அரிஜனராக பிறந்து, பார்ப்பான் என கோஷமிடாமல் இருந்ததால் இன்று ஒரு தலித் சாதிய கட்சியிலும் இவர் படம் இல்லை, ஊரை அடித்து தன் ஏழு பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் மந்திரிகள் இருக்கும் நம் தமிழகத்தில், சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன "உயர் திரு கக்கன் ....
தமிழக அரசியல் வரலாற்றில் உயர் திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம்....
கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.
விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது,
காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது...
கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம்
தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார்.
தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.
கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார்.
ராமசாமி தனது சுயமரியாதை எனும் ஏமாற்று இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான ராமரை உருவபடம் அவமதிக்கும் போராட்டத்தை அறிவித்தபொழுது,
கக்கன் அதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்....
கக்கன் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர் ஆவர்.
அவர் இந்து இயக்கங்களின் தீவிர ஆதரவாளார் என்பது கூடுதல் தகவல் ...
இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.
விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்ட அவர் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு,
முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர்.
சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம்,
‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்... நினைவு திரும்பாமல் யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.
கக்கனை அரசியலுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் வைத்தியநாதய்யர். அதை உயர்ந்தநிலையை அடைந்தபோதும் கக்கன் மறக்கவில்லை.
கக்கன் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது 1955- ம் ஆண்டு வைத்தியநாதய்யர் இறந்தார். தகவலறிந்து உடனே மதுரை கிளம்பினார் கக்கன். அவரது உறவினர்களுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இறுதிச்சடங்கு செய்யும் நேரம் நெருங்கியது. வைத்தியநாதய்யரின் குழந்தைகளோடு
கக்கனும் மொட்டையடித்து கொள்ளி வைக்க தயாரானார். இதனைக்கண்ட ஐயரின் உறவினர்கள் எதிர்த்தனர்.
"இது முறையல்ல" என ஐயரின் பிள்ளைகளை அழைத்துப் பேசினார்கள். ஆனால் அவர்களோ, "நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். அவருக்கும் உரிமை இருக்கிறது" என்றனர்.
கக்கன் "இன்று நான் போட்டிருக்கும் கதராடை, இந்த உடல், இந்த பதவி எல்லாமே ஐயர் எனக்குத் தந்தது. நான் இன்றைக்கு மனிதனாக மதிக்கப்படுவதே அவர் காட்டிய மாந்தநேயம் தான். அத்தகைய ஐயருக்கு நான் இறுதி சடங்கு செய்யவில்லையென்றால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை.." என்றார்.
இவரின் நேர்மைக்கு ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம்...
அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு..
1968-ல நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். தேர்தல் பொறுப்பாளர் கக்கன். தேர்தல் முடிந்து நானும் தேர்தலுக்குக் கொடுத்த பணத்தை கணக்கு பார்த்தபோது
நானூறு ரூபாய் குறைந்தது. கக்கனுக்கு தாங்கமுடியாத வருத்தம். நணபர்கள் என்னவெல்லாமோ சமாதானம் சொன்ன போதும் மனம் ஒப்பவில்லை அவருக்கு ... நண்பரை அனுப்பி அவரது மனைவி கையில் கிடந்த இரண்டு வளையல்களை வாங்கி வித்துட்டு வரச்சொன்னார். அப்போதும் நானூறு ரூபாய் தேறல்ல.
வேறும் சில பொருட்களை விற்று நானூறு ரூபாய் தேத்திட்டாரு. பின்னர் சென்னைக்குப் போய் கட்சி பொருளாளரிடம் கணக்கை ஒப்படைத்து விட்டு . "கணக்கை ஒப்படைச்சிட்டேன்" என இவர் காமராசரிடம் போய் சொல்ல அவருக்கு கடுமையான கோபம் வந்தது. "யாரு உன்கிட்ட கணக்கு கேட்டா.." என சத்தம் போட்டாரு.
"அது தானே முறை" என்றார் கக்கன்.
"நீங்க யாருன் எனக்குத் தெரியும் அது தான் தேர்தல் பொறுப்பை உங்கிட்ட ஒப்படைச்சேன்"ன்னாரு. அப்போது கூட மனைவி நகைகளை விற்று கணக்கை சரி செய்ததை கக்கன் சொல்லல்ல...
அது தாங்க கக்கன்" ...
