அடுத்த நாள் எம்ஜிஆர் அவர்களின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில்
"ஏய்_கருணாநிதி!... என்று தொடங்கி புரட்சித்தலைவர் ஆட்சியிலா ஊழல்? என்று கேள்விக்கணைகளை வீசி, “அரசியலின் அசிங்கமே.
தமிழகத்தின் களங்கமே" என்று பதிலடி கொடுத்திருந்தார்...
அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது...
‘உடன்பிறப்பே பார்த்தாயா?...
நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா??...
மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா???...
யார் இந்த மந்திரக்கோல் (நாஞ்சில் மனோகரன்)?
இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணிமுத்துவின் வீட்டு தாழ்வாரத்தில்
இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல் என்று தொடங்கி ‘நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா நகரில் பத்து லட்சரூபாயில் பங்களா எப்படி வந்தது’ என்று போட்டு தாக்கியிருந்தார். இல்லை தீட்டியிருந்தார் கலைஞர்...
மீண்டும் அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில்...
“ஏய்_கருணாநிதி என்று தொடங்கி ‘அண்ணாநகர் வீடு பத்து லட்சமா? விற்பதுக்கு நான் தயார்...
வாங்குவதற்கு நீர் தயாரா?’
என்று கேட்டு எழுதி கலைஞர் சொல்வதை அபாண்டம் என எழுதியிருந்தார்...
அடுத்த நாள் முரசொலியில்...
‘உடன் பிறப்பே பார்த்தாயா?.
நடிகர் ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது??...
வீட்டை வாங்கத் தயாரா? என்று கேட்கும் போதே...
உதிரம் கொதிக்கவில்லையா?? தோள்கள் துடிக்கவில்லையா???...
அனுப்பு பணத்தை!...
வாங்கு வீட்டை!!’ என்று எழுதி முடிக்கிறார்...
அடுத்த நாளில் இருந்து தொண்டர்கள் அனுப்பும் பணம் வந்தபடியே இருக்கிறது. தினசரி இன்னார் இவ்வளவு தொகை என்றும் எழுதுகிறார். பதிமூன்று லட்சம் ரூபாய் வரை வந்து சேர்ந்தது...
ஆனால் வீடு வாங்குவது பற்றி பேச்சு மூச்சில்லை. கொஞ்ச காலத்தில் நிலை மாறுகிறது...
ஏழைகளின் இறைவன் எம்ஜிஆர் அவர்களிடம் இருந்த நாஞ்சில் மனோகரன் திமுக பக்கம் வந்து விடுகிறார். அதே அண்ணா நகரில் கூட்டம். கலைஞரும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருக்கிறார்கள்...
மைக்கைப் பிடித்த கலைஞர் ‘நாஞ்சில் மனோகரனை ஏகத்திற்கு புகழ்ந்து, இவரைப்போல உண்டா?’ என்கிறார்...
கீழே உட்கார்ந்திருந்த தொண்டன் வழக்கம்போல உய்...உய்...என்று விசிலடித்தார்களே ஒழிய, ‘ஏன்யா...கொஞ்ச நாளைக்கு முன்னதான இவரை கஞ்சிக்கு வழியில்லாம, தாழ்வாரத்தில் படுத்துக்கிடந்தவன், இப்ப பத்து லட்ச ரூபாய் மதிப்பில் பங்களா வீடு கட்டியிருக்கான்னு சொன்னே!...
சொல்லி பணத்தை வசூலிச்சே!!..
இப்ப என்னடான்னா இப்படி சொல்றீங்களே!!!...’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை...
தொண்டன் தொண்டனாகவே இருக்கின்றான்...
தலைவன் தலைவனாகவே இருக்கிறான்...
படுக்க பாயுமில்லாமல் குடிக்க கஞ்சியுமில்லாமல் இருந்து, பத்து லட்ச ரூபாயில் பங்களா வீடு கட்டிய நாஞ்சிலாரை விமர்சித்த அதே தலைவர்தான்
இன்று தலைமுறைகளைக் கடந்த சொத்துக்களை குவித்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை எந்தத் தொண்டனும் கேட்கவில்லை...
அன்று நடிகரின் கட்சி ஊழலைப் பார்த்து கொதித்தவர், இன்று நாடே பார்த்ததிர்ந்த (2 ஜி) ஊழலைப்பற்றி பேசவில்லையே என்று எந்தவொரு தொண்டனும் கேட்கவில்லை...
இதுதான் தொண்டர்களின் தியாகம்...
தொண்டர்கள் தியாகிகளாகவே இருக்கிறார்கள்...
ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிர். அதை ஒவ்வொருவரும் சுய அனுபவ வாயிலாகதான் உணர முடியும்.
*யோகி பரமஹம்ச யோகானந்தா* தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார்.
தான் உடலை விடும் முன்பே, நான் உடலை விடப்போகிறேன் என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து,
தன் உடலை நீத்தார். மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொருத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது.
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி காரியங்களுக்கு பிரசித்தமானவர். 'புல்டோசரை' வைத்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை உடைத்து எடுத்தவர். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இப்போது அவர் இன்னொரு அதிரடி காரியத்தில் இறங்கியிருக்கிறார்.
உ.பி.,யின் தலைநகர் லக்னோவிற்க்கு பின்னால் ஒரு கதை உண்டு. ராமரின் சகோதரர் லக்ஷ்மணனுக்கு இந்த ஊரில் ஒரு அரண்மனை இருந்ததாம். இந்த ஊர் முன்னொரு காலத்தில் லக்ஷ்மண்புரி -என அழைக்கப்பட்டது. இது, பின்னாளில் மருவி லக்கன்பூராகி, ஆங்கிலேயர் காலத்தில் லக்னோ ஆகிவிட்டது.
இதை மீண்டும் லக் ஷ்மண்புரி என்ற பழைய பெயருக்கு மாற்ற யோகி முடிவெடுத்துள்ளாராம். இதற்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இருந்தாலும், பா.ஜ., பெரும்பான்மையுடன் இருப்பதால் பெயர் மாற்றத்தில் எந்தவித பிரச்னையும் இருக்காது. ஒரு பக்கம் ராமருக்கு அயோத்தியில் கோவில்.