சினிமாபுரம்💜 Profile picture
பகுத்தறிவு 🖤 Cinema 🎞️ Coffee☕ Photography 📷 Travel 🏕️ Fitness🏃◾திராவிட_மாடல் ◾ Check my works at #Balaviews
Aug 1, 2023 17 tweets 3 min read
மேன் மக்கள்..!! மேன் மக்களே..!!

இன்று எனது காரை சர்வீஸ் செய்ய கொடுத்து இருந்தேன்.திடிரென அவசரமாக ஊருக்கு கிளம்ப‌ வேண்டிய சூழல். ஆபிஸ் வேலை நீண்டு கொண்டே இருந்தது , வேலை முடிந்து திரும்பி பார்க்கையில் மணி இரவு 11.15..OLA Auto போட்டால் கேன்சல் செய்துகொண்டே இருந்தார்கள். வேறு Image வழியில்லாமல் வெளியே‌ வந்து ஆட்டோவிற்காக காத்திருந்த போது கோயம்பேட்டிற்கு ஒரு ஆட்டோகார புண்ணியவான் நுங்கம்பாக்கத்தில் இருந்து 500ரூ கேட்டார். யாரும் 400ரூபாய்க்கு குறைவாக வரவில்லை. சரி பார்க்கலாம் என்று நின்று கொண்டு இருந்தபோது மெதுவாக ஒரு ஆட்டோ வந்து என் அருகில் நின்றது . ❤️
Feb 14, 2023 5 tweets 1 min read
கடைசி வரை காதலை சொல்லாமலே இருக்கிறது, வேற யாருக்காவது கல்யாணம் பண்ணி வச்சுட்டா தற்கொலை பண்ணிக்கிறது, காதலுக்காக நாக்கை வெட்டிக்கிறது, காதலியை அவள் விரும்பும் பையனோட சேத்து வைக்கிறது, வீட்டில் பெத்தவங்களுக்கு புடிக்கலைன்னு காதலர்கள் பிரியுறது ........... இப்படி எத்தனையோ விதமா காதலை தமிழ் சினிமா கொண்டாட தவறியதில்லை .

இன்றைய இளைஞர்களுக்கு தகுந்த மாதிரி காதலனுக்கு பல தவறான பழக்கங்கள் இருந்தாலும், இருவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட காதல் அனுபவம் இருந்தாலும் இவ்வளவு மோசமான சூழலிலும் காதல் எப்படி இவர்களை இணைக்கிறது என்பதை சொல்லி வெற்றி பெற்ற படம்.
Feb 14, 2023 10 tweets 2 min read
சும்மா படித்து தெரிந்து கொள்ளுங்கள் , இதனால் எதுவும் மாறப்போவதில்லை 😪
ஒரு லட்ச ரூபாய்க்கு நிலம் வாங்குகிறீர்கள்.பின்னர் அங்கு தங்கம் இருப்பதாக உள்ளூர் மக்களை நம்ப வைப்பது.
இடத்தின் விலை மிகவும் ஏறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் நிலத்தை விற்கவில்லை ஆனால் அதன் பங்குகள் பலருக்கு விற்க தயாராக உள்ளது என்று கூறுவது.
பின்னர் ஒரு லட்சத்திற்கு பதிலாக ஒரு கோடி மதிப்பை நிர்ணயித்து நாற்பது சதவீத பங்குகளை மக்களுக்கு விற்கிறீர்கள். உங்களுக்கு அறுபது, எடுத்தவர்களுக்கு நாற்பது பங்கு.
ஒரு லட்சம் செலவழித்து விட்டு இப்போது உங்களிடம் இருப்பது காகிதத்தில் அறுபது லட்சம்.
Feb 12, 2023 5 tweets 3 min read
#DADA : பெரும்பாலும் Action, Thriller, Horror னு மட்டும் பார்த்துட்டு இருந்துட்டு.. ரொம்ப நாள் கழிச்சு ஒரு feel good entertainer film💖 படம் ஆரம்பம் முதல் climax வரைக்கும் bore அடிக்கல.. கண்டிப்பா தியேட்டர் ல பார்க்கலாம். Image @Kavin_m_0431 's character can easily relate with current generation youngsters and he done his role superb 👌👌👌
@aparnaDasss இவங்களும் நல்லா செஞ்சிருக்காங்க👌 ImageImageImage
Nov 8, 2022 12 tweets 3 min read
“As a kid, I felt ashamed of my father. He worked at a small shop on the side of the road, fixing people's gas stoves and cookers. We lived in Supaul, a small town in Bihar. All we had was a kacha house, and a mitti ka angaan outside. And we ate the same thing most of the Image days–roti, onions, and achaar.
Amma sewed clothes to help our family sustain. I wore Bhaiyya’s old clothes to school and wrote in my same old notebook every year, while other kids got fancy new Navneet books. I’d be mortified.
At 10, I was asked to write an essay on ‘family’.
Oct 7, 2022 11 tweets 2 min read
படத்தின் ஒரு காட்சியில்,

