சிகளை எடுத்தார். பலனில்லை. மக்கள் படும் அவதி அரசனை கோபமடையச் செய்தது.
'திருடர்களை கொன்று பிணத்தை கொண்டு வருபவர்களுக்கு லட்சம் பொற்காசுகள்', என்று ஒரு அறிவிப்பை அரசர் வெளியிட்டார்.
அன்றிலிருந்து மக்கள் நேரடியாக திருடர்களை தேடும் பணியை தொடங்கினர். சில திருடர்களும் பிடிபட்டனர். மக்கள் அவர்களை கொன்று பிணத்தை அரண்மனையில் ஒப்படைத்தனர். சன்மானத்தை பெற்றுக் கொண்டனர்.
விஷயம் திருடர் கூட்டத்தை அடைந்தது. மக்களிடமிருந்து தப்பிக்க வழி தெரியாமல் திருடர்கள் காட்டில் சென்று மறைந்து கொண்டனர்.
காட்டில் ஒரு மந்திரவாதி இருந்தார். அவருக்கு அரசனை பிடிக்காது. அரசனுக்கு எதிராக யாராவது செயல்பட்டால் அவர்களுக்கு உதவுவார்.
இந்த நிலையில் மக்கள் கூட்டமாக திருடர்களை தேடி காட்டுக்குள் நுழைந்தார்கள். பயந்துபோன திருடர்கள் மந்திரவாதியிடம் ஓடினர். 'தங்களை காப்பாற்றும்படி' கெஞ்சினர்.
அவர் சில மந்திரங்களை உச்சரித்தார். அவ்வளவுதான்! திருடர்கள் அனைவரும் சிங்கங்களாக மாறினர். காட்டில் அங்குமிங்கும் ஓடினர்.!!
திருடர்களை தேடி வந்த மக்கள் சிங்கக் கூட்டத்தை கண்டு பயந்து ஓடினார்கள். 'திருடர்களை தேடும் பணிக்கு சிங்கங்கள் இடையூறாக இருப்பதாக', அரசனிடம் முறையிட்டனர்.
'சிங்கங்களை கொன்று அதன் உடலை கொண்டு வருபவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும்', என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார் அரசர்.
சிங்கங்களை கொல்வதற்காக காட்டிற்குள் மக்கள் படையெடுத்தனர். சிங்கங்கள் மீண்டும் மந்திரவாதியிடம் ஓடின. அவர் மீண்டும் சில மந்திரங்களை உச்சரித்தார். இம்முறை சிங்கங்கள், யானைகளாக உருமாறின.
திடீரென்று யானைக் கூட்டம் வருவதைப் பார்த்த மக்கள் பயந்து போனார்கள். அரசனிடம் சென்று முறையிட்டனர்.
'திருடர்களை பிடிக்க தடையாக இருக்கும் யானைகளை கொல்பவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும்', என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அரசர்.
மக்கள் மீண்டும் காட்டிற்கு விரைந்தனர். இம்முறை அவர்களின் இலக்கு யானைகள். பயந்து போன யானைகள் மந்திரவாதியை சந்தித்தன. மீண்டும் மந்திரங்களை உச்சரித்தார்.
இம்முறை யானைகள் அருவருக்கத் தக்க புழுக்களாக மாறின.
'திருடர்களே! கவலை வேண்டாம். புழுக்களை யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள். சிறிது காலம் புழுக்களாக இருங்கள். பிரச்னை ஓய்ந்த பின்னர் உங்கள் மீண்டும் திருடர்களாக மாற்றிவிடுகிறேன்', என்று சொன்னார் மந்திரவாதி .
புழுக்களாக உருமாறிய திருடர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், பிரச்னை வேறு ஒரு உருவில் முளைத்தது. மந்திரவாதி பேசியதை ஒரு ஒற்றன் கேட்டுக் கொண்டிருந்தான். அரசனிடம் சென்று நடந்ததை சொன்னான்.
சிறிது நேரம் யோசித்தார் அரசர். பக்கத்தில் அமர்ந்திருந்த மந்திரியின் காதில் ஏதோ கிசுகிசுத்தார்.
சற்று நேரத்தில் ஒரு வீரன் காட்டுக்குள் சென்றான். மரத்தடியில் அமர்ந்திருந்த மந்திரவாதியின் தலையை வெட்டினான். அரண்மனைக்கு திரும்பி சாதுவின் தலையை அரசனிடம் கொடுத்தான்.!!!
பக்கத்தில் இருந்த மந்திரி அரசனிடம் பேசினார்.
'அரசே! திருடர்களுக்கு உதவும் மந்திரவாதியின் தலையை துண்டிக்கச் சொன்னீர்கள். ஆனால், புழுக்கள் உருவில் இருக்கும் திருடர்களை ஏன் தண்டிக்கவில்லை?' என்று கேட்டார் மந்திரி.
'நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தாதவர்களை ஏன் கொல்ல வேண்டும்? மந்திரவாதியின் மரணத்திற்கு பிறகு திருடர்கள், திருடர்கள் அல்ல. வெறும் புழுக்கள். இனி அவர்கள் நினைத்தாலும் யாருக்கும் தீங்கிழைக்க முடியாது.
எந்த சக்தியும் இல்லாத கேவலமான புழுக்களாக மீதமுள்ள நாட்களை கழிக்கப் போகிறார்கள். இதுதான் அவர்களுக்கு காலம் அளித்த தண்டனை', என்றார் அரசர்.
