`தோழமை பாவமா... பக்தி வைராக்கியமா...' -நோய் தீர்க்கும் ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை
சைலபதி
ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை தினம்!
சிவபெருமான், பக்தர்களின் மனத்தில் வாசம் செய்பவர்.
அவர்கள் தன்னை எப்படித் துதிக்கிறார்களோ அப்படியே அருள்பவர். நாயகன் நாயகி பாவம், ஆண்டான் அடிமை பாவம், தோழமை பாவம் என ஈசன் எந்த பாவத்தில் நினைத்தாலும் அப்படியே அருள்பாலிப்பவர். ஈசனைப் பொறுத்தவரை இவற்றில் எது ஒன்றும் உயர்ந்ததும் இல்லை தாழ்ந்ததும் இல்லை.
இதை உணர்த்த ஈசன் பல்வேறு லீலைகள் புரிந்ததுண்டு. அப்படி ஈசன் திருவிளையாடல் புரியும் ஓர் அற்புதமான வாழ்வைப் பெற்றவர், ஏயர்கோன் கலிக்காம நாயனார். இவர், மானக்கஞ்சாறனாரது மருமகன். ஈசனுக்குத் திருப்பணிகள் செய்துவந்தவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தில் வாழ்ந்தவர்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஈசனிடம் தோழமையோடு பழகியவர். அவர், பரவைநாச்சியாரிடத்தில் தூது செல்லுமாறு ஈசனை வேண்ட, ஈசனும் அவ்வாறே சென்றார். இதுகுறித்துக் கேள்விப்பட்ட ஏயர்கோன் கலிக்காமர், மனம் வருந்தினார்.
அவ்வாறு ஒரு மானிடன் பெண்ணாசை கொண்டு வேண்டுவான் என்றால் அதையும் ஈசன் கேட்கலாமா... இது என்ன அநியாயம்... நான்முகன் முதலான தேவர்கள்கூட இதைச் செய்யலாம். முற்றும் முதல்வனான ஈசன் இதைச் செய்யலாமா...” என்று சொல்லி வருந்தினார்.
இதை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஈசனிடம் சென்று, ஏயர்கோனின் வருத்தத்தை நீக்கியருள வேண்டினார்.
தொண்டர்களின் சிறப்பைப் பாடுவதற்காக ஈசனின் பிம்பத்திலிருந்து அவதரித்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். ஏயர்கோன் நாயனார் இதை அறியவில்லை
. மேலும், பக்தி பாவத்தில் எதுவும் பிழையில்லை என்பதையும் ஏயர்கோனுக்கு உணர்த்த விரும்பினார் ஈசன். ஏயர்கோனுக்கு சூலை நோயைக் கொடுத்தார். சூலை நோய் ஏயர்கோனை வாட்டியது. அப்போது அவரிடம் சென்று, ‘உம் சூலை நோய் வன்தொண்டரின் தீர்த்தத்தினால் சுகமாகும்’ என்றார்.
இதைக் கேட்ட ஏயர்கோன், ‘ஈசனை இறைவன் என்று பாராது ஏவியவர் தரும் தீர்த்தத்தினால்
தான் இந்நோய் குணமாகும் என்றால் அந்நோய் குணமடையவே வேண்டாம்’ என்று வைராக்கியமாகக் கூறினார்.
சிவபெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் சென்று நிலைமையை எடுத்துச் சொல்ல,
அவர் ஏயர்கோனைக் காக்க அவர் இல்லம் தேடி வந்தார். இதைக் கேள்விப்பட்டதும் ஏயர்கோன், ‘மற்றவன் வந்து நீக்குதவற்கு முன்னால் என்னை நீங்கா சூலை நோயை என் உயிரை இழந்து அழிப்பேன்’ என்று வீரமாகச் சொல்லித் தன் வயிற்றை வாளால் கீறி உயிர்விட்டார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஏயர்கோன் இல்லத்துக்கு வந்து அந்தக் காட்சியைக் கண்டதும் அதிர்ந்து
போனார்.
‘ஓர் அடியவரின் மரணத்துக்கு நாம் காரணமாகி
விட்டோமே’ என்று வருந்தித் தானும் அந்த வாளினை எடுத்துத் தன்னை அறுத்துக்
கொள்ள முயன்றார்.