வாத்தியார் தன் வீட்டை கூட்டி பெருக்கிக் கொண்டிருப்பார்.அந்த ஊரில் ஆண்கள் வீடு கூட்டுவதை முதல் முறையாக பார்க்கும் அந்த சிறுவர் சிறுமியர்கள் வித்தியாசமாகவும் ஆச்சரியத்துடன் அதைப் பார்த்து சிரித்து கொண்டிருப்பார்கள்.
அவர் வானொலியில் வாங்க மச்சா வாங்க வந்த வழிய பாத்துப்போங்க..ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்பிடி பாக்கறீங்க என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

வாத்தியார் திரும்பி அவர்களை பார்த்ததும் அனைவரும் ஓடி விடுவார்கள்..

ஒரு சிறுமி மட்டும் நின்று கொண்டிருப்பாள்.

வாத்தியார் அவளிடம் ஏன் நீங்க மட்டும் ஓடலையா என்று கேட்டதும்,

அவள்,
Sep 29, 2022 8 tweets 3 min read
பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம். இதைவிட சுருக்கவே முடியாதுங்கிற அளவுக்கான சுருக்கம். இது பேசிக். இதை படிச்சீங்கன்னா இன்னும் நல்லா படம் புரியும்.
#PonniyinSelvan Image 1. வந்தியத்தேவன், இளவரசர் ஆதித்த கரிகாலன் கொடுத்த ஒரு லெட்டரை கொடுக்க தஞ்சை வர்றான். வர்ற வழியில சிற்றரசர்கள் சிலர் அரசர் சுந்தர சோழருக்கு எதிரா ஒரு திட்டம் போடுறதை கண்டுபிடிக்கிறான். நடுவுல ஆழ்வார்க்கடியானை சந்திக்கிறான். Image
Aug 7, 2022 14 tweets 3 min read
#Steeplechase தெரியுமா, தடை தாண்டும் ஓட்டம் மாதிரியேதான்,ஆனா,அதை விட அதிக உயரம் கொண்ட தடைகளும்,3000 மீட்டர் தூரமும் ஒடனும்.

இந்தியர்கள் என்னைக்குமே பெருசா இந்த டிராக் & ஃபீல்டு பகுதில ஜெயிக்கறது இல்லை, குறிப்பா ஓட்ட பந்தயங்கள்.

அதுவும் இது மாதிரி தூரம் அதிகமாக இருக்கும் ஓட்ட பந்தய போட்டிகளில்,கென்யா, எத்தியோப்பியா வீரர்கள்கிட்ட வழக்கமாக ஓட்ட பந்தயங்களில் தொம்சம் பண்ற அமெரிக்கா, கனடா, ஜமைக்கா மாதிரி நாட்டுகாரங்க கூட நமக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கி போறது உண்டு.

நேத்து நடந்த காமன்வெல்த் ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் மொத்தம் 9 பேர்,3 கென்யா நாட்டுகாரங்க,
Aug 5, 2022 5 tweets 2 min read
சமீபத்தில் #VirumanAudioLaunch மற்றும் #VirumanTrailerLaunch நிகழ்ச்சியை Youtubeல பார்த்தேன்.இங்க வந்த ரசிகர்கள்(?)மாதிரி கேவலமான பிறவிகளை நான் பார்த்ததே இல்லை.இந்த பைத்தியக்காரங்களுக்காக மதுரை ல போய் நிகழ்ச்சியை வெச்சிருக்காங்க🤦இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்த மன்னிக்கவும் ImageImage ஆனா நிகழ்ச்சியை பார்திருந்தா உங்களுக்கே புரிந்து இருக்கும். கிறுக்கு *** மாதிரி யார் மேடையில் பேசுனாலும் Rolex Rolex னு கத்திட்டு இருக்கானுக. அந்த நடிகை இந்த படத்துல தான் அறிமுகம் ஆகறாங்க.. பயந்து பயந்து பேசிட்டு இருக்கு.. குறுக்க இந்த தற்குறிக பேச விடாம கத்திட்டே இருக்கானுக Image
Jun 30, 2022 11 tweets 6 min read
#30YearsofAnnaamalai போஸ்டுகள பாக்கும்போது ஒரு பழைய போஸ்ட் நியாபகம் வந்துச்சி.. யார் எழுதினது னு கூட நினைவில இல்ல… ஆனா save பண்ணி வச்சிருந்தேன்❣️Shared👇

