உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள்,
என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது.
எனக்குத் தெரியும். என் பெயர் விஜயா. பாரதியின் மூத்த பெண், தங்கம்மாவின் மகள் நான். என் பாட்டி கடையத்தில் வாழ்ந்த போது அவருடன் என் இளமைக் காலத்தைக் கழித்தேன்.
நான் திருநெல்வேலியில் கல்லூரியில் படித்த போது, என் பாட்டி வாழ்ந்த கடையத்தில்தான் என் விடுமுறைகளைக் கொண்டாடினேன்.
பாரதியின் மரணத்தின் போது என் பாட்டிக்கு முப்பதே வயது. இளம் விதவை. கல்வி கற்காத பெண். இரண்டு பெண்கள். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை.
சொத்து என்று இருந்ததெல்லாம் அவள் கணவரின் எழுத்துக்கள் மட்டுமே. கொஞ்சம் அவள் நிலையை எண்ணிப் பாருங்கள். அந்தக் காலத்தில், விதவைப் பெண்களின் வாழ்வு, அவள் உறவினர்களைச் சார்ந்தே இருந்தது. அதுவும் இரண்டு பெண்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு வேறு.
என் பாட்டிக்கு, பாரதிதான் தெய்வம். அவர் மறைவுக்குப் பின், அவர் விரும்பிய புதுமைப் பெண்ணாகவே நடந்தாள் என் பாட்டி. தன்னிடம் இருந்த சில மூட நம்பிக்கைகளையும், மனக் கலக்கங்களையும், தேவையில்லாத பழம் வழக்கங்களையும் விட்டு ஒழித்தாள்.
எதையும் சமாளிக்கும் மன தைரியமும், தீவிர கடவுள் பக்தியும், நல்ல காலம் பிறந்தே தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், விடா முயற்சியும் கொண்டு வாழ்ந்தாள்.
தன் பெண்கள் மற்றும் பேரக் குழந்தைகளின் கல்வி மட்டுமே அவளின் ஒரே குறிக்கோள்.
எப்படியாவது நாங்கள் அனைவரும் – முக்கியமாக பேத்திகள் – படித்து விட வேண்டும் என்று பாடுபட்டாள். நான் டாக்டர் பட்டம் வரை பெற்றதற்கு அவள்தான் ஓரே காரணம்.
தன் கணவன் பாரதியின் நினைவுகளே அவளின் சக்தி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரின் பாடல்களைப் பாடிக் கொண்டும்,
எங்களையும் பாட வைத்துக் கேட்டுக் கொண்டும் இருப்பாள். பாரதியும் எல்லாப் பாடல்களும் அவளுக்கு மனப்பாடம் என்று என் அம்மா சொல்லக் கேட்டு இருக்கிறேன்.
வறுமை என்பதை உணர விடாமலேயே என்னை வளர்த்தாள். நான் கல்லூரியில் இருந்து வரும் போதெல்லாம்,
என்னை வாசலில் இருந்தே கட்டி அணைத்து “வாடாக் குழந்தே.. கை கால் அலம்பிட்டு வா. சாப்பிடலாம்” என்று ஊட்டி விட்டுக் கொண்டே நான் என்னவெல்லாம் படிக்கிறேன் என்று ஆர்வமாய் கேட்பாள்.
1955 ஆம் வருடம். அவளுடன் என் கடைசி விடுமுறை.
“வந்துட்டியாம்மா! உனக்காகத்தான் காத்துண்டு இருக்கேன்” என்று என்னை படுக்கையில் இருந்தபடியே வரச் சொல்லி கட்டி அணைத்துக் கொண்டாள். அவளுக்கு உடல் நலம் சரியில்லை என்பதை எனக்கு எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டாள். “லீவு விட்டதும் வந்தா போதும்”.
அதற்குப் பிறகு, கோமாவில் விழுந்து விட்டாள். ஒரு அசைவும் இல்லை. உணவு செல்லவில்லை. டாக்டர் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று கை விரித்து விட்டார். எல்லோரையும் வரச் சொல்லி விட்டோம். பெண்கள், பேரன் பேத்திகள், உறவினர்கள் என்று வீடு முழுவதும் கூட்டம்.