பிரதமர் மோடியின் முயற்சியை தவறாக சித்தரிக்க பல அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் முயல்கின்றதை இன்னும் நிறுத்தவில்லை
500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு முழுப் பலனைத் தராது என்று இன்னும பல ஊடகங்கள் சொல்லி கொண்டிருக்கின்றன. 'எங்கள் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லுங்கள்', என்று பல தலைவர்கள் பிரதமரை வலியுறுத்துகின்றனர்.!
பிரதமர் அவர்களே! இதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. பதிலளிக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. ஆனால், மக்களை திசை திருப்பும் அரசியல்வாதிகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.
கதையில் திருடர்கள் உருமாறினார்கள். அதைப் போல தங்கங்களாகவும், பினாமி சொத்துக்களாகவும் மாறியிருக்கும் கருப்பு பணத்தின் உருமாற்றத்தை அரசு கண்டுபிடிக்கும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்று நம்புவோம்.
கமிஷனுக்கு ஆசைப்பட்டு அரசுக்கு எதிராக பலர் செயல்பட்டிருக்கிறார்கள். கதையில் வரும் மந்திரவாதியைப் போல பல கருப்பு அதிகாரிகள் கருப்பு பண முதலைகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்கள்.
அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். கருப்பு அதிகாரிகளின் கொட்டத்தை அடக்கினால், கருப்பு பண முதலைகள், எதற்கும் உதவாத புழுக்களாக மாறுவது நிச்சயம்.
கேரளா பல்லசேனா ஶ்ரீ மீன்குளத்தி அம்மன் திருக் கோயில்
இத்திருத்தலம் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம்பசுமையான அழகிய நெல் வயல்களுக்கு மத்தியில்பல்லசேனா எனும் இடத்தில் அமைந்துள்ள்து.
🇮🇳🙏1
பல்லசேனா கிராமம் பால்காட் நகரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. திருச்சூர் 56 கி.மீ. கொடுங்கல்லூர் 93 கி.மீ. சோட்டானிக்கரை 120 கி.மீ.பொள்ளாச்சி 42 கி.மீ. கொயம்புத்தூர் 68 கி.மீ. தூரம் உள்ளது. 🇮🇳🙏2
இக்கோயில் மண்ணடியர் குடும்பத்தால் நிறுவப்பட்டது. இந்தக் குடும்பம் தமிழ்நாட்டின் சிதம்பரத்தைச் சேர்ந்தது. தொழில் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, கேரளாவுக்கு குடிபெயர முடிவு செய்தனர். கேரளாவுக்கு கோயிலுக்குச் சென்றனர். 🇮🇳🙏3
காஞ்சிப் மகா பெரியவர் கனவில் மாங்காடு காமாட்சி அம்மன் தோன்றி அற்புதம் செய்தாள். மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் புதுப்பிக்கப்படுவதற்கும், அருகேயே ஒரு வேத பாடசாலை ஆரம்பிப்பதற்கும் காஞ்சிப் பெரியவர் காரணமாக இருந்தார்.
அது 1952-&ம் வருஷம். ஒவ்வொரு வியாழக்கிழமையும், பெரியவாளைப் பார்க்க லட்சுமி நாராயணன் என்பவர் காஞ்சிபுரம் செல்வது வழக்கம்.
அப்படி ஒரு வியாழக்கிழமையன்னிக்கு வந்தப்போது, ”நேத்திக்கு எனக்கு ஒரு சொப்பனம். ‘பஞ்சாக்னி ஜுவாலையால எனக்கு ஒடம்பெல்லாம் எரியறது. இங்கே புனருத்தாரணம் பண்ணணும்’னு அம்பாள் சொப்பனத்துல பேசினா.
பூரண அரசியல் சுதந்திரத்தை 1900லேயே துணிவுடன் பிரகனபடுத்திய முதல் அரசியல் தலைவர்...
1905ல் அந்நியத் துணிகளை தீரமுடன் பகிஷ்க்கரித்த முதல் அரசியல் தலைவர்.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக 1906ல் சர்வதேச அளவில் புரட்சி இயக்கத்தை ஏற்பாடு செய்த முதல் இந்தியர்.
தேசவிடுதலைக்கான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்ததினால் சட்டம் பயின்று அதற்க்கான தேர்வுகளில் தேர்ச்சியுற்றும் ஆங்கிலேய வழக்குரைஞர் அவையில் (பார் கவுன்சில்) சேர அனுமதி மறுக்கப்பட்ட முதல் இந்திய மாணவர்.
ஒருநாள் ராத்திரி வழக்கமான மடத்துக் காரியங்கள் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் தூங்கப் போறதுக்கு தயாராகிண்டு இருந்த நேரம் அது.
கிட்டத்தட்ட பத்தரை.... பதினொரு மணி இருக்கும் அந்த சமயத்துல ரொம்ப தொலைவுல இருக்கற ஒரு ஊர்ல இருந்து வயசான பெண்மணி ஒருத்தர். பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.
பரமாசார்யாள் அந்தப் பெண்மணிக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு., மடத்துல கைங்கர்யம் செஞ்சுண்டிருந்த ஒருத்தரை கூப்பிட்டார்.
"எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா..?" அப்படின்னு கேட்டார்.
எல்லாருக்கும் ஆச்சரியமான ஆச்சர்யம்...
அமிர்தமாவே இருந்தாலும் ஆசைப்படாத பெரியவா., ரவாதோசை வேணும்னு கேட்கறார். அதுவும் எனக்கு திங்கணும்போல இருக்குன்னு சொல்றார்.
பிறப்பொடு மூப்பொன்றில்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை இறப்பெதிர் காலக்கழிவுமானானை ஏழிசையின் சுவை தன்னை சிறப்புடைமறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோவிலினுள்ளே மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.