///‘அண்ணாமலை ஏன் இத்தனை பிடித்திருக்கிறது?’ என்பதற்கு அப்பாவிடம் எப்போதுமே பதில் இருப்பதில்லை. எத்தனைமுறை தொலைக்காட்சியில் Image ஒளிபரப்பினாலும் சலிக்காமல் ஓடி வந்து உட்கார்ந்துகொள்வார். இதில் விசித்திரம் என்னவெனில் ரஜினிக்காகவோ கதைக்காகவோ அவர் இதுவரை அண்ணாமலையை சிலாகித்ததே இல்லை. ஆனால் வெறித்தனமாய் பிடித்த படம் என்றால் எப்போதுமே அவர் ஓட்டு அந்த பால்காரனுக்குத்தான்.

அப்படி என்னதான் இருக்கிறது
Apr 13, 2022 7 tweets 2 min read
#Beast : ஒரு கமர்சியல் படமா ரொம்ப பிடிச்சிருந்தாலும்.. படத்துல காண்பித்த சில விஷயங்கள் உறுத்திட்டே இருக்கு.. விஜய் ரசிகர் ஆக இருந்தாலும் இதை பதிவு செய்வது தான் சரி னு பட்டுச்சு.. அதுக்கு தான் இந்த பதிவு Image சில நாட்களுக்கு முன் வந்த மாநாடு படம் ரொம்ப பிடிக்க காரணம்.ரொம்ப நாட்களுக்கு பிறகு முஸ்லீம் கம்யூனிட்டியை positive ஆக காமிதிருப்பார் VP.அப்பாடா தமிழ் சினிமாவிற்கு ரொம்ப தேவையான மாற்றம் கடைசியில் கிடைத்தே விட்டது என்று சந்தோசம் அடைவதற்குள்.இந்த பீஸ்ட்ல மறுபடியும் தீவிரவாதி முகம்😭 Image
Apr 4, 2022 5 tweets 2 min read
The UNDERTAKER
இந்த பேர் தெரியாத 90's KID ஏ இல்ல.
WWE ன் உயரிய விருதானா HALL OF FAME அவருக்கு வழங்கபட்டிருக்கு.
UNDERTAKER அழுது உலகமே பார்த்த மேடை அது.

என்னோட உண்மையான பேரு Mark Calaway ன்னு நிறைய பேருக்கு தெரியாது.
வெள்ளரிக்காய பாத்தா கூட பயபடுற என்ன UNDERTAKER ஆ மாத்தினது vince mcmahon..

எனக்கு Tatoo குத்துறதே பிடிக்காது ஆன கை முழுக்க Tatoo போட சொன்னவன் Triple -H அதான் UNDERTAKER ஓட அடையாளமா ஆச்சி..

49 முறை எனக்கு அறுவைசிகிச்சை நடந்துருக்கு இந்த Dead Man அ பிழைக்க வச்ச என்னோட Doctor's க்கு என் நன்றிய சொல்லிக்கிறேன்..
Apr 2, 2022 21 tweets 8 min read
பங்குனி வெயில் பல்ல காட்டிட்டு அடிக்குது, கூலிங் க்ளாஸ் போடாம வெளிய போனா, ரெண்டு கண்ணும் அவிஞ்சு போயிடும் போலன்னு போற ஆளா நீங்க..... அப்போ நீங்க கண்டிப்பா இவரை பத்தி தெரிஞ்சுக்கனும். ரொம்ப பெரிய ஆள் எல்லாம் இல்ல, 1935வது வருஷம் பார்லெட்டான்னு தெற்கு இத்தாலில ஒரு கிராமத்துல பொறந்த மனுஷன். அந்த கிராமத்துலயே மிக வறுமையான குடும்பம் அண்ணனோடதுதான், இருக்கற பிரச்சனை பத்தாதுன்னு இவரு வயித்தில 5 மாசமா இருக்கும்போதே இவங்க அப்போ வேற இறந்துட்டார்.
Aug 27, 2021 6 tweets 1 min read
கோவையிலிருந்து ஈரோடு சென்று கொண்டிருந்தது பேருந்து..

லட்சுமி மில் அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம்,

“கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”
என்று கேட்டார்.

“கருமத்தம்பட்டியா? அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா”

“சரி”

KMCH வந்தது.

சார்.. கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”

“அட.. இன்னும் இல்லைம்மா”

சின்னியம்பாளையம் தாண்டியது.

“கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”

“ஐயோ அம்மா..
உங்க இம்சை தாங்கலை.

பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. கருமத்தம்பட்டி வந்தா நானே சொல்றேன்”

“சரி”

அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார்.