பெருந்தலைவர் காமராஜர் தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்…
அவர்களில் ஒருவர் கக்கன்…
இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்…
போலீஸ்
பொதுப்பணி
விவசாயம்
சிறுபாசனம்
கால்நடை_பராமரிப்பு
உள்துறை
சிறைத்துறை
நிதி
கல்வி
தொழிலாளர்_நலம்
மற்றும்
மதுவிலக்கு…
இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் ..
பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போதும், வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்....
கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து,
மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க…
‘குறை சொல்ல முடியாத மனிதர்...,
’
என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயர்.....
மகான் 🙏🙏
நன்றி கு பண்பரசு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சந்திரபாபு நாயுடு ஊடகத்தின் முன் கண்ணீர் விட்டு அழுத போதும், நேற்று உத்தவ் தாக்கரே என் மக்களே என்னை ஏமாற்றி விட்டார்கள் என நிலை குலைந்த போதும் கிஞ்சித்தும் அவர்கள் மீது பரிதாபமோ, இரக்கமோ வரவில்லை. காரணம், மோடி என்ற தனி மனிதன் மீது அவர்கள் கக்கிய வன்மம்,
அவச்சொற்கள் எண்ணிலடங்காதவை. மோடியின் பெயரால் வென்று பிறகு மோடியையே அவர்கள் பேசிய வார்த்தைகள் நம்பிக்கை துரோகத்தின் உச்ச நிலை.
ஏனோ அச்சமயங்களில் நமக்கான நேரம் வரும் காத்திருக்கலாம் என ஒரு விளிம்புநிலை பா.ஜ.க தொண்டராக நாம் அடக்கிய ஆற்றாமை,
இன்று பீரிட்டு “இவர்களுக்கெல்லாம் இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என தோன்றுகிறது. நாமே தனிப்பட்ட முறையில் இவர்களை பழி தீர்த்தது போன்ற எண்ணம் வருகிறது..
நல்லவர்களுக்கு, நமக்கு ஒரு போதும் கெடுதல் எண்ணாதவர்களுக்கு,
`தோழமை பாவமா... பக்தி வைராக்கியமா...' -நோய் தீர்க்கும் ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை
சைலபதி
ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை தினம்!
சிவபெருமான், பக்தர்களின் மனத்தில் வாசம் செய்பவர்.
அவர்கள் தன்னை எப்படித் துதிக்கிறார்களோ அப்படியே அருள்பவர். நாயகன் நாயகி பாவம், ஆண்டான் அடிமை பாவம், தோழமை பாவம் என ஈசன் எந்த பாவத்தில் நினைத்தாலும் அப்படியே அருள்பாலிப்பவர். ஈசனைப் பொறுத்தவரை இவற்றில் எது ஒன்றும் உயர்ந்ததும் இல்லை தாழ்ந்ததும் இல்லை.
இதை உணர்த்த ஈசன் பல்வேறு லீலைகள் புரிந்ததுண்டு. அப்படி ஈசன் திருவிளையாடல் புரியும் ஓர் அற்புதமான வாழ்வைப் பெற்றவர், ஏயர்கோன் கலிக்காம நாயனார். இவர், மானக்கஞ்சாறனாரது மருமகன். ஈசனுக்குத் திருப்பணிகள் செய்துவந்தவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தில் வாழ்ந்தவர்.
வேட்டையாட சென்றான், ஒரு யானை எதிர்பட்டது, பெருத்த வேட்டை கிடைத்தது என்று மகிழ்ந்த நாகன் ஒரு வழியாக யானையை கொன்று கீழே தள்ளினான்.
வேட்டை மும்முரத்தில் தன் காலடியின் கீழிருந்த சிறு புற்று ஒன்றை மிதித்துவிட்டான் நாகன்.
புற்றிலிருந்து வெளிப்பட்ட பாம்பு நாகனின் காலை கடித்தது. கையிலிருந்த வில்லால் பாம்பின் தலையில் ஓங்கி அடித்துவிட்டு நாகன் கீழே விழுந்து இறந்தான் அடிபட்ட பாம்பும் இறந்தது
சற்று நேரம் கழித்து அந்த பக்கமாக ஒரு நரி வந்தது.
அதன் கண்ணில் இறந்து கிடந்த யானை, நாகன், பாம்பு மூன்றும் தெரிந்தன.
நரிக்கு மகிழ்ச்சி தாளவில்லை, யானையை ஆறு மாதம் வைத்து தின்னலாம், மனிதனை ஏழுநாள் வைத்து தின்னலாம், பாம்பை ஒரு நாள் வைத்து திண்ணலாம் என்று நினைத்தது