நம்அழகியஆன்மிகம்nam azhagiya aanmeegam Profile picture
https://t.co/6Ei3lUAbCc nam azhagiya aanmeegam YouTube channel link ☝️ temple thalapuranam mahaperiyava Arputhangal aanmeegam
May 27 7 tweets 2 min read
**#பெண்கள்_மருதாணி அணிவதற்கு பின் உள்ள அறிவியல் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் **

நம் மரபில் ஒவ்வொரு சிறு சடங்குகளும் சம்பிரதாயங்களும் காரண காரியத்தோடே உருவாக்கப்பட்டது . அவ்வகையில் பெண்கள் தங்கள் கையில் மருதாணி அணிந்து கொள்வது என்பது வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்ல. அந்த மருதாணிக்கு பின் ஆச்சர்யமூட்டும் அறிவியல் நன்மைகளும் ஆன்மீக முக்கியத்துவமும் உள்ளது.

மருதாணி அணிந்து கொள்வது எத்தனை நல்லதோ அதை போலவே, மருதாணி மரம் வளர்ப்பதும் மிகவும் சிறப்பானது என கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி மகாலட்சுமியின் அம்சமான மருதாணியை வீட்டின் முன்
Dec 24, 2021 7 tweets 2 min read
#திருப்பாவை பாசுரம் 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!

பொருள்:

ஒவ்வொரு தோழியாக எழுப்பிக் கொண்டு வருகையில் நந்தகி என்ற தோழியின் வீடு அடுத்து வருகிறது. அவளும் உள்ளே உறங்கிக்கொண்டிருக்கிறாள். அத்தோடு கதவும் அடைத்திருக்கிறது. அவளை வெளியிலிருந்தே அழைக்கின்றாள் ஆண்டாள்.
Dec 24, 2021 5 tweets 2 min read


#திருவெம்பாவை பதிகம் 10

பாதாளம் ஏழினும் கீழ்

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன் கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்:

ஏழு பாதாள உலகங்களையும் தாண்டி, சொற்களால் விவரிக்க முடியாத எல்லையையும் தாண்டி நிற்பன பெருமானது திருவடிகள்: நிறைந்த மலர்களால் அழகு செய்யப்பட்ட
Dec 24, 2021 8 tweets 2 min read
ஆதி சங்கரர் -
சாதன/உபதேச பஞ்சகம் 2

ரெண்டாவது படிக்கட்டு:

सङ्गः सत्सु विधीयतां भगवतो भक्तिर्दृढाऽऽधीयतां
शान्त्यादिः परिचीयतां दृढतरं कर्माशु सन्त्यज्यताम्‌। 
सद्विद्वानुपसृप्यतां प्रतिदिनं तत्पादुका सेव्यतां
ब्रह्मैकाक्षरमर्थ्यतां श्रुतिशिरोवाक्यं समाकर्ण्यताम्‌॥२॥ saṅgaḥ satsu vidhīyatāṁ bhagavato bhaktirdṛḍhā”dhīyatāṁ
śāntyādiḥ paricīyatāṁ dṛḍhataraṁ karmāśu santyajyatām | 
sadvidvānupasṛpyatāṁ pratidinaṁ tatpādukā sevyatāṁ
brahmaikākṣaramarthyatāṁ śrutiśirovākyaṁ samākarṇyatām ||2||
Dec 24, 2021 8 tweets 1 min read
ஆதி சங்கரர் -
சாதன /உபதேச பஞ்சகம் 1

எத்தனையோ அற்புத காவியங்கள் நூல்களை படைத்த ஆதிசங்கரின் ஒரு ஐந்து ஸ்லோகங்கள் இன்று அறிந்து கொள்வோம். சாதன பஞ்சகம் எனவும் உபதேச பஞ்சகம் என்றும் இதற்கு பெயர். வேதாந்தத்தை கசக்கி பிழிந்து சாரமாக ஐந்து ஸ்லோக ஏணிப்படிகள். . ஒவ்வொன்றும் 4 வரி X ரெண்டு படிகள். எனவே ஐந்து ஸ்லோகங்களில் 40 படிகள் கடக்கவேண்டும். சாதனை அப்போது தான் பயன் தரும். படிகளில் ஏறுவோமா?
Dec 23, 2021 4 tweets 1 min read
#திருப்பாவை பாசுரம் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் Image ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள்:

கிழக்கே வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன. எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். ஆனாலும் உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு,
Dec 23, 2021 4 tweets 2 min read
#திருவெம்பாவை பதிகம் 8

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை Image ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்!

பொருள்:

கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன.வெண் சங்குகள் முழங்குகின்றன.

இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம்.
Dec 10, 2021 12 tweets 2 min read
#தெய்வத்தின்_குரல்
நிறைந்த ஆனந்தம்:
(முதல் பகுதி)
கிருதா யுகத்தில் பிருகு என்பவர் தம்முடைய பிதாவான வருணனிடத்தில் போய் “நிறைந்த வஸ்து எதுவோ அதை அப்படி அறிவது?” என்று கேட்டாராம். “நிறைந்த வஸ்து எதுவோ அது காலத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். தேகத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். வஸ்துவிலும் நிறைந்து ஒரு குறை என்பதே இல்லாமல் இருக்க வேண்டும். அத்தகைய நிறைந்த வஸ்துவை எனக்குச் சொல்ல வேண்டும்” என்று பிதாவான வருணனிடத்தில் கேட்டாராம்.

