#30YearsofAnnaamalai போஸ்டுகள பாக்கும்போது ஒரு பழைய போஸ்ட் நியாபகம் வந்துச்சி.. யார் எழுதினது னு கூட நினைவில இல்ல… ஆனா save பண்ணி வச்சிருந்தேன்❣️Shared👇

///‘அண்ணாமலை ஏன் இத்தனை பிடித்திருக்கிறது?’ என்பதற்கு அப்பாவிடம் எப்போதுமே பதில் இருப்பதில்லை. எத்தனைமுறை தொலைக்காட்சியில் Image
ஒளிபரப்பினாலும் சலிக்காமல் ஓடி வந்து உட்கார்ந்துகொள்வார். இதில் விசித்திரம் என்னவெனில் ரஜினிக்காகவோ கதைக்காகவோ அவர் இதுவரை அண்ணாமலையை சிலாகித்ததே இல்லை. ஆனால் வெறித்தனமாய் பிடித்த படம் என்றால் எப்போதுமே அவர் ஓட்டு அந்த பால்காரனுக்குத்தான்.

அப்படி என்னதான் இருக்கிறது
அந்தப் படத்தில்?
ரஜினி-குஷ்புவா? ரஜினி-சரத்பாபுவா?

ம்ஹும்.ஒரு காட்சி,ஒரே ஒரு காட்சிக்காகத்தான் படம் முழுக்க காத்திருப்பார்
"யூட்யூப்ல அதை மட்டும் எடுத்துத்தரவா?"என்றால் தீர்க்கமாய் மறுத்துவிட்டு, "பிடிச்ச விஷயத்துக்காக காத்துக்கிடக்கறதுல எதுக்கு சோம்பேறித்தனப்படணும்?" என்பார்.
அப்படியென்ன பொல்லாத காட்சி என்கிறீர்கள் தானே?

படம் ஆரம்பித்து மிகச்சரியாய் இரண்டு மணிநேரங்கள் கடந்து 25வது நிமிடம்..

”அண்ணாமல.. அண்ணாமல.. நீ போட்ட சபதத்துல ஜெயிச்சுட்ட, அசோக்கோட வீட்டுப்பத்திரம் இப்ப நம்ம கைக்கு வந்துடுச்சு. இப்ப சொல்லு, உன்னையும் உன்
குடும்பத்தையும் நடுத்தெருவுல நிறுத்துன அசோக்கையும் அவன் குடும்பத்தையும் நடுத்தெருவுல நிறுத்தி, புல்டவுசர வச்சு அவன் வீட்டையே இடிச்சு தரமட்டமாக்குறேன். சொல்லு..”

யெஸ், அதே காட்சி தான். படத்தின் மொத்த உயிரும் அந்தப்புள்ளியில் தான் குடிகொண்டிருக்கும். ரஜினி, தனக்கு நடந்த கொடுமைகளை
நினைத்தவாறே மாடிப்படியிலிருந்து மெதுவாய் இறங்கி வர, இங்கு அப்பா தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வார்.

”இந்துமா, இந்த சீன்ல மனோரமாவைத் தவிர வேற யாரையும் கவனிக்காத”

சரியென்பதாய் திரையை கவனித்தேன்.

மாடிப்படியிலிருந்து இறங்கிவரும் ரஜினி, பத்திரத்தை வாங்கியபடி, ஒவ்வொருவராக பார்ப்பார்.
மனோரமா

ஜனகராஜ்,

குஷ்பு

என அந்த வரிசை இருக்கும். அதில் மனோரமாவின் முகத்தில் மட்டும் அட்சுரசுத்தமாய் தனியொரு கவலை ரேகை படர்ந்திருக்கும். மகன் என்ன சொல்லப்போகிறானோ என்கிற பரிதவிப்போடு, மனோரமா அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க, மூவரையும் தாண்டி நாலடி எடுத்துவைத்துவிட்டு,
”அம்மா..” என்று அழைப்பார் ரஜினி.

சட்டென, ”என்னப்பா..” என்று பதறியபடியே ஒரு ஓட்டம் ஓடிவருவாள் பாருங்களேன். நாடி, நரம்பு, ரத்தம் என அத்தனையிலும் நடிப்பு ஊறிப்போன ஒருவளால் தான் அதைச் செய்ய முடியும்.

'இதை கொண்டு போய் அசோக் கிட்ட கொடுத்திடுங்க' என்று ரஜினி சொல்லி முடித்ததும், தன்
முகம் முழுக்க பூரிப்புடன் கண்ணீர் வழியச்செய்வாள். ஒரு பெரும் பகைக்குப் பிறகான மன்னிப்பு கொணரும் ஆத்ம திருப்தியை, ஜஸ்ட் லைக் தட் வெளிப்படுத்தும் கண்ணீர் அது.

அப்பா பக்கம் திரும்பினேன். அவர் ஏற்கனவே என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

”செம்ம நடிப்பு, இல்லப்பா!” Image
”ம் ஆனா அதைவிட,பழிவாங்க கையில கிடைச்ச ஆயுதத்தை, அசால்ட்டா தூக்கிப்போட்டுட்டு மன்னிச்சுட்டேன் போ'னு சொல்றது எவ்ளோ பெரிய நிம்மதி தெரியுமா?அந்த சீன்ல மனோரமாவைப் பார்க்காத, மனோரமா கண் வழியா அந்த சூழ்நிலையை,அந்த நிம்மதியைப் பாரு.மொத்த பதட்டமும் தலைக்குள்ளருந்து சட்டுனு இறங்குறதை உணருவ

