4. தேர்தல் ஆணையத்திற்கு இந்த திருத்தப்பட்ட பைலாவை அனுப்ப கொடுக்கப்பட்டுள்ள Covering Letter-ல் ஓ.பி.எஸ் & ஈ.பி.எஸ் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் என கையெழுத்திட்டுள்ளனர். #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
5. 01.12.2021ல் ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது என்று செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
7. டிசம்பர் 1, 2021 செயற்குழு தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க ஜூன் 23, 2022ல் பொதுக்குழு கூடுகிறது. அதில் செயற்குழு தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து Status Quo படி 01.12.2021க்கு முன்பு இருந்த நிலை தொடர்கிறது. #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
Which means @OfficeOfOPS & @EPSTamilNadu are still the Coordinator & Joint Coordinator of the AIADMK as they were elected by the GC on 12.09.2017. இதன் 5 ஆண்டு காலம் முடிவு என்பது 12.09.2022 அன்று தான் என்கிறது அதிமுகவின் பைலா. #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
அடுத்ததாக அவைத் தலைவருக்கு பொதுக்குழு அறிவிப்பை வெளியிட அதிகாரம் உள்ளதா ? எனில், "GC shall be presided over by the Chairman & shall be convened by the Co-ordinator and the Joint Coordinator" என்கிறது அதிமுகவின் பைலா. #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
மேலும் ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தால், இருவரும் சேர்ந்தே 30 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றே அதிமுக பைலா சொல்கிறது. #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அவர்கள் சொல்வது போல, 1/5 உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால், யாரும்/அவைத் தலைவர் கூட்டலாம் என பைலாவில் கூறவில்லை. பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் Coordinator & Joint Coordinator ஆகியோருக்கு மட்டுமே உண்டு. #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
பொதுக்குழுவை தலைமை தாங்கி நடத்த மட்டுமே அவைத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. Shall be Convened - கூட்டுதல், Shall be Presided over - தலைமை தாங்கி நடத்துவது... Very Simple.. #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
12.09.2022க்கு பின் புது Coordinator & Joint Coordinator தேர்வாகும் வரை, (அதாவது தேர்தல் நடக்கும் வரை இடைக்கால முதல்வர் இருப்பது போல) OPS & EPS ஆகியோர் தங்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலேயே தொடர்வார்கள். #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
அதற்கு முன்னதாக தேர்வு செய்ய பொதுக்குழு விரும்பினால், ஒன்றில் 5 பங்கு உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு சிறப்பு கூட்டம் கூட்ட கோரிக்கை வைக்க வேண்டும். இருவரிடமும்.. யாரேனும் ஒருவரிடம் இல்லை.. #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
அப்படி கோரிக்கை வைக்கப்பட்ட நாளில் இருந்து, 30 நாட்களுக்குள் இருவரும் சேர்ந்து பொதுக்குழு நடத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும். இங்கும் இருவரும் இணைந்து... யாரேனும் ஒருவர் இல்லை.. #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
23.12.2016ல் தலைமைக் கழக நிர்வாகிகள் & மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் இல்லாததால், தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கேட்டபடி, அவைத் தலைவர் 29.12.2016ல் பொதுக்குழுவை கூட்டினார். #AIADMK#OPanneerselvam#EdappaadiPalaniswami
அதைத் தொடர்ந்து 29.12.2016 அன்று "சின்னம்மா" (எ) சசிகலா அம்மையாரை பொதுச் செயலாளராக பொதுக்குழு தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து 14.02.2017ல் அவர் பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. டிடிவி தினகரன் துணை பொதுச் செயலாளரானார். #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
தினகரன் உடனான உரசலால், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியுடன், அதிமுக அம்மா அணியில் உள்ள தினகரனை தவிர்த்து, மற்ற அனைவரும் இணைய முடிவெடுத்தனர். இதைத் தொடர்ந்து, இரு அணிகளின் நிர்வாகிகளும் அவைத் தலைவராக மதுசூதனன் அவர்களை ஏற்றனர். #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
அதைத் தொடர்ந்து 29.12.2016 போல, செயல்பட முடியாத பொதுச் செயலாளர் மற்றும் துணை பொதுச் செயலாளருக்கு பதில், 12.09.2017ல் அவைத் தலைவர் தலைமையில் பொதுக்குழு கூட முடிவாகிறது. இதையடுத்து தான் சசிகலா பதவியில் இருந்து நீக்கப்பட்டார். #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
தற்போதைய நிலையில் Coordinator & Joint Coordinator என இருவரும் உள்ளதால், மீண்டும் 2016 & 2017 போல பொதுக்குழு கூட்ட முடியுமா ? என்பதே சட்ட சிக்கல். அது தெளிவானால், முடிவு தெரிந்துவிடும். அதற்கு தான் இரு தரப்பும் நீதிமன்றம் சென்றுள்ளன. #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
சி.வி சண்முகம் சொன்னதை நீதிமன்றம் ஏற்றால், ஈ.பி.எஸ் ஒற்றை தலைவராக வருவார். அதை நீதிமன்றம் ஏற்க மறுத்தால், அவைத் தலைவர் தேர்வு கூட கேள்விக்குறி ஆகும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். #AIADMK#OPanneerselvam#EdappadiPalaniswami
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கேளராவில் பெரிய கூட்டணி இல்லாமல், 1% வாக்கு வங்கி உள்ள BDJS-ஐ மட்டும் உடன் வைத்துக்கொண்டு 13% வாக்குகளை பாஜகவால் முடியும் எனில், அதே போன்றதொரு effort தமிழகத்திலும் தேவை. 2006ல் 4.75%-ல் இருந்து 2021ல் 13%-ஆக வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. மெதுவாக தான் வளர முடியும். #BJP#TamilNadu
திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று தேர்தல் அறிவிக்கப்படும் வரை கூறிவிட்டு, தேர்தலின் போது அவர்களுடனேயே கூட்டணி வைத்தால், மக்களுக்கு நம்பிக்கை எல்லாம் வராது. #BJP#TamilNadu
மத்திய அரசின் திட்டங்களை, தனது திட்டமாக மாநில அரசு claim செய்யும் போது, அதிமுகவாக இருந்தால் ஒருவிதமான அணுகுமுறை, திமுகவாக இருந்தால் ஒருவிதமான அணுகுமுறை கடைபிடிக்கப்படுகிறது. அது பாஜகவை ஓரு காலத்திலும் தமிழகத்தில் வளர விடாது. #BJP#TamilNadu