சங்க காலம் வீரயுகக் காலம். இக்காலகட்டத்தில் உலகம் முழுக்கப் பாண் சமூகத்தாரின் தேவை இருந்தது.
தமிழ்ச் சூழலில் அது இன்னும் சற்று விரிவான சமூகமாகப் பரிணமித்திருந்தது.
கிரேக்கம், வேல்ஷ், ஐஸ்லாந்தியம், செல்டிக், ஸ்லேவோனியம் முதலான மரபுகளை ஒப்பிடும்போது தமிழ்ப் பாண் சமூகம் 24 குடிகளாக விரிந்து நின்றது.
சங்க காலத்தில்,
பாடல் ஆடல் கலைக்கும், நிகழ்த்துக் கலைக்கும்,
சடங்குசார் கலைக்கும்,
போர்க்கள வீரர்களின் எழுச்சிக்கும், தூது செல்வதற்கும், வாயில்களாகச் செயல்படுவதற்கும் பெரும் பங்காற்றியவர்கள் #பாண் சமூகத்தார்.
இவர்கள் ஊர்ச் சுற்றும் வல்லுநர்கள்.
பயணம், நாடு சுற்றுதல் இவையிரண்டும் இவர்களின் வாழ்வியல்.
ஒவ்வொரு வகையான பாண் சமூகத்தாரும், நிலைகுடியினருக்கு ஒரு குறிப்பிட்ட கலைச் சேவையை நிறைவு செய்தார்கள்.
இக்கலைச் சேவை மூலம் பாண் சமூகத்தார் சங்க காலத்தில் பல்வேறு திணைகளையும், பல நாடுகளையும் தம் பயணம் வழி இணைத்தார்கள்.
இவற்றிற்கிடையே பண்பாட்டுப் பாலம் அமைத்தார்கள்.
சங்க இலக்கியம் உள்ளிட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆழ்ந்து நோக்கும்போது சங்ககாலத்திலும், அதற்கடுத்த காலகட்டங்களிலும் ஏறக்குறைய ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்தது 18 ஊர்ச்சுற்றும் குடியினர் அலைகுடிகளாக இருந்து வந்துள்ளனர் என்பது தெரிகிறது
இவர்களின் சமூக-பண்பாட்டு அசைவியக்கம் பன்முகத் தன்மையுடன் காணப்பட்டது.
இவர்கள் சீறூர் முதல் நகரங்கள் வரை சுற்றித்திரிந்து வந்ததால்,
இவர்கள் ஒரு நிலையில் ‘பண்பாட்டுத் தொடர்பாளர்கள்’ எனும் நிலையிலும்...
பல்வேறு திணைகளுக்கிடையில் சுற்றித்திரிந்ததால்,
‘சமயம் சார்ந்த கருத்துகளைப் பரப்புபவர்கள்' எனும் நிலையிலும்,
சிறுகுடிகளுக்கும், பெருங்குடிகளுக்கும் இடையில் ஊடாடி வாழ்ந்ததால் இக்குடிகளுக்கிடையில்...
பண்பாட்டுப் பாலம் அமைத்துப் 'பன்மைப் பண்பாட்டை ஏற்கச் செய்தவர்கள்' எனும் நிலையிலும் செயல்பட்டார்கள்.
இன்று பூம்பூம் மாட்டுக்காரர்கள் (ஆந்திராவில் #கங்கேத்துலு எனவும், வட இந்தியாவில் #நந்திவாலா எனவும் அழைக்கப்படுபவர்கள்) வட தமிழகத்தில் #தேசிங்குராஜன் கதையைப் பரப்பியவர்கள்.
தென் தமிழகத்தில் அழகர் மாட்டுக்காரர்கள் 'வள்ளி திருமணம்' கதையைப் பரப்புகிறார்கள்.
இவ்வாறாகவே சங்க காலத்திலும் பாண் சமூகத்தார், திணைக்குடிகளின் மரபுகளுக்கேற்ப வெவ்வேறு நிகழ்த்துக் கலைகளையும், மற்ற வழக்காறுகளையும் மக்களிடம் கொண்டு சென்றார்கள்.
சங்க காலம் தொட்டு உருவெடுத்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு உருவாக்கத்தில், ஊர்ச் சுற்றும் வல்லுநர்களான பாண் சமூகத்தார்,
சீறூர் மக்களின் (அ) திணைசார் மக்களின் ‘தனிமரபு'களை ஒரு புறத்திலும்,
மருதநில நகரங்கள், நெய்தல் நில வணிகத் துறைமுக நகரங்கள் ஆகிய இடங்களில் வளர்ந்த...
பொதுமரபினை மறுபுறத்திலும் இணைப்பவர்களாகவும், கொண்டு கொடுத்துப் பாலம் அமைப்பவர்களாகவும்,
ஒரு மரபை இன்னோர் இடத்தில் அறிமுகப்படுத்துபவர்களாகவும் செயல்பட்டுள்ளனர்.