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சினிமாபுரம்💜

சினிமாபுரம்💜 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @cinemapuram

Apr 13
#Beast : ஒரு கமர்சியல் படமா ரொம்ப பிடிச்சிருந்தாலும்.. படத்துல காண்பித்த சில விஷயங்கள் உறுத்திட்டே இருக்கு.. விஜய் ரசிகர் ஆக இருந்தாலும் இதை பதிவு செய்வது தான் சரி னு பட்டுச்சு.. அதுக்கு தான் இந்த பதிவு Image
சில நாட்களுக்கு முன் வந்த மாநாடு படம் ரொம்ப பிடிக்க காரணம்.ரொம்ப நாட்களுக்கு பிறகு முஸ்லீம் கம்யூனிட்டியை positive ஆக காமிதிருப்பார் VP.அப்பாடா தமிழ் சினிமாவிற்கு ரொம்ப தேவையான மாற்றம் கடைசியில் கிடைத்தே விட்டது என்று சந்தோசம் அடைவதற்குள்.இந்த பீஸ்ட்ல மறுபடியும் தீவிரவாதி முகம்😭 Image
இசுலாமிய வெறுப்புன்றது ரொம்ப அரத பழைய கான்செப்ட்டா சினிமாவுக்கு வேணா இருக்கலாம் ஆனா இன்னிக்கி வாடகைக்கு வீடு பாக்குறதுல இருந்து வேலைக்கு சேருற வரை ஒரு சாதாரண இசுலாமியர்கள் எத்தனை இன்னல்களை மறைமுகமா அனுபவிக்கிறது ஒரு பக்கம் இருக்க நேரடியாவே இன்னிக்கி இந்துத்துவா சக்திகள் Image
Read 7 tweets
Apr 4
The UNDERTAKER
இந்த பேர் தெரியாத 90's KID ஏ இல்ல.
WWE ன் உயரிய விருதானா HALL OF FAME அவருக்கு வழங்கபட்டிருக்கு.
UNDERTAKER அழுது உலகமே பார்த்த மேடை அது.

என்னோட உண்மையான பேரு Mark Calaway ன்னு நிறைய பேருக்கு தெரியாது.
வெள்ளரிக்காய பாத்தா கூட பயபடுற என்ன UNDERTAKER ஆ மாத்தினது
vince mcmahon..

எனக்கு Tatoo குத்துறதே பிடிக்காது ஆன கை முழுக்க Tatoo போட சொன்னவன் Triple -H அதான் UNDERTAKER ஓட அடையாளமா ஆச்சி..

49 முறை எனக்கு அறுவைசிகிச்சை நடந்துருக்கு இந்த Dead Man அ பிழைக்க வச்ச என்னோட Doctor's க்கு என் நன்றிய சொல்லிக்கிறேன்..
UNDERTAKER னா அது Paul Bearer தான் நான் எப்படி நடக்கனும் பேசனும்னும்னு TAKER அ உருவாக்கினது அவர் தான், இப்போ அவர் என்னோட இல்ல ,
என்ன Dad Man ன்னு சொன்ன என் சக கலைஞர்கள பலர் இப்போ என்னோட இல்ல...

ஒரு முக்கியமான ஆள் இருக்கான் என் தம்பி KANE என்னோட இத்தனை வருஷம் சகோதரனான, தோழனா,
Read 5 tweets
Apr 2
பங்குனி வெயில் பல்ல காட்டிட்டு அடிக்குது, கூலிங் க்ளாஸ் போடாம வெளிய போனா, ரெண்டு கண்ணும் அவிஞ்சு போயிடும் போலன்னு போற ஆளா நீங்க..... அப்போ நீங்க கண்டிப்பா இவரை பத்தி தெரிஞ்சுக்கனும்.
ரொம்ப பெரிய ஆள் எல்லாம் இல்ல, 1935வது வருஷம் பார்லெட்டான்னு தெற்கு இத்தாலில ஒரு கிராமத்துல பொறந்த மனுஷன். அந்த கிராமத்துலயே மிக வறுமையான குடும்பம் அண்ணனோடதுதான், இருக்கற பிரச்சனை பத்தாதுன்னு இவரு வயித்தில 5 மாசமா இருக்கும்போதே இவங்க அப்போ வேற இறந்துட்டார்.
கடுமையான வறுமை,அம்மா மட்டுமே தனியா கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசுல ஒரே ஒரு நேரம் மட்டும் பார்லி கஞ்சி குடிக்கற அளவு தான் வாழ்க்கை.
ஒரு காலத்துல அந்த ஒரு நேர சோத்துக்கும் சிங்கி பாட, மகனாவது நல்லா இருக்கட்டும்னு,7 வயசே ஆன பையனை கூட்டிட்டு போய் அனாதை ஆசரமத்தில சேத்தி விட்டுட்டாங்க.
Read 21 tweets
Aug 27, 2021
கோவையிலிருந்து ஈரோடு சென்று கொண்டிருந்தது பேருந்து..

லட்சுமி மில் அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம்,

“கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”
என்று கேட்டார்.

“கருமத்தம்பட்டியா? அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா”

“சரி”

KMCH வந்தது.

சார்.. கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”

“அட.. இன்னும் இல்லைம்மா”

சின்னியம்பாளையம் தாண்டியது.

“கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”

“ஐயோ அம்மா..
உங்க இம்சை தாங்கலை.

பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. கருமத்தம்பட்டி வந்தா நானே சொல்றேன்”

“சரி”

அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார்.
பேருந்து அவினாசியை தாண்டிக் கொண்டிருந்தது.

“கண்டக்டர் சார்... கருமத்தம்பட்டி வந்திடுச்சா?” -

தூங்கி எழுந்த அந்தம்மா கேட்டார்.

கண்டக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“ஐயையோ.. நான் மறந்திட்டேனே.
நீ ஏம்மா தூங்கின?” பழியை அந்தம்மா மீது தூக்கிப் போட்டார் கண்டக்டர்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(