இவ்வூர் வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்று வந்திருக்கின்றது.
முற்காலப் பாண்டியர், சோழர், சேரர் கல்வெட்டுக்களில் இவ்வூர் இடம் பெற்றிருக்கின்றது.
'மும்முடிச் சோழபுரம்', 'மும்முடிச் சோழநல்லூர்', 'சோழ கேரளபுரம்' என்று இவ்வூருக்குப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன.
இது சமயம், அரசியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பெற்று வந்திருப்பதை, #சோழபுரம், #கோட்டாறு, #நாகர்கோயில் இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
இவ்வூரில் சமண சமயத்தைச் சார்ந்த முனிவர்கள் முற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.
சோழர்களது படைத்தலைவர்கள் முகாமிட்டுத் தங்கி, காவல் பணி புரிந்திருக்கின்றனர்.
இதே போன்று இவ்வூரில் கல்வெட்டு பொறிக்கும் கற்சிற்பிகளும், கோயில் திருப்பணி செய்யும் சிற்பிகளும்...