“நீ போய் தபஸ் பண்ணு. அது உனக்கே தெரியும்” என்று வருணன் சொல்லிவிட்டாராம்.
“அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு பிருகு போய்த்
Dec 8, 2021 7 tweets 2 min read
விநாயக பெருமானின் சக்தி வாய்ந்த 12 ஸ்லோகங்கள்

🌺 ஸ்லோகம் 1 :
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.

🌺 ஸ்லோகம் 2 :
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத். Image 🌺 ஸ்லோகம் 3 :
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

🌺 ஸ்லோகம் 4 :
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
Dec 8, 2021 4 tweets 1 min read
காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள் தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தை முறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

2. புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் Image திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.

3. ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகம கடைப்பிடிக்கப்படும். ஆனால்
Dec 7, 2021 5 tweets 1 min read
#தெய்வத்தின்_குரல்

பிரபஞ்சத்தை நடத்தி இத்தனை காரியங்களை செய்தும், கவனித்தும் பலனளித்தும் வந்தாலும் ஸ்வாமி இதனால் எல்லாம் மனம் சலிக்காமல் சாந்தமாக இருக்கிறார். ஈச்வரனை ‘ஸ்தாணு’ என்பார்கள். ‘கட்டை மரம்’, ‘பட்ட கட்டை’ என்று அர்த்தம். உயிரோட்டம் உள்ள மரம்தான்; ஆனாலும் உணர்வில்லாத Image மாதிரி இருக்கிறது. இந்தக் கட்டையை சுற்றிக் கொண்டிருக்கும் கொடி, அம்பாள். அந்தக் கொடிக்கு ‘அபர்ணா’ என்று ஒரு பெயர். அதாவது, ‘இலை இல்லாதது’ என்று அர்த்தம். உயிரோட்டத்துடன், ஆனால் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இல்லாத பராசக்தி என்ற கொடியானது உயிரோட்டம் இருந்தாலும் உணர்ச்சி இல்லாதது
Dec 3, 2021 15 tweets 3 min read
பாரப்பா பழனியப்பா, கேளப்பா சொல்லுவதை. நங்கநல்லூர் J K SIVAN

சுவாமி சிவானந்தா உபதேசிப்பதை படித்தேன் உடனே அதைச் சொல்லவேண்டும் என்று தோன்றியது.

ஒவ்வொரு மனிதனின் அறிவை, சமநிலையை, இயற்கையான அமைதியை தகர்ப்பது எது? Kàmakrodha ca lobhaca dehe tiùñhanti taskara |jànaratnàpahàràya tasmàjjàgrata jàgrata ||

பேராசை, கோபம், இன்னும் இன்னும் வேண்டும் என்ற தேவையற்ற தேடுதல். விழித்துக் கொள் அப்பனே, போதும் இந்த விளையாட்டு. ஜாக்கிரதை.
Dec 3, 2021 11 tweets 2 min read
கொடுப்பவன் பகவானாக இருந்தாலும், அந்த பகவானே உபாயம் என்பதில் நமக்கு
உறுதியான எண்ணம் இருக்க வேண்டும் அல்லவா?
அந்த உறுதியான எண்ணத்தை, அதாவது உபாய நிஷ்டையை நமக்கு அருள்பவள் மஹாலக்ஷ்மி பிராட்டியார்தான் !
மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தால் பகவானிடம் உறுதியான பக்தி ஏற்பட்டு விட்டபிறகுநடப்பது நடக்கட்டும் என்று
கவலை இல்லாமல் விச்ராந்தியாக இருந்துவிடலாம்.
இல்லையென்றால்,
கவலைப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
ஒருவர் காலையில் எழுந்ததில் இருந்தே எதற்காவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார். அதேசமயத்தில்
Dec 1, 2021 8 tweets 2 min read
#ராம_நாமத்தின்_சிறப்பு
ராம ராம ராம !!

முக்திக்கு வழிகாட்டி
ராம நாமம் ஒன்றுக்கே தாரக மந்திரம் என்கிற சிறப்புப் பெயர் உண்டு.தாரக என்ற சொல்லுக்கு படகு அல்லது மோட்சம் அளிக்க வல்லது என்று பொருள். ராம நாமத்தால் மட்டுமே இந்த சம்சார கடலிலிருந்து நம்மை கரை சேர்க்க முடியும் என்பதால், இது Image தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது.