நான் அவளின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். ஒரு முறையாவது கண் திறக்க மாட்டாளா என்ற ஏக்கம். கண் திறக்கவில்லை. விழி கூட அசையவில்லை.
பின்னிரவு நேரம். வீடே அமைதியில் உறைந்து இருந்தது.
இறுதி நிமிடங்கள் என்று எல்லோருக்கும் தோன்றி இருக்க வேண்டும். நீர் நிறைந்த கண்கள் எதுவும் உறங்கவில்லை.
அவள் உதடுகள் மட்டுமே விரிந்தன.
“திண்ணை வாயில் பெருக்க வந்தேன்.
எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்”
என்று மெல்லிய குரலில் பாட்டி பாடினாள். நிறுத்தி விட்டாள்.
என் மனதுக்குள் அடுத்த வரிகள் எழுந்தன. ஏங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டேன்.
நித்தச் சோற்றினுக்கே ஏவல் செய வந்தேன்;
நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான்.
வித்தை நன்கு கல்லாதவள் என்னுளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்.
அதே இரண்டு வரிகளை இன்னும் ஒரு முறைப் பாடினாள்.
“திண்ணை வாயில் பெருக்க வந்தேன்
எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்”
சில நொடிகள் மௌனம். மீண்டும் அவள் குரல். இன்னும் மெல்லியதாய்.
உடல் எழுப்பும் குரலாய் இல்லாமல், அதை விட்டு விலகிச் செல்லும் அவள் ஆத்மாவின் குரலாய்..
“திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான். திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்”
அவள் மூச்சு நின்று விட்டது.
அவள் அரசன் பாரதி சென்ற நாராயணனின் திருவடிகளுக்கே பாரதியின் செல்லம்மாவும் சென்று விட்டாள்.
என் பாட்டி செல்லம்மாள் பெரும் பாக்கியவதி.
டாக்டர் விஜயா பாரதி, 1960களிலேயே, பாரதியின் கவிதைகளை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் கவிதைகளைப் பிழை நீக்கி நான்கு பகுதிகளாகப் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார்..
அண்ணனின் பதிவிலிருந்து..
தலை வணங்குகிறேன் 🙏o
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
@MumbaichaDon ட்விட்டர் பதிவின் முக்கிய பகுதியின் தமிழாக்கம் ..
இந்த திடீர் கத்தார் கதறல் எதனால் ?
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் மட்டுமா ?
இல்லை ..
கடந்த இரண்டாம் தேதி ஆப்கான் தலைநகர் காபூலில் நம் நாட்டின் வெளியுறவு துறை செயலாளர் திரு JP சிங் , தாலிபான் அரசின் முக்கிய மந்திரிகளை சந்தித்து உள்ளார் ..
இந்தியாவிற்கும் தாலிபானுக்கும் ஏற்படும் இந்த நேரடி தொடர்பு கத்தாருக்கு மட்டும் அல்ல ..
இதுவரை கத்தாரில் வைத்து தாலிபான் தலைவர்களை சந்தித்து வந்த அமெரிக்கா அரசுக்கு இது பெரும் அதிர்ச்சி ..
எங்களை பை பாஸ் செய்து எப்படி இந்தியா தாலிபான்களுடன் பேச்சு நடத்தலாம் என்ற காண்டில் இருந்த கத்தாரின் தோல்கள் மூலம் அமெரிக்கா சுட்ட குண்டு தான் கத்தாரின் மத ரீதியான அறிவுறுத்தல்
திராவிட கருஞ்சூரியனால் இருண்டு கிடக்கும் தமிழகத்தை பௌர்ணமி நிலவாய்
அலங்கரிக்க வந்திருக்கும்
தேய்பிறையே காணாத
காண முடியாத
அன்பு அண்ணா @annamalai_k
அன்பு சகோதரனின்
மனமார்ந்த ஆசிகளோடு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
🧁💐🧁💐🧁💐🧁💐🧁💐🧁
மது போதையில் தள்ளாடி கிடக்கும் தமிழகத்தை
மதுவை ஒழித்து
தெளிய வைக்க வந்திருக்கும்
உத்தமனே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
💐🧁💐🧁🙏🧁💐🧁🙏🧁💐
ஊழல் மண்டி கிடக்கும்
திராவிட அலங்கோல ஆட்சியை
அகற்ற வந்திருக்கும்
ஆதர்ஷ நாயகனே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
🧁💐🧁💐🧁
நாத்திகத்தை புகுத்தி
நாரசமாய் தமிழகத்தை
நாற வைத்த திராவிடத்தை
நாறடித்து
மீண்டும் ஆத்திகத்தின் அருமைகளை பெருமைகளை
உணர வைத்து
தமிழகத்தை தழைக்க வைக்க
மலர்ந்திருக்கும்
குறிஞ்சி மலரே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .....
