ஒவ்வொரு திணை நிகழ்வையும் மேற்கொள்பவர்கள், அத்திணைப் பெயர் கொண்ட பூவைச் சூடிக்கொள்ளுதல் மரபாகும்.
• போர்க்குரிய காரணங்கள்:
நாடு பிடிக்கும் வேட்கையே போருக்கு முக்கிய காரணமாகும். தம் ஆட்சிக்கு உட்பட்ட #சிற்றரசர்கள் திறை செலுத்தத் தவறிய போது, அரசன் போர் புரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அரசர்கள் தங்கள் நாடுகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியைத் தம் ஆதிக்கத்தில்...
வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலாலும் போர்கள் நிகழ்ந்துள்ளன.
அரசனது மண்ணணாசையும், புகழ்வேட்கையும் போர்க்குரிய காரணங்களாகப் பெரிதும் சுட்டப்படுகின்றன.
•போர் அறங்கள்:
வீரமும், மானமும் கொண்டு போரிட்ட அரசர்கள் போர் அறங்களைக் கட்டிக்காத்தனர்.
படையெடுக்கும் முன் #பறை அறைந்து, தன் படையெடுப்பினைப் பகைவர்க்குத் தெரிவித்தல் மரபாகும்.
சான்றாக, கீழ்காணும் புறநானூற்றுப் பாடலின் வழி, போரின் மரபினை அறிந்து கொள்ள முடிகின்றது.
வன்மை உடையரோடு எதிர்த்துப் போரிடுவதே ஆற்றல் உடையவரின் இயல்பாகும்.
எனவே பாண்டியன் 'பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி',
தான் முற்றுகையிடும் நகர்களில் உள்ள வன்மையற்றாரைப் பாதுகாவலான இடத்தில் சேருமாறு முதலில் எச்சரிப்பான் என்கிறார் புலவர்.
அவ்வாறு எச்சரிக்கப்படுவோர் பயன்தரும் ஆவினம், அவ்வியல்புடைய மக்கள், பெண்டிர், பிணி உடையவர்...
புதல்வரைப் பெறாதோர் ஆவர்.
இத்தகு போர் அறமானது சங்ககால மன்னரிடையே பின்பற்றப்பட்டு வந்துள்ளது என்பதனை இலக்கியங்கள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.
- நன்று.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இவ்வூர் வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்று வந்திருக்கின்றது.
முற்காலப் பாண்டியர், சோழர், சேரர் கல்வெட்டுக்களில் இவ்வூர் இடம் பெற்றிருக்கின்றது.
'மும்முடிச் சோழபுரம்', 'மும்முடிச் சோழநல்லூர்', 'சோழ கேரளபுரம்' என்று இவ்வூருக்குப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன.
இது சமயம், அரசியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பெற்று வந்திருப்பதை, #சோழபுரம், #கோட்டாறு, #நாகர்கோயில் இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
இவ்வூரில் சமண சமயத்தைச் சார்ந்த முனிவர்கள் முற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.
சோழர்களது படைத்தலைவர்கள் முகாமிட்டுத் தங்கி, காவல் பணி புரிந்திருக்கின்றனர்.
இதே போன்று இவ்வூரில் கல்வெட்டு பொறிக்கும் கற்சிற்பிகளும், கோயில் திருப்பணி செய்யும் சிற்பிகளும்...