அனைத்து நாமங்களையும் உள்ளடக்கியது
ராம நாமத்தை ஜெபிப்பதாலேயே கடவுளின் ஆயிரம் நாமங்களை ஜெபிப்பதின் புண்ணியம் கிடைக்கிறது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த உண்மையை விளக்கி இருக்கிறார். Image
Dec 1, 2021 11 tweets 2 min read
ஆதி சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN
நிர்வாண தசகம் -

ஆதி சங்கரர் அத்வைத சிந்தாந்த ஸ்தாபகர். ஷண்மத ஸ்தாபகர். அற்புதமான ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களாக வேத சாரம், உபநிஷதுகளை வழங்கியவர். இந்த நிர்வாண தசகம் (நிர்வாணம் என்றால் ''ஆடையில்லாமல்'அல்ல. பிரம்மத்தை தவிர மற்றதில் பற்றற்ற ) Image தசகம் என்றால் 10. ஏழு வயதில் சந்நியாசியாகி, பிறகு மலையாள தேசத்தில் காலடி க்ஷேத்ரத்திலிருந்து காலடி வைத்து நடையாக கிளம்பிய சிறுவன் சங்கரன் காடும் மலையும் கொடிய வனவிலங்குகளையும் கள்வர்களும், கொன்று தின்னும் காபாலிகர்கள், அரக்கர்கள் வாழும்இடங்கள் எல்லாம் கடந்து வடமேற்கே
Dec 1, 2021 10 tweets 2 min read
* ஒருவருக்குப் பல குருமார்கள் இருக்கலாமா? *
*திருப்பூர் கிருஷ்ணன் *
......................................................
* மகாசுவாமிகளிடம் மிகுந்த பக்தி செலுத்தி வந்த ஒரு பெண்மணி மற்றொரு துறவியிடமும் பக்தி கொண்டிருந்தார்.

ஒரு குருவைச் சரணடைந்த ஒருவர் இன்னொரு குரு மேலும் Image பக்தி செலுத்தலாமா என்று அந்தப் பெண்மணிக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அதனால் மனத்தில் சஞ்சலம் தோன்றியது.

கள்ளம் கபடமில்லாத அவர் மகாசுவாமிகளிடமே தன் சந்தேகத்தைக் கேட்டுவிட்டார். மகாசுவாமிகள் சிரித்துக் கொண்டே சொல்லத் தொடங்கினார்,

`பல உறவுக்காரர்கள் உண்டில்லையா உனக்கு? அது
Nov 30, 2021 8 tweets 2 min read
சிறப்பு வாய்ந்தது கார்த்திகை மாதத்தின் தேய்பிறையில் வரும் #ரமா_ஏகாதசி விரதம். இந்த விரத்தை மேற் கொண்டால், மகா விஷ்ணுவின் கருணையைப் பெற முடியும்.

புராண காலத்தில் முசுகுந்தன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். நாட்டு மக்கள் அனைவரும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்று Image உத்தரவிட்டான்.

முசுகுந்தனுக்கு, சந்திரபாகா என்று ஒரு மகள் இருந்தாள். அவளை, சந்திரசேனன் என்ற மன்னனின் மகன் சோபனுக்கு மணம் முடித்துக் கொடுத்திருந்தார்.

ஒரு முறை சந்திரபாகா தன்னுடைய கணவருடன், தந்தையைப் பார்க்க வந்திருந்தார். அப்போது கார்த்திகைமாத தேய்பிறை ஏகாதசி(ரமா ஏகாதசி)வந்தது
Nov 30, 2021 6 tweets 2 min read
#ஸ்ரீவிக்ஷ்ணு_ஸஹஸ்ரநாமத்தின்_சிறப்பு

ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய 🙏🏻🙏🏻

ஒரு முறை கைலாயத்தில் பரமேஸ்வரனிடம் ஸ்வாமி கலியுகத்தில் ப்ரத்யஷ பலனை தரும்
ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் பாமர மக்களும் எப்படி பாராயணம் செய்ய முடியும் என்றாள் அந்த தயாபரி.

அதற்கு சிவபெருமான்!

தேவி அதற்கும் ஒரு உபாயம் Image உள்ளது.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வரும்

ஈஸ்வர உவாச

ஸ்ரீராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே

என்ற ஸ்லோகத்தை மூன்று முறை பாராயணம் செய்தாலே விஷ்ணு சஹஸ்ரநாமமும் பாராயணம் செய்த பலன் அடைவார்கள் என்றார்.
மகிழ்ந்தாள் அம்பிகை.
சரி இந்த விஷ்ணு சஹஸ்ர நாமத்தை
Jul 22, 2021 15 tweets 2 min read
குரு பூர்ணிமா ஸ்பெஷல் !

குரு பாதுகா ஸ்தோத்ரம் !

அனந்த ஸம்ஸார ஸமுத்ரதார
நௌகாயி தாப்யாம், குருபக்தி தாப்யாம்
வைராக்ய ஸாம்ரஜ்யத பூஜநாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||

பொருள்:

எல்லையற்ற வாழ்க்கையெனும் கடலைத் தாண்டுவிக்கும் படகாயும், குருவிடம் பக்தியைத் தரக்கூடியதாகவும், வைராக்யம் என்ற சாம்ராஜ்யத்தைக் கொடுக்கிறதாயும், பூஜிக்கத் தகுந்ததாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!

கவித்வவாராசி நிசாகராப்யாம்
தௌர்பாக்ய தாவாம் புதமாலிகாப்யாம்
தூரீக்ருதா நம்ர விபத்திதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம ||

ப்போம்!!