நம்ம ஹீரோ கட்டுமர பூபதி சோழநாட்டில் ஒரு மிகப்பெரிய சிற்றரசருக்கு மகனான பிறந்தார். அவரது மகனே கூறியது போல சிறிய வயதில் அரிய பல பாலாட்டங்களுக்கு பிறகு தான் பள்ளியில் சேர்ந்தார். பள்ளியில் சேரும் போது தலையை சுற்றி காதை தொட சொன்னார்களாம். நம்ம கட்டுவும் தலையை சுற்றி காதை தொட,
அருகில் இருந்த மாணவனின் காதில் இருந்த கடுக்கன் காணாமல் போய் விட்டதாம்.
சிறுவனாக இருந்த கட்டு, தன் அறிவுக்கு ஏற்ற வகையில் பாடங்கள் இல்லாததால், படிப்பை பாதியிலேயே தியாகம் செய்து விட்டு சென்னைக்கு சென்று மக்கள் சேவையாற்ற வேண்டும் என்ற பேராவல் கொண்டார்.
இதை அவர் தன் தந்தையிடம் கூற, தன் மகன் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்த அவர் தந்தை, புதியதாக ஒரு இரயில் வண்டியையே விலைக்கு வாங்கி அதில் தன் மகனை சென்னைக்கு அனுப்பி வைத்தார். இந்த வரலாற்றை தான் சில விஷமிகள் திரித்து,
நண்பர் ஒருவர் கலைஞர் முதல்வராக இருந்த போது அவரை வரவேற்க வந்திருந்த மாணவர் ஒருவர் கண்கலங்கி நிற்பதை பார்த்த கலைஞர் தாயுள்ளத்தோடு அது பற்றி விசாரித்து அந்த மாணவரை மருத்துவர் ஆக்கிய வரலாறு ஒன்றை பற்றி பதிவிட்டிருந்தார்.
கலைஞர் கருணை வடிவானவர் என்பது உண்மை தான் என்றாலும், அவரின் அன்பு மகன் மட்டும் சளைத்தவரா என்ன???? அவரின் அன்பு மகன் கருணையில் ஏசுநாதரை விட ஒருபடி உயர்ந்தவர் என்று அருகில் இருந்து பார்த்தவர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.
கடந்த வாரம் கலைஞரின் அன்பு மகன் கொரோனா முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்பார்வையிட சென்னையில் உள்ள கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு ஆய்வுகளை செய்து முடித்துவிட்டு,
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் கேஜரிவால்
முதல்வர் மம்தா
முதல்வர் பினராய் விஜயன்
இந்த நால்வருக்கும் எழுதப்பட்ட பதிவு இது . அவர்களைப்பற்றிய பதிவல்ல .ஆனால் அவர்கள் படிக்கவேண்டுமென்ற ஆசையில் பதியப்பட்டது
யாரவது அவர்களிடம் இந்தப்பதிவை காட்டினால் தன்யனாவேன்.
பிரதமர் சமீபத்தில் புயல் சேதங்களை பார்வையிட கிழக்கிந்தியா சென்றார் .அவசரமாக முடிவெடுத்ததால் தாமதமாகத்தான் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு தகவல் சொல்லப்பட்டது.
எனினும் தன்னுடைய நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பிரதமருடன் ஏரியல் சர்வேயில் கலந்துகொண்டார் நவீன்.
முடிந்ததும் ரிவியூ மீட்டிங்கில் கவர்னருடன் கலந்துகொண்டார் .எதிர்க்கட்சி தலைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது . ஆனால் உடல்நலமில்லாததால் அவர் கலந்து கொள்ளவில்லை .