பாண் சமூகத்தாரின் இவ்வகையான இணைப்பாலும் பரிவர்த்தனையாலும், இருவேறு மரபுகள் கொண்டு கொடுத்து இடைவினை புரியத் தொடங்கின.
இத்தகைய அசைவியக்கத்தில் 'கிராமங்களில் நகரியம்' எனும் பண்பையும்,
'நகரங்களில் கிராமியம்’ எனும் பண்பையும் ஊடாட்டம் செய்பவர்களாக, இந்த ஊர்ச் சுற்றும் வல்லுநர்கள் பங்கு பணியாற்றினர்.
முல்லைத் திணை ஆயர்களின் இசைக்கருவியான குழலானது,
பிற்காலத்தில் பொதுமரபில் வந்து சேர்ந்துவிட்ட ஓர் இசைக் கருவியாக இருப்பதைக் காண்கிறோம்.
'வேலன் வெறியாடல்' மூலம் முருக வழிபாடு மற்ற திணைகளுக்கும் அறிமுகமானது.
கழைக்கூத்தும், இன்னும் சில நிகழ்த்துக் கலைகளும் பல திணை மக்கள் விரும்பிப் பார்ப்பவையாக வளர்ந்தன.
இவ்வாறு வெவ்வேறு பண்பாட்டுக் கூறுகள் பல திணைகளுக்கும் பரவின.
இத்தகைய #அசைவியக்கம் அக்காலத்தில் கலைஞர்களால் மட்டுமே சாத்தியமானது.
ஐந்து திணைகளிலும் வாழ்ந்த நிலைகுடிகள், அவரவருடைய தனிமரபுகளையே பேணி வந்தார்கள்.
இவர்கள் அனைவரையும் இணைக்கும் பாலமாகக் #கலைஞர்கள் மட்டுமே செயல்பட்டார்கள்.
இந்தப் பயணக் கலைஞர்கள் பயணத்தினூடாகப் பல்வேறு வகையினங்களில் பாடல்களைப் பாடியுள்ளனர்; ஆடியுள்ளனர்.
திணைகளுக்கேற்ற பண்களையும், இசைக் கருவிகளையும் பயன்படுத்தினார்கள்.
#நிகழ்த்துதலே பாண் மரபின் தனித்துவமாகும். இது புலவர் மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
சங்க காலத்தில் வீரயுகச் சமூகத்தையும், பண்பாட்டையும், அரசியலையும்...
இன்னும் சொல்லப்போனால் நாட்டின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும், மன்னனை மையமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருந்தது.
இந்த அசைவியக்கத்தினை உந்து செலுத்துவதில், மன்னர்களும் பாணர்களும் (புலவர் உட்பட) ஒன்றிணைந்தனர்.
இந்த அசைவியக்கத்தின் செல்நெறியை முழுமைப்படுத்துவதில் பாண் சமூகத்தினர் பெரும்பங்கு வகித்தனர்.
அதனாலேயே அவர்கள் ஒரு விரிவான சமூகப் படிநிலையோடும், சமூக அடுக்கமைவோடும், தங்களுக்கான சமூகப் பங்கு பணிகளோடும், இன்னும் பிற சமூகக் கூறுகளோடும் செயலாற்றினர்.
சங்க காலம் வீரயுகக் காலமொன்றின் நீட்சியெனலாம்.
முதுகுடி மன்னன், சீறூர் மன்னன், குறுநில மன்னன், வேந்தர் ஆகிய நான்கு வகையான சமூக அரசியல் வடிவங்களில் குடிகளின் சிறப்பு பெரிதும் போற்றப்பட்டது.
ஒவ்வொரு குடிக்குரிய வரலாறும், புகழும் திரும்பத் திரும்பப் பேசப்படுவது ஒரு வரலாறாகக் கருதப்பெற்றது.
அரசவைகளில் இது புகழ்ச்சிப் பாடல்களாக அரங்கேறியது.
பாண் சமூகத்தார் குல வரலாறு சொல்பவர்களாக, குடிவழிப் பெருமை பேசுபவர்களாக, வம்சாவளியின் தொடர்ச்சியைச் சொல்பவர்களாக...
முன்னோர்களின் வீரதீரச் செயல்களை எடுத்துரைப்பவர்களாக, போர்க்களத்தில் மறவர்களுக்கு எழுச்சியூட்டுபவர்களாக, வெற்றி பெற்ற மன்னனுக்கு ஆடல் பாடல் மூலம் களிப்பூட்டுபவர்களாக, பொதுமக்களின் அக வாழ்வில் வாயில்களாக நின்று பல்வேறு உதவிகள் செய்பவர்களாக...
இவ்வாறு இன்னும் பலவகைகளில் பங்குபணி ஆற்றுபவர்களாகச் செயல்பட்டுள்ளனர்.
