காடவர்குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளையேயன்றி மற்றொன்றையும் அறியாத கழற்சிங்கநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார்.
அவர் பரமசிவனது திருவருள் வலிமையினால் வடபுலத்தரசர்களைப் போரிலே வென்று, அவர்கள் நாடுகளைக் கவர்ந்து எங்குஞ் சைவசமயந் தழைத்தோங்கும்படி அரசாண்டார்.
இப்படி யொழுகுநாளிலே மாதேவியோடு சிவஸ்தலங்கடோறுஞ்சென்று, சுவாமிதரிசனம் பண்ணித் திருத்தொண்டு செய்வாராகி, திருவாரூரை அடைந்து திருக்கோயிலிலே பிரவேசித்துச் சுவாமியை வணங்கினார்.
அப்பொழுது அவருடைய மாதேவி திருக்கோயிலை வலஞ்செய்து, அங்குள்ள சிறப்புக்களெல்லாவற்றையுந் தனித்தனியே பார்த்துக்கொண்டு வந்து, திருமாலைகட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு புதுப்பூவை எடுத்து மோந்தாள்.
உடனே செருத்துணைநாயனார் இதனைப் புஷ்பமண்டபத்துள் எடுத்து மோந்தாள் என்று நினைத்து, விரைந்து ஓடி வந்து, அவளைக் கூந்தலிலே பிடித்து இழுத்து வீழ்த்தி, அவளுடைய மூக்கைப் பிடித்துக் கத்தியினாலே அரிந்தார். அவள் சோர்ந்து புலம்பினாள்.
அப்பொழுது கழற்சிங்கநாயனாரும் சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு, அவளுக்குச் சமீபத்தில் வந்து, அவளைப் பார்த்து, மிகக்கோபித்து, 'சிறிதும் அஞ்சாமல் இந்தக் கொடுஞ்செய்கையைச் செய்தவர்யாவர்" என்று வினாவ, செருத்துணை நாயனார் "இவள் சுவாமிக்குச் சாத்தற்பாலதாகிய புஷ்பத்தை எடுத்து மோந்தமையால் நானே…
…இப்படிச் செய்தேன்" என்றார். அப்பொழுது கழற்சிங்கநாயனார் அவரை நோக்கி, "புஷ்பத்தை எடுத்த கையையன்றோ முன் துணிக்கவேண்டும்" என்று சொல்லி, கட்டிய உடைவாளை உருவித் தம்முடைய மாதேவியினது புஷ்பமெடுத்த கையைத் துணிந்தார். அது கண்டு, தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தார்கள்.
இவ்வரிய திருத்தொண்டைச் செய்த கழற்சிங்கநாயனார் நெடுங்காலஞ் சைவநெறி தழைத்தோங்க அரசியற்றிக் கொண்டிருந்து பரமசிவனுடைய திருவடிநீழலை அடைந்தார்.
ஒரு சமயம், காஞ்சிபுரம் அருகிலுள்ள கலவையில் காஞ்சி மகாபெரியவர் முகாமிட்டார். அங்குள்ள கிராமதேவதை கோயிலுக்குச் சென்று வணங்கிய பெரியவர், தான் முகாமிட்டிருந்த அந்தணர் தெருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
கலவைக்குச் செல்லும் வழியில் ஒரு கால்வாய் மதகு இருந்தது.
அதன் இருபுறமும் இரண்டு அடி உயரத்திற்கு சுவர்.. பெரியவர் கலவைக்குச் செல்லும் போது, அந்த சுவர்களின் மீது பொருள் ஏதுமில்லை. திரும்ப வரும் போது, ஒரு சுவரில் பரங்கிக்காய், பூசணிக்காய், தேங்காய், அவரை, இளநீர், வேர்க்கடலை எல்லாம் இருந்தது
.
நாம் போகும்போது, இங்கே ஏதுமில்லை.
இப்போது, இவை எப்படி இங்கு வந்தன என்று பெரியவருடன் சென்றவர்கள் முகத்தில் கேள்வி..!
பெரியவர் அந்தக் கேள்விக்குறியைக் கவனித்தார். நடந்து கொண்டிருந்தவர் அப்படியே நின்று விட்டார். அங்குமிங்குமாக நடமாடினார். நாலு பக்கமும் மாறி மாறி திரும்பினார்.
கோவில்கள் சிதிலமடைந்து நமது கிராமங்கள் நிர்கதியாக இருக்கிறது..நாம் என்ன செய்ய வேண்டும் என்று மஹா பெரியவா நித்தியம் கைங்கர்யம் செய்வோம் என்று பிடி அரிசி திட்டம் போல நம் பங்கு செய்ய வழி சொல்லி கொடுத்தார் .அவர் காட்டிய வழியில் நம்மால் முடிந்த அளவு உதவி செய்வோம்..நம் தர்மம் நாம்…
…காப்போம்
Our temples are in dilapidated state in all villages in tamilnadu
Maha periyava has shown us the path of small funding (pidi arisi thittam ) but daily funding will help in a long way
Let us follow his path and continue to support regularly and protect our dharma
THITHI: CHATHURDASI upto 03:49 pm THEN AMAVASAI
NAKSHATHRAM: KRITHIKA full day
YOGAM: ATHIKANTA up to 11:45 pm late night
KARANAM: SHAKUNI till 03:49 pm THEN CHATHUSHPADA
கேள்வி : உயிர்க்காெலை செய்வது பாவம் எனப்படுகிறது. படிப்பு நிமித்தமாக உயிர்க்காெலை செய்ய வேண்டியிருக்கிறது.
அதற்கு என்ன பரிகாரம் செய்வது?
அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :
எந்த நாேக்கத்தில் செய்தாலும் பாவம்தான். மருத்துவ வித்தையை(கல்வியை) கற்றுக்காெள்வதற்காக, மருத்துவ அறிவு வேண்டும் என்பதற்காக உயிர்களை பகுத்துப் பார்ப்பதை நாங்கள் ஏற்கவில்லை.
பாேகன் பாேன்ற சித்தர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? எதையும் சாேதிப்பதற்கு முன்னால் தன் உடலுக்கு அந்த மருந்தை செலுத்திப் பார்த்துதான் சாேதனை செய்வான். ஒன்று ஞானத்தில் அறிந்துகாெள்ள முயல வேண்டும், இது தக்கது, இது தகாதது என்று.