ஏமப்பேறுர் என்னும் சிவத்தலம், சோழர்களுக்குச் சொந்தமாகிய பொன்னி நாட்டில் அமந்துள்ளது. இத்தலத்திலுள்ள அந்தணர்கள் வேள்விச் சாலையில் அருமையான பூஜை மேடை மீது வெண் மணலைப் பரப்பி இடை இடையே செந்தீயை வளர்த்து வேத பாராயணம் செய்வர்.
இத்தகைய சீரும் சிறப்பு மிக்குத் தலத்தில் சைவ நெறியில் ஒருமைப்பட்ட அந்தணர் குலத்தில் நமிநந்தியடிகள் நாயனார் தோன்றினார்.
இவர் எக்காலத்தும் எம்பெருமசன் திருவடிகளை இடையறாது வணங்கி வழிபட்டு வரும் பெரும் பேறு பெற்றிருந்தார்.
இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்ற கூற்றுப்படி அனைத்திலும் வியாபிக்க கூடிய இறைவனை இயற்கையாக கிடைக்க கூடிய கற்களில் சுவாமி ஐ ஆவாகனம் செய்து பூஜை செய்யும் எளிய முறை தான் பஞ்சாயதன பூஜை.
மிகவும் எளிமையான பூஜை முறை.
பூஜை செய்து முடிக்க பத்து நிமிடங்கள் போதும்.
இன்றைய காலகட்டத்தில் பலரும் வேலை பளு காரணமாக பூஜை செய்ய முடியாமல் இருக்கிறார்கள்.