அகநானூற்றின் 265-ஆம் பாடல் வேறொரு வர்ணனையைக் காட்டுகிறது.
வலிமையான வில்லையும் கொடும் பார்வையையும் கொண்ட ஆறலை, #கள்வர்கள் கொழுத்துத் திரியும் எருதினைக் கொன்று அதன் இறைச்சியைத் தீயில் சுட்டுத் தின்பார்கள்.
அப்போது ஏற்படும் தாகத்தைத் தீர்ப்பதற்குத் தோப்பிக் கள்ளை மாந்தனர் எனும் குறிப்பு கீழ்க்காணுமாறு வருகிறது.
ஆநிரை மீட்டு வரும் 'கரந்தை வீரர்கள்' தங்கள் #நடுகல் தெய்வத்துக்குத் துடியை முழக்கி, தோப்பிக் கள்ளோடு செம்மறிக் குட்டியைப் பலி கொடுத்தனர் என்பதை #அகநானூறு (35) பதிவு செய்துள்ளது.
இவ்வூர் வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்று வந்திருக்கின்றது.
முற்காலப் பாண்டியர், சோழர், சேரர் கல்வெட்டுக்களில் இவ்வூர் இடம் பெற்றிருக்கின்றது.
'மும்முடிச் சோழபுரம்', 'மும்முடிச் சோழநல்லூர்', 'சோழ கேரளபுரம்' என்று இவ்வூருக்குப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன.
இது சமயம், அரசியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பெற்று வந்திருப்பதை, #சோழபுரம், #கோட்டாறு, #நாகர்கோயில் இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
இவ்வூரில் சமண சமயத்தைச் சார்ந்த முனிவர்கள் முற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.
சோழர்களது படைத்தலைவர்கள் முகாமிட்டுத் தங்கி, காவல் பணி புரிந்திருக்கின்றனர்.
இதே போன்று இவ்வூரில் கல்வெட்டு பொறிக்கும் கற்சிற்பிகளும், கோயில் திருப்பணி செய்யும் சிற்பிகளும்...