அப்போது சிவபெருமான் ஏயர்கோனை உயிரோடு எழுப்ப, அவர் ஓடிவந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கரத்தைப் பிடித்துக் காத்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பணிந்து மெய்சிலிர்த்தனர். பக்தியில் எதுவும் பிழையில்லை என்பதை இருவரும் உணர்ந்து ஈசனைப் பணிந்தனர்.
நாயன்மார்கள்
இத்தகைய சிறப்புகளை உடைய ஏயர்கோன் நாயனாரின் குருபூஜை தினம், ஆனி மாத ரேவதி நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
ஏயர்கோனை நினைத்து மனத்தால் தொழுது, திருநீறு அணிந்து சிவபெருமானைத் தொழ நோய்கள் நீங்குவதோடு, சிவனருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
அடியார்களுக்கு அடியேன்
திருச்சிற்றம்பலம்
தில்லையம்பலம்
அம்மையப்பன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அரிஜனராக பிறந்து, பார்ப்பான் என கோஷமிடாமல் இருந்ததால் இன்று ஒரு தலித் சாதிய கட்சியிலும் இவர் படம் இல்லை, ஊரை அடித்து தன் ஏழு பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் மந்திரிகள் இருக்கும் நம் தமிழகத்தில், சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன "உயர் திரு கக்கன் ....
தமிழக அரசியல் வரலாற்றில் உயர் திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம்....
கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.
விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது,
சந்திரபாபு நாயுடு ஊடகத்தின் முன் கண்ணீர் விட்டு அழுத போதும், நேற்று உத்தவ் தாக்கரே என் மக்களே என்னை ஏமாற்றி விட்டார்கள் என நிலை குலைந்த போதும் கிஞ்சித்தும் அவர்கள் மீது பரிதாபமோ, இரக்கமோ வரவில்லை. காரணம், மோடி என்ற தனி மனிதன் மீது அவர்கள் கக்கிய வன்மம்,
அவச்சொற்கள் எண்ணிலடங்காதவை. மோடியின் பெயரால் வென்று பிறகு மோடியையே அவர்கள் பேசிய வார்த்தைகள் நம்பிக்கை துரோகத்தின் உச்ச நிலை.
ஏனோ அச்சமயங்களில் நமக்கான நேரம் வரும் காத்திருக்கலாம் என ஒரு விளிம்புநிலை பா.ஜ.க தொண்டராக நாம் அடக்கிய ஆற்றாமை,
இன்று பீரிட்டு “இவர்களுக்கெல்லாம் இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என தோன்றுகிறது. நாமே தனிப்பட்ட முறையில் இவர்களை பழி தீர்த்தது போன்ற எண்ணம் வருகிறது..
நல்லவர்களுக்கு, நமக்கு ஒரு போதும் கெடுதல் எண்ணாதவர்களுக்கு,
வேட்டையாட சென்றான், ஒரு யானை எதிர்பட்டது, பெருத்த வேட்டை கிடைத்தது என்று மகிழ்ந்த நாகன் ஒரு வழியாக யானையை கொன்று கீழே தள்ளினான்.
வேட்டை மும்முரத்தில் தன் காலடியின் கீழிருந்த சிறு புற்று ஒன்றை மிதித்துவிட்டான் நாகன்.
புற்றிலிருந்து வெளிப்பட்ட பாம்பு நாகனின் காலை கடித்தது. கையிலிருந்த வில்லால் பாம்பின் தலையில் ஓங்கி அடித்துவிட்டு நாகன் கீழே விழுந்து இறந்தான் அடிபட்ட பாம்பும் இறந்தது
சற்று நேரம் கழித்து அந்த பக்கமாக ஒரு நரி வந்தது.
அதன் கண்ணில் இறந்து கிடந்த யானை, நாகன், பாம்பு மூன்றும் தெரிந்தன.
நரிக்கு மகிழ்ச்சி தாளவில்லை, யானையை ஆறு மாதம் வைத்து தின்னலாம், மனிதனை ஏழுநாள் வைத்து தின்னலாம், பாம்பை ஒரு நாள் வைத்து திண்ணலாம் என்று நினைத்தது