பாண் சமூக மரபின் அதிகபட்ச வளர்ச்சியானது வீரயுகக் காலத்தில்தான் ஏற்பட்டது.
அக்காலத்தில்தான் அது உன்னதமான உச்சக் கட்டத்தை அடைந்தது.
வீரயுகக் காலம் முழுவதும் முதுகுடி மன்னர், சீறூர் மன்னர், குறுநில மன்னர் எனச் சிறிய அளவிலான குடியினர் கோலோச்சினார்கள்.
பண்டைத் தமிழகத்தின் #பாலை என்பது நிலையான திணை அல்ல.
குறிஞ்சியிலும், முல்லையிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டபோது #பாலை எனும் வறண்ட பிரதேசம் உருவானது.
கோடையின் மிகக் கடுமையான வறட்சியிலும், இந்நிலத்தில் பாலை மரம் வாடாமல்...
பசுமையுடன் கண்ணுக்குப் புலப்பட்டதால், பாலை என்ற பெயர் இத்திணைக்கு வந்தது என்ற ஒரு கருத்தும் உண்டு.
வேனிற்கால நண்பகலிலும், பாலை மரத்தின் மலர்கள் கொத்துக் கொத்தாகக் கொடுஞ்சுரங்களின் வழிகளில் மலர்ந்திருக்கும் என #ஐங்குறுநூறு (383) மிக அழகாகப் பதிவு செய்துள்ளது.
அதனாலேயே வெஞ்சுரமானாலும் அது பாலை எனப்பட்டது.
இதன் நீட்சியாக அங்கு இசைக்கப்பட்ட #பண் ‘பாலைப் பண்’ எனவும்,
அதனை இசைத்த #யாழ் ‘பாலை யாழ்’ எனவும் வழங்கப்பட்டன.
இச்சூழலில் பாலை என்பது ஒரு தனி நிலம் அன்று எனும் கருத்து கவனிக்கத்தக்கது (நற். 43, 84, 186).
சங்ககாலக் குறிஞ்சித் திணை மக்களின் உணவு முறைகள்...!
மனிதகுல வரலாற்றில் தோன்றிய ஆதி வாழ்க்கை முறை வேட்டையாடி உணவு சேகரித்தலாகும்.
இதனைச் சங்ககாலக் குறிஞ்சித் திணையின் வாழ்வு முறையில் காண முடிகிறது.
ஆதியில் #வேட்டுவர்கள் நெருப்பைக் கண்டுபிடிக்கும் முன்னர் இறைச்சியைப் பச்சையாக, சமைக்காமல் உண்டனர்.
இதனைப் புறநானூற்றுப் பாடல், போர் முனைக்குச் செல்லும் வேகத்தில் வீரன் பச்சை ஊனைத் தின்று, கள்ளை மாந்தி, கையை வில்லில் துடைத்துக்கொண்டு சென்றான் என்கிறது.
அவசர காலங்களில், சிலவகை இறைச்சிகளைப் பச்சையாக உண்ணும் பழக்கம், ஆதி நாளில் பின்பற்றப்பட்ட நடைமுறையின் தொடர்ச்சி எனலாம்.
#புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சியைப் #பூநாற்றம் உடைய புகையையூட்டி, உண்ணப்பட்டதைப் #புறநானூறு
பின்வருமாறு குறிப்பிடுகிறது.
சங்க காலத்தில் உப்பு நான்கு முறைகளில் தயாரிக்கப்பட்டது.
▪︎ கடல் நீரை நேரடியாகப் பாத்திகளில் தேக்கி வைத்து, சூரிய வெப்பத்தால் அது காய்ந்து வற்றிய பின்னர், பாத்திகளில் படியும் உப்பைச் சேகரித்துள்ளனர் எனப் பின்னரும் பாடலடி குறிப்பிடுகிறது.
▪︎ #உமணர்கள் உப்பளங்களின் பாத்திகளில் கடல் நீரை நிரப்பி உப்பை விளைவித்தனர். நற்றிணையின் 254ஆம் பாடல் இச்செய்முறையை விவரிக்கிறது.
▪︎ பூமிக்கு அடியில் உள்ள உப்புநீரைக் கிணறுகளின் வாயிலாக வெளிக் கொணர்ந்து பாத்திகளில் தேக்கி வைத்து உப்பு விளைவித்தனர்.
▪︎ இன்னொரு முறையில் #கழியுப்பு தயாரிக்கப்பட்டது. கடலை அடுத்துள்ள கழிமுகத்தில் கடல்நீர் உட்புறம் பாய்ந்து தேங்கிக் காணப்படும்.
சூரிய வெப்பத்தில் இந்த உவர்நீர் வற்றிக் காய்ந்து உப்பாக மாறும். இதனைச் சங்க இலக்கியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.