கடற்கொள்ளையர்களால் தலைகாட்ட முடியாத நல்ல பாதுகாப்பான துறைமுகமாகவும்;
#உரோமர் நாட்டு மக்களை மிகவும் வசீகரித்த 'ஆணி முத்துக்களை' அளிக்கும் பட்டினமாகவும் இருந்தது.
மேலும் அயலவர்களை கொற்கை மக்களும், பாண்டிய பார்வேந்தர்களும் அன்புடன் வரவேற்றுப் போற்றி விருந்தோம்புபவர்களாக விளங்கினர் என்பர்.
இது தமிழரின் விருந்தோம்பும் பண்பினையும், கொற்கை மாநகரின் புகழையும் எடுத்துக் காட்டுகிறது.
யவனர்கள் கொற்கை, புகார் மற்றும் முசிறித் துறைமுகங்களில் இறங்கித் தம் கப்பல்களில் ஏராளமான தோற்குப்பிகளில் மதுவினைக் கொண்டு வந்து தமிழர்க்கு விற்றனர்.
இதைச் சங்கப்புலவர் #நக்கீரனார், பாண்டிய மன்னனைப் போற்றிப் பாடும் போது, பின்வருமாறு பாடியுள்ளார்.
#கொற்கை துறைமுகத்தில் #யவனர்கள் தங்கள் கலன்களை நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவிட்டு, கரையில் இறங்கிக் கடற்கரையில் உள்ள அகன்ற பாதைகளிலும், அருகேயுள்ள சோலைகளிலும்...
கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டும், ஆடிப் பாடிக் கொண்டும் இருந்தனர்.
கொற்கை துறைமுகத்திற்கருகில் பெரிய பண்டக சாலைகள் இருந்தன.
அதில் ஏற்றுமதிக்காகவும், இறக்குமதிக்காகவும் வந்த ஏராளமான பண்டங்கள் மூடை மூடையாக, அணிஅணியாக வைக்கப்பட்டிருந்தன.
ஏற்றுமதிக்கான பொருள்கள் சுங்கச்சாவடியில் சோதிக்கப்பட்டு, பாண்டிய அரசின் 'இணைக்கயல் முத்திரைகள்' பொறிக்கப்பட்டு, ஏற்றுமதித் தீர்வை வசூலிக்கப்பட்டது.
அவ்வாறே இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களும் சோதிக்கப்பட்டு, சுங்கவரி வசூல் செய்யப்பட்டது.
சுங்கச் சாவடிக்கருகில் உயர்ந்த கலங்கரை விளக்கு ஒளிவிட்டோங்கி நின்றது.
கொற்கையில் சிறந்த துறைமுகம் இருந்தது. பாண்டிய நாட்டுப் பண்டங்களும் சேர, சோழ நாட்டுப் பண்டங்களும் இத்துறைமுகத்தின் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டன.
பொற்காசுகளையும், பொற்கட்டிகளையும் கொடுத்து இங்குள்ள மிகுதியான விளைபொருட்களையும் வாங்கித் தங்கள் கலங்களில் ஏற்றிச் சென்றனர்.
சேர நாட்டு மிளகும்,
பாண்டிய நாட்டுச் சந்தனமும், கொற்கை முத்தும்,
மதுரை ஆடையும்,
காவிரிப் பண்டங்களும்,
ஆந்திர நாட்டு மெல்லிய ஆடைகளும், மைசூர்த் தந்தங்களும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.
பாண்டிய நாட்டின் வளம் பெருக்கிய துறைமுகம் கொற்கையாகும்.
#மதுரைக்காஞ்சி முத்தும், சங்கும் குளிப்போர் இருந்த குடியிருப்பை #இருஞ்சேரி எனக் குறிப்பிட்டுள்ளது.
#கொற்கை கொழுமை கொண்ட கோநகர், பழம் பாண்டியர்களின் பண்டைய பட்டினம், யவனர்களும், சோனர்களும், கிரேக்கர்களும், உரோமர்களும், பிற நாட்டவர்களும் தத்தம் நாட்டுக் கொடிகள் பறக்கும் என்பர்.
இது பன்னாட்டுக் கடல்வணிக உறவை வெளிப்படுத்துகிறது.
பன்னாட்டு வணிகர்கள் சீரிய மரக்கலங்களில் களிப்புடன் வந்திறங்கிய துறை #கொற்கைப்பட்டினம்.
பொ.பி முதலாம் நூற்றாண்டில் இந்திய நாட்டின் கடற்கரை வழியாக வந்து சென்ற #பெரிப்ளூசு நூலாசிரியரும், வானநூல் வல்லுநருமான #தாலமி என்ற யவனரும்...
கொற்கைத் துறைமுகம் குறித்தும் தம் நூல்களில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாண்டிய நாட்டில் பாய்ந்தோடிய 'பொருநை ஆறு' கடலோடு கலக்கும் இடத்து முன்துறை #கொற்கை.
பாண்டியர்களின் தலைநகரமாகவும், பெருந்துறையாகவும், பன்னாட்டு நகரமாகவும் #கொற்கை விளங்கியது.
கொற்கையில் முத்து எடுப்பது பெருந்தொழிலாக நடைபெற்றது. கடலில் முத்து எடுப்பவர்களும், கடல் வணிகர்களும் கொற்கையில் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்.
கொற்கை முத்துக்கள் உலகம் முழுவதும் அறியப்பட்டிருந்தன.
கொற்கை #பொருநை ஆற்றின் முன்துறையாகவும், பாண்டிய நாட்டின் தலைநகரமாகவும்...
இருந்ததைப் பற்றி தமிழ் இலக்கியம் கிரேக்க, ரோமானிய கடலோடிகள், சரித்திர ஆசிரியர்கள், சீன வரலாற்று நிபுணர்கள், மார்க்கபோலோ பயணக் குறிப்புகள் அடிப்படையில் எழுதியுள்ளனர்.
இக்குறிப்புகளின் மூலம் கடலால் வாழ்ந்து கடலால் அழிந்துபோன #நெய்தல் நகரத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
கொற்கையின் சிறப்பான வரலாற்றைச் சொல்லும் ஆய்வினை முதன்முதலாக 'இராபர்ட் கால்டுவெல்' மேற்கொண்டார்.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் அவர் #திருநெல்வேலி சரித்திரத்தை எழுதும்போது (A Political and General History of Tinnelvely, Dr. Caldwell, 1881) கொற்கையை முக்கியமாக எடுத்துக்கொண்டார்.
1881ஆம் ஆண்டில் வெளிவந்த அவர் நூல்தான் #கொற்கை பற்றிய ஆய்வுக்கெல்லாம் ஆதாரமாக அமைந்தது என்பர்.
கொற்கைத் துறைமுகத்தின் சிறப்பையும், பாண்டியர்களின் பழங்காலத் தமிழகம் குறித்தும் கால்டுவெல் கூறியுள்ளார்.
பிற்காலத்தில்தான் #மதுரை பாண்டியர்களின் தலைநகரமாக மாறியுள்ளதைச் சிலப்பதிகாரத்தின் 'மதுரைக் காண்டம்' உறுதிப்படுத்துகிறது.
செங்கடற்கரையிலிருந்த ரோமானியத் துறைமுகமாகிய 'மியாஸ் ஹார்மோஸ்' (Myos Hormos) துறைமுகத்திலிருந்து 120 கப்பல்கள் கொற்கைக்கு வந்துள்ளதைப் பதிவு செய்துள்ளார்.
கொற்கைத் துறைமுகத்தில் புகழ்வாய்ந்த தங்கும் விடுதிகள் (Resort) வணிகர்களுக்காகவும், மாலுமிகளுக்காகவும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மரபுவழிக் கலங்களும், அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்...!
கப்பற்கலையில் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கி இருக்க வேண்டுமென்பதை அவர்கள் தொன்றுதொட்டே மேற்கத்திய நாடுகளுடனும், கிழக்கத்திய நாடுகளுடனும் கொண்டிருந்த கடல் வணிகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
அதற்குக் காரணம் தமிழகம் மூன்று பக்கங்களிலும் கடலாற் சூழப்பெற்றுள்ளமையேயாகும்.
பழந்தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுகள், தொல்பொருள் சான்றுகள் ஆகியன நமக்கு இவ்வுண்மையைத் தெளிவுப்படுத்துகின்றன.
தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட #கலங்கள் கடல் வணிகத்திற்கு மட்டுமல்லாமல் மீன் பிடிப்பதற்கும், நீர் வழிப் பயணத்திற்கும், நீர்நிலை விளையாட்டிற்கும், கடற்கொள்ளைக்கும், போட்டிப் பந்தயங்களுக்கும், கடற்போருக்கும் தொழில் திறம்பெற்ற வல்லுநர்களால் ஆக்கப்பட்டுச் செலுத்தப்பட்டு வந்துள்ளன.
#வெப்பர் - வீரன் ஒருவன் அதிரல் எனும் புனலிக்கொடியின் மலரைத் தலைமுடியில் சூடிக்கொண்டு, புலியன் கண் போன்ற நிறத்தையுடைய மதுவை (வெப்பர்) ஓரிருமுறை மாந்தியப் பின்னர் பசுவைக் கவர்ந்து சென்றோரிடம் போரிட்டு மீட்டான்
#வேரி - மலைநாடன் 'வல்வில் ஓரி' வேட்டையில் கொன்ற மான் தசைப் புழுக்கையும் பசுவின் நெய்யுருக்குப் போல் மதுவையும்,
தன் மலையில் உண்டாகிய குற்றமில்லாத நல்ல பொன்னையும் மணிகளையும், கொல்லிப் பொருநனுக்குத் தந்தான்.
#பாண் சமூகத்தார் தன்னை நாடி வந்தபோது, வல்வில் ஓரிக்கு #வேரி எனும் மதுவைத் தந்து மகிழ்வித்தான் என்பதை மேற்காணும் #புறநானூறு வழி அறிகிறோம்.
இவ்வூர் வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்று வந்திருக்கின்றது.
முற்காலப் பாண்டியர், சோழர், சேரர் கல்வெட்டுக்களில் இவ்வூர் இடம் பெற்றிருக்கின்றது.
'மும்முடிச் சோழபுரம்', 'மும்முடிச் சோழநல்லூர்', 'சோழ கேரளபுரம்' என்று இவ்வூருக்குப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன.
இது சமயம், அரசியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பெற்று வந்திருப்பதை, #சோழபுரம், #கோட்டாறு, #நாகர்கோயில் இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
இவ்வூரில் சமண சமயத்தைச் சார்ந்த முனிவர்கள் முற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.
சோழர்களது படைத்தலைவர்கள் முகாமிட்டுத் தங்கி, காவல் பணி புரிந்திருக்கின்றனர்.
இதே போன்று இவ்வூரில் கல்வெட்டு பொறிக்கும் கற்சிற்பிகளும், கோயில் திருப்பணி செய்யும் சிற்பிகளும்...