**#பெண்கள்_மருதாணி அணிவதற்கு பின் உள்ள அறிவியல் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் **

நம் மரபில் ஒவ்வொரு சிறு சடங்குகளும் சம்பிரதாயங்களும் காரண காரியத்தோடே உருவாக்கப்பட்டது . அவ்வகையில் பெண்கள் தங்கள் கையில் மருதாணி அணிந்து கொள்வது என்பது வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்ல.
அந்த மருதாணிக்கு பின் ஆச்சர்யமூட்டும் அறிவியல் நன்மைகளும் ஆன்மீக முக்கியத்துவமும் உள்ளது.

மருதாணி அணிந்து கொள்வது எத்தனை நல்லதோ அதை போலவே, மருதாணி மரம் வளர்ப்பதும் மிகவும் சிறப்பானது என கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி மகாலட்சுமியின் அம்சமான மருதாணியை வீட்டின் முன்
வளர்த்து வர சகல விதமான ஐஸ்வர்ய பாக்கியமும் கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் மருதாணி என்பது சுக்கிரனின் அம்சமாக கருதப்படுகிறது.

அறிவியல் ரீதியாக பார்த்தால் மருதாணி மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். இதனை அணிந்து கொள்வதால் உடல் சூடு தனியும் மற்றும் நகக்கண்ணில் உள்ள அழுக்கு கிருமி
ஆகியவை நீங்கும். மேலும் மருதாணி அணிபவருக்கு அது சிவக்க கூடிய நிறத்தை வைத்தே அவர்களின் உடல் நிலையை இயற்கை வைத்தியத்தில் கணிக்க முடியும். அடர் சிவப்பாகவோ அல்லது மிகவும் கருப்பாகவோ சிவந்தால் அவர்களுக்கு உடலில் பித்தம் அதிகம் எனவும் சொல்வதுண்டு.இது போல அதுசிவக்கும் தன்மைகேற்பஒருவரின்
உடல்நிலை இருக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் இதனை இளம் நரை உள்ளவர்கள் இயற்கை சாயமாக இதனை அரைத்து பூசுவது இன்றைய காலத்தில் வழக்கமாகி வருகிறது. அடிப்படையில் மருதாணி தலைமுடிக்கு நல்ல ஊட்டசத்தை தரக்கூடியது.

இவையனைத்திற்கும் மேலாக மருதாணி குறித்து சொல்லப்படும் புராண கதை யாதெனில்,
ராவணனை வதைத்து சீதையை மீட்ட போது சீதாபிராட்டி ராமரிடம், நான் இங்கிருந்து அவதியுற்ற போது என் கவலைகள் அனைத்திற்கும் செவி கொடுத்தது இந்த மருதாணி செடி தான். நான் இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று சொல்லி என்ன வரம் வேண்டும் கேள் என சீதாபிராட்டி மருதாணியிடம் கேட்டார்.

அதற்கு மருதாணி
செடிஅனைத்துபெண்களும் இன்புற்றிருக்கவேண்டும்என்பதேஎன்விருப்பம்எனதெரிவித்தஅந்தபரிசுத்தமானமனதைகண்டுஉன்னைஅணிபவருக்குஅனைத்துவிதமானசுபிக்‌ஷங்களும்கிடைக்கும்எனவரமளித்தார்அதனாலேயேஇன்றும்திருமணத்திற்குமுன்பாகவும்மற்றநல்லசுபகாரியங்களின்போதும்பெண்கள்மருதாணிஅணிவதைஒருசடங்காகவைத்திருக்கின்றனர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with நம்அழகியஆன்மிகம்nam azhagiya aanmeegam

நம்அழகியஆன்மிகம்nam azhagiya aanmeegam Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @LakshmiRamamoo5

Dec 24, 2021
#திருப்பாவை பாசுரம் 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய்
அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!

பொருள்:

ஒவ்வொரு தோழியாக எழுப்பிக் கொண்டு வருகையில் நந்தகி என்ற தோழியின் வீடு அடுத்து வருகிறது. அவளும் உள்ளே உறங்கிக்கொண்டிருக்கிறாள். அத்தோடு கதவும் அடைத்திருக்கிறது. அவளை வெளியிலிருந்தே அழைக்கின்றாள் ஆண்டாள்.
முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை
Read 7 tweets
Dec 24, 2021


#திருவெம்பாவை பதிகம் 10

பாதாளம் ஏழினும் கீழ்

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்:

ஏழு பாதாள உலகங்களையும் தாண்டி, சொற்களால் விவரிக்க முடியாத எல்லையையும் தாண்டி நிற்பன பெருமானது திருவடிகள்: நிறைந்த மலர்களால் அழகு செய்யப்பட்ட
அவனது திருமுடியோ அனைத்து பொருட்களின் முடிவுகளையும் கடந்தது. உமை அம்மையைத் தனது உருவத்தின் ஒரு பகுதியில் ஏந்தியுள்ள பெருமானின் திருவுருவம் ஒன்றல்ல. உலகிலுள்ள அனைத்து உயிர்களிலும் அவன் கலந்திருப்பதால். அனைத்து உயிர்களின் வடிவங்களும் அவனது திருவுருவங்கள். வேதங்கள், தேவர்கள், மற்றும்
Read 5 tweets
Dec 24, 2021
ஆதி சங்கரர் -
சாதன/உபதேச பஞ்சகம் 2

ரெண்டாவது படிக்கட்டு:

सङ्गः सत्सु विधीयतां भगवतो भक्तिर्दृढाऽऽधीयतां
शान्त्यादिः परिचीयतां दृढतरं कर्माशु सन्त्यज्यताम्‌। 
सद्विद्वानुपसृप्यतां प्रतिदिनं तत्पादुका सेव्यतां
ब्रह्मैकाक्षरमर्थ्यतां श्रुतिशिरोवाक्यं समाकर्ण्यताम्‌॥२॥
saṅgaḥ satsu vidhīyatāṁ bhagavato bhaktirdṛḍhā”dhīyatāṁ
śāntyādiḥ paricīyatāṁ dṛḍhataraṁ karmāśu santyajyatām | 
sadvidvānupasṛpyatāṁ pratidinaṁ tatpādukā sevyatāṁ
brahmaikākṣaramarthyatāṁ śrutiśirovākyaṁ samākarṇyatām ||2||
சங்க ஸத்ஸூ விதீயதாம் பகவதோ பக்திர் த்ருத தீயதாம் ஸந்த்யாதி பரிசீயதாம் த்ருததரம் கர்மாஷு ஸந்த்யஜ்யதாம்
சத்வித்வானுபஸ்ரூப் யதாம் ப்ரதிதினம் தத்பாதுகா சேவ்யதாம்
ப்ரம் மைகாக்ஷரமர்த்யதாம்
Read 8 tweets
Dec 24, 2021
ஆதி சங்கரர் -
சாதன /உபதேச பஞ்சகம் 1

எத்தனையோ அற்புத காவியங்கள் நூல்களை படைத்த ஆதிசங்கரின் ஒரு ஐந்து ஸ்லோகங்கள் இன்று அறிந்து கொள்வோம். சாதன பஞ்சகம் எனவும் உபதேச பஞ்சகம் என்றும் இதற்கு பெயர். வேதாந்தத்தை கசக்கி பிழிந்து சாரமாக ஐந்து ஸ்லோக ஏணிப்படிகள். .
ஒவ்வொன்றும் 4 வரி X ரெண்டு படிகள். எனவே ஐந்து ஸ்லோகங்களில் 40 படிகள் கடக்கவேண்டும். சாதனை அப்போது தான் பயன் தரும். படிகளில் ஏறுவோமா?
वेदो नित्यमधीयतां तदुदितं कर्म स्वनुष्ठीयतां
तेनेशस्य विधीयतामपचितिः काम्ये मतिस्त्यज्यताम्‌।
पापौघः परिधूयतां भवसुखे दोषोऽनुसन्धीयतां
आत्मेच्छा व्यवसीयतां निजगृहात्तूर्णं विनिर्गम्यताम्‌॥१॥
Read 8 tweets
Dec 23, 2021
#திருப்பாவை பாசுரம் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் Image
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள்:

கிழக்கே வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன. எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். ஆனாலும் உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு,
உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமான கிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் ‘ஆஆ’ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே!
Read 4 tweets
Dec 23, 2021
#திருவெம்பாவை பதிகம் 8

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை Image
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்!

பொருள்:

கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன.வெண் சங்குகள் முழங்குகின்றன.

இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம்.
அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய்.

உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.

பனிபடர்ந்த இருள் சூழ்ந்த மார்கழி காலையை சூரியன் எப்படி பிரகாசமாக்குகிறானோ, அதுபோல் ஆணவம், பொறாமை, அறியாமை ஆகிய இருள் சூழ்ந்